For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி இல்லாத இந்திய டீம்... ரஹானேவுக்கு பயங்கர நெருக்கடியை கொடுப்போம்... லாங்கர் அதிரடி

மெல்போர்ன் : கேப்டன் விராட் கோலி இல்லாத இந்திய அணியின் புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிற்கு பயங்கரமான நெருக்கடியை நாளைய போட்டியில் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணி நாளைய 2வது டெஸ்ட் போட்டியில் வலிமையான துவக்கத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்னுடைய அடுத்த ஆக்சனை பாருங்க.. தொடக்கமே அதிரடி.. இந்திய அணியில் நடக்கும் போகும் பெரிய மாற்றம்! என்னுடைய அடுத்த ஆக்சனை பாருங்க.. தொடக்கமே அதிரடி.. இந்திய அணியில் நடக்கும் போகும் பெரிய மாற்றம்!

மேலும் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் முகமது ஷமி இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் லாங்கர் கூறியுள்ளார்.

மெல்போர்னில் நாளை துவக்கம்

மெல்போர்னில் நாளை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதையடுத்து நாளை மெல்போர்னில் இரு அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் துவங்கவுள்ளது.

ரஹானே கேப்டன்

ரஹானே கேப்டன்

இந்த போட்டியில் குழந்தை பிறப்பிற்காக விடுப்பு எடுத்துள்ள கேப்டன் விராட் கோலி, காயம் காரணமாக முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அதிகமான அனுபவம் இல்லாத ரஹானே தலைமையின் கீழ் இந்திய அணி செயல்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சாதகம்

ஆஸ்திரேலியாவிற்கு சாதகம்

இந்நிலையில், கோலி மற்றும் ஷமி இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிற்கு அதிகமான நெருக்கடியை நாளைய போட்டியில் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலியா திட்டம்

நாளைய போட்டியில் வலிமையான துவக்கத்தை ஏற்படுத்த ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ஒரு அணியின் சிறப்பான வீரர்கள் இல்லாதபோது அந்த அணி பலவீனமாக மாறும் என்பதை மறுக்க முடியாது என்றும் தற்போதைய சூழலில் இந்தியா அந்த நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Friday, December 25, 2020, 11:10 [IST]
Other articles published on Dec 25, 2020
English summary
Whenever you take out best players of any cricket team, it weakens them -Lange
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X