For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காத்திருங்க... அடுத்த சில வாரத்துல கண்டிப்பா நடந்துடும்... நம்பிக்கையுடன் பேசிய மும்பை இந்தியன்ஸ் கோச்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்றாவது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது.

ஆரஞ்சு கேப் எல்லாம் எனக்கு பெரிசில்ல... என்னோட கோலே வேற... வேற லெவலில் சிந்திக்கும் ஏபிடி ஆரஞ்சு கேப் எல்லாம் எனக்கு பெரிசில்ல... என்னோட கோலே வேற... வேற லெவலில் சிந்திக்கும் ஏபிடி

அடுத்ததாக நாளைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளது.

3வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ்

3வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2021 தொடரின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய ஆர்சிபி அணியின் வெற்றியை அடுத்து முதலிடத்தை அதற்கு தாரை வார்த்துவிட்டு 3வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளது.

மும்பை அணி தீவிரம்

மும்பை அணி தீவிரம்

அந்த அணியின் அனைத்து வீரர்களும் தங்களது திறமை மற்றும் பொறுப்பை உணர்ந்து செயலாற்றி வருகின்றனர். இந்த சீசனில் கோப்பையை வெற்றி கொண்டால், ஹாட்ரிக் கோப்பையை வெல்ல முடியும் என்பதால் அதை மனதில் வைத்து வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர்.

சவாலான சென்னை பிட்ச்

சவாலான சென்னை பிட்ச்

இந்நிலையில் நாளைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சென்னையில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நாளைய போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அணியின் தலைமை கோச் மகேளா ஜெயவர்த்தனே, சென்னை பிட்ச் சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் ஆனால் விளையாட முடியாத அளவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை

கடந்த 2019ல் ஐபிஎல் தொடருக்காக பந்து வீசினார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பௌலிங் செய்யவில்லை. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பௌலிங் செய்தார். இந்நிலையில் அவரை பந்துவீச வைத்து ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் தயாராக இல்லை என்று கோச் தெரிவித்துள்ளார்.

பௌலிங் செய்ய வைக்க முயற்சி

பௌலிங் செய்ய வைக்க முயற்சி

ஆனால் தொடர்ந்து ஹர்திக்கின் பிட்னஸ் குறித்து கண்காணித்து அவரை அடுத்த சில வாரங்களில் பௌலிங் செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக ஜெயவர்த்தனே குறிப்பிட்டுள்ளார். ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கோச் இவ்வாறு உறுதி அளித்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Story first published: Monday, April 19, 2021, 16:52 [IST]
Other articles published on Apr 19, 2021
English summary
He's being assessed currently and we should see him bowl over the next few weeks -Coach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X