For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெண்டு வருஷமா விட்டுக் கொடுக்காம சூப்பரா விளையாடியிருக்கோம்... அணிக்கு விராட் கோலி பாராட்டு

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது இந்திய அணி.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் மாதம் 18ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ள இந்த போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ளது.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விட்டுக் கொடுக்காமல் விளையாடியுள்ளதாகவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மிகுந்த தகுதிவாய்ந்த அணியாக உள்ளதாகவும் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடர் வெற்றி

டெஸ்ட் தொடர் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களில் தொடர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதலில் ஆடப்பட்டுள்ள 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்திய அணி தகுதி

இந்திய அணி தகுதி

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் 18 முதல் 22 வரை லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணியுடன் இந்தியா ஆடவுள்ளது.

இந்தியா சிறப்பு

இந்தியா சிறப்பு

இந்நிலையில் நேற்றைய வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மிகுந்த தகுதி வாய்ந்த அணி என்று கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இதற்கென இந்திய அணி விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசுவாசத்தை ஏற்படுத்திய வெற்றி

ஆசுவாசத்தை ஏற்படுத்திய வெற்றி

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், தற்போது அந்த மிகப்பெரிய போட்டியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். அணியாக இந்த வெற்றியை கொண்டாடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது மிகுந்த ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, March 8, 2021, 0:28 [IST]
Other articles published on Mar 8, 2021
English summary
Well, we are quite relieved now that we have made it to the WTC finals -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X