For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ரெண்டு கேட்ச் மட்டும் இல்லன்னா... வெற்றி நம்மகிட்டத்தான் இருந்திருக்கும்... கோலி ஆதங்கம்

சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் இந்திய அணியை ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

முதல் போட்டியிலும் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் பௌலிங் சரியாக போடப்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் விராட் கோலி குற்றம் சாட்டியுள்ளார்.

தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. இவை இரண்டிலும் முறையே 66 மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து தொடரையும் 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சொதப்பிய இந்திய பௌலர்கள்

சொதப்பிய இந்திய பௌலர்கள்

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொண்டதாகவும் வியூகம் வகுத்து விளையாடியதாகவும் ஆனால் இந்திய பௌலர்கள் சிறப்பாக பந்துவீச தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அடித்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

அடித்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் வலிமையாக விளையாடியதாகவும் ஆஸ்திரேலியாவின் 389 ரன்களை சேஸ் செய்து 338 ரன்களை அடித்துள்ளதாக, ஒரு சிலரின் குறைவான ஸ்கோர்கள் சேஸிங்கில் இயல்பானதுதான் என்றும் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவர்கள் நாட்டின் பிட்ச்கள் குறித்து சிறப்பாக அறிந்துள்ளதால் பல ஆங்கில்களில் அடித்து ஆடியதாகவும கோலி தெரிவித்தார்.

போட்டியை தீர்மானித்த கேட்ச்கள்

போட்டியை தீர்மானித்த கேட்ச்கள்

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தன்னுடைய இரண்டு கேட்ச்கள் போட்டியின் தோல்வியை தீர்மானித்ததாகவும் கோலி வருத்தம் தெரிவித்தார். தானும் கேஎல் ராகுலும் 40 ஓவர்கள் வரை ஸ்டாண்ட் செய்யவும் அதன்பின்பு பாண்டியா போட்டியை கையாள்வார் என்று திட்டமிட்டதாகவும் ஆனால் அந்த 2 கேட்ச்கள் தோல்விக்கு கொண்டு சென்றதாகவும் கோலி குறிப்பிட்டார்.

Story first published: Monday, November 30, 2020, 10:28 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
The two catches which led to his and Shreyas Iyer's dismissal were the "defining moments" of the game
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X