சீக்கிரத்துலயே ஐபிஎல் எங்க நடக்கும்னு தெரியப் போகுதுங்க... நிர்வாக குழு கூட்டம் நடக்கப்போகுதாம்!

டெல்லி : ஐபிஎல் 2021 சீசன் எங்கு நடக்கவுள்ளது என்பது குறித்து இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

இந்த சீசனுக்கான ஏலம் நடந்து முடிந்துள்ளது. சிஎஸ்கே ஒருபடி முன்னே சென்று வரும் 11ம் தேதி முதல் தனது பயிற்சி போட்டிகளை துவக்கவுள்ளது.

அது சாதாரண ஒன்றல்ல..உலகக்கோப்பைக்கு சமமானது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நம்பிக்கை அளிக்கும் ரஹானே

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடரை முன்னிட்டு விரைவில் ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டு போட்டி நடைபெறவுள்ள இடங்கள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2021 ஏலம்

ஐபிஎல் 2021 ஏலம்

ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல ஏப்ரல், மே மாதங்களில் இந்த தொடர் துவங்கி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் கடந்த மாதத்தில் நடந்து முடிந்துள்ளது. 8 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களை தயார் படுத்தியுள்ளன.

அறிவிக்காத பிசிசிஐ

அறிவிக்காத பிசிசிஐ

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடர் இந்தியாவிலேயே நடைபெறுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளதால், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னமும் கொரோனா தாக்கம் உள்ளநிலையில் கடந்த ஆண்டை போல யூஏஇயில் நடத்தப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

11ம் தேதி முதல் பயிற்சி

11ம் தேதி முதல் பயிற்சி

ஆயினும் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் சிஎஸ்கே கடந்த ஆண்டை போலவே முன்னதாகவே தங்களது பயிற்சிகளை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 11ம் தேதி முதல் சென்னையில் அந்த அணியின் பயிற்சிகள் துவங்க உள்ளது. இதில் கேப்டன் எம்எஸ் தோனியும் பங்கேற்கவுள்ளார்.

ஐபிஎல் 2021 குறித்து ஆலோசனை

ஐபிஎல் 2021 குறித்து ஆலோசனை

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் விரைவில் கூடி இந்த சீசன் எங்கு மற்றும் எந்த தேதிகளில் நடைபெறும் என்பது குறித்து விவாதிக்க உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொடர் எவ்வாறு திட்டமிடப்பட உள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
We'll discuss in IPL Governing council meet that how will this season conducted -BCCI
Story first published: Wednesday, March 3, 2021, 14:03 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X