For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீரர்கள் விருப்பப்பட்டால் மட்டும் பாகிஸ்தானுக்கு போகலாம்.. வங்கதேசம் அதிரடி முடிவு!

தாக்கா : வீரர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் யாரையும் வற்புறுத்த மாட்டோம் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ல் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு அங்கு எந்த வெளிநாட்டு அணியினரும் சென்று விளையாடவில்லை. இதனால் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தனிமை பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய நாட்டில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டை முன்னேற்றும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இலங்கை அணியினர் அங்கு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகின்றனர்.

 சர்வதேச கிரிக்கெட்டில் பின்தங்கிய பாகிஸ்தான்

சர்வதேச கிரிக்கெட்டில் பின்தங்கிய பாகிஸ்தான்

கடந்த 2009ல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழநத்னர். வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த நாட்டில் விளையாட மற்ற நாட்டு வீரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 மகளிர் அணி விளையாட்டு

மகளிர் அணி விளையாட்டு

பாகிஸ்தானில் வங்கதேசத்தின் மகளிர் மற்றும் அண்டர் 16 அணியினர் சில போட்டிகளில் பங்கேற்று விளையாடிய நிலையில் தற்போது, வங்கதேச அணிக்கு பாகிஸ்தானில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட தங்களது வீரர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்றும் விருப்பம் உள்ளவர்கள் விளையாட செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 நான்கைந்து நாட்களில் முடிவு

நான்கைந்து நாட்களில் முடிவு

தற்போது பாதுகாப்பு அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அது வந்தவுடன் அணி வீரர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் நஸ்முல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த முடிவு நான்கைந்து நாட்களுக்குள் எடுக்கப்பட்டு விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பாகிஸ்தானுக்கு ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ஒப்புதல்

வீரர்களுடன் கலந்தாலோசித்த பின்பே பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஒப்புதல் வழங்கப்பட்டால் பாகிஸ்தானில் வங்கதேச அணியினர் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவார்கள்.

Story first published: Sunday, December 15, 2019, 18:53 [IST]
Other articles published on Dec 15, 2019
English summary
We will not force any of our player for Pakistan Tour - BCB says
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X