விசில் போடு.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ம் தேதி சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா

சென்னை; ஐ.பி.எல். கோப்பையை 4வது முறையாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.மேலும் இந்த வெற்றியை சென்னை அணியுடன் சேர்ந்து கொண்டாட காத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், சி.எஸ்.கே. அணிக்கு முதலமைச்சர் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, இந்திய அணிக்கு மெண்டராக டி-20 உலகக் கோப்பைக்கு நியமிக்கப்பட்டதால் பாராட்டு விழா தள்ளிப்போனது.

 பாராட்டு விழா

பாராட்டு விழா

தற்போது தோனி, தாயகம் திரும்புவதால் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது இந்த விழா வரும் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் தற்போது கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

 பங்கேற்கும் வீரர்கள்

பங்கேற்கும் வீரர்கள்

இந்த விழாவில் சென்னை அணி கேப்டன் தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, சர்துல் தாக்கூர் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 மம்தா வழியில் ஸ்டாலின்

மம்தா வழியில் ஸ்டாலின்

ஏற்கனவே ஐ.பி.எல்.கோப்பையை கொல்கத்தா அணி வென்ற போது ஷாரூக்கான் , மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்பு பாராட்டு விழா நடத்தி இருந்தார். இதனை பின்பற்றி தற்போது சென்னை அணிக்கும் பாராட்டு நடத்தப்பட உள்ளது. காவிரி பிரச்சினை, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் நடைபெறாமல் இருந்தது. இதனால் சென்னை அணியை தமிழக ரசிகர்கள் பிரிந்து வாடி இருந்தனர். தற்போது சென்னையில் இந்த பாராட்டு விழா நடத்தப்படுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

CSK வெற்றியின் ரகசியத்தை Hazlewood சொல்லீட்டாரு -Aaron Finch | Oneindia Tamil
 பிரியா விடை?

பிரியா விடை?

இந்த பாராட்டு விழாவில் ஐ.பி.எல்.தொடரில் தமது எதிர்காலம் குறித்து தோனி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை, தமிழக ரசிகர்கள் முன் கிரிக்கெட்டுக்கு தோனி பிரியா விடை அளிக்க உள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. கிரிக்கெட்டின் தலயும், அரசியலின் தளபதியும் ஒரே மேடையில் அமர உள்ளது இருவர்களின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Appreciation function is going to happen in Chennai for csk winning the IPL championship. TN chief minister Stalin is going to felicitate MS Dhoni.
Story first published: Tuesday, November 16, 2021, 17:46 [IST]
Other articles published on Nov 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X