சச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன?

WORLD CUP 2019 | தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை!- வீடியோ

லண்டன்: தோனிக்கு எதிராக பிசிசிஐ அமைப்பு காய்களை நகர்த்துவதற்கு பின் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஆகியோரின் அழுத்தமும் காரணம்தான் என்று தகவல்கள் வருகிறது.

இந்திய அணியில் தோனியின் வருகைக்கு முன்புவரை மிக முக்கியமான வீரர்களாக இருந்தவர்கள் என்று பார்த்தால் அது சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் மற்றும் லட்சுமணன்தான். இதில் லட்சுமணன் டெஸ்ட் வீரராகவே இருந்து கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஒருநாள் போட்டிகளில் முக்கியமான வீரர்களாக ஆதிக்கம் செலுத்தினார்கள். தோனி வந்த பின்பும் கூட இவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர்.

அடுத்த ஐபிஎல்-ல முடிஞ்சா எங்களை தொட்டுப் பாரு.. அதிரடி மாற்றம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சவால்!

என்ன ஓய்வு

என்ன ஓய்வு

அதன்பின் தோனி கேப்டனாகி இந்திய அணிக்காக 2011 உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தார். ஆனால் அதன்பின் வரிசையாக சச்சின், கங்குலி, சேவாக் மூவரும் ஓய்வு பெற்றனர். இதில் சச்சினுக்கு மட்டும்தான் சரியான வகையில் விடை கொடுக்கப்பட்டது. யுவராஜ் சிங்கும் அதேபோல்தான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து பின் ஓய்வு பெற்றார்.

புகார்

புகார்

இவர்களின் ஓய்விற்கு காரணம் தோனிதான் என்று ஒரு புகார் இப்போதும் சுற்றுகிறது. சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக், யுவராஜ் ஆகியோரின் ரசிகர்கள் இப்போதும் கூட இந்த புகாரை வைப்பது உண்டு. எங்கள் ஹீரோவின் ஓய்விற்கு தோனிதான் காரணம் என்று அவர்கள் கூறுவது உண்டு.

மாறி உள்ளது

மாறி உள்ளது

இந்த நிலையில்தான் தற்போது தோனி குறித்து இந்த முக்கிய வீரர்கள் நான்கு பேருமே விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் நான்கு பேருமே உலகக் கோப்பையில் தோனியின் ஆட்டத்தை விமர்சனம் செய்தனர். அதில் சச்சினும், சேவாக்கும் தோனியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். லட்சுமணனும் தோனி ஆடிய விதம் சரி இல்லை என்றுதான் விமர்சனம் செய்து வந்தார்.

பெரிய அழுத்தம்

பெரிய அழுத்தம்

சச்சின், கங்குலி, சேவாக் இந்த மூன்று பேரும் தற்போது பிசிசிஐ அமைப்பிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். பிசிசிஐ அமைப்பில் உள்ள சில முக்கிய உறுப்பினர்கள் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் சொல்வதை அப்படியே கேட்கும் நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தோனி குறித்த இவர்கள் பேட்டிகளில் சொன்ன விமர்சனம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது .

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

தோனி ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வீரர்கள் மறைமுகமாக வலியுறுத்தி வருகிறார்கள். தொடர்ந்து தோனியின் ஆட்டத்தை இவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் தற்போது பிசிசிஐ தரப்பிற்கு உண்மையாகவே பெரிய அழுத்தம் வைக்கப்பட்டு உள்ளது. தோனியை தானாக அணியில் இருந்து புறக்கணிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இவர்கள்தான் காரணமா

இவர்கள்தான் காரணமா

ஒரு காலத்தில் சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஓய்விற்கு தோனிதான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது தோனிக்கு பிசிசிஐ அளித்து வரும் அழுத்தத்திற்கு சச்சின், கங்குலி, கம்பீர், சேவாக் ஆகியோர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுவேறு இல்லாமல் தொடர்ந்து யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் வேறு தோனிக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்.

எப்போது ஆடுவார்

எப்போது ஆடுவார்

தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கும் தொடரில் தோனி விளையாட மாட்டார் என்று தெரிகிறது. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும் அவரை அணியில் எடுக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Were Sachin, Dada, and Sehwag giving pressure on BCCI officials against Dhoni?
Story first published: Wednesday, July 17, 2019, 16:00 [IST]
Other articles published on Jul 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X