For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேச புலிகள் அசத்தல்.. 108 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. தொடர்ந்து 10 வது முறை தோல்வி

பார்பிடாஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வங்கதேச அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரே போட்டியில் 3 பிரமாண்ட சாதனைகள்.. இங்கிலாந்து மண்ணில் கொடி நாட்டிய பும்ரா.. ரசிகர்கள் வியப்பு!! ஒரே போட்டியில் 3 பிரமாண்ட சாதனைகள்.. இங்கிலாந்து மண்ணில் கொடி நாட்டிய பும்ரா.. ரசிகர்கள் வியப்பு!!

டெஸ்ட் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் வங்கதேச அணி அடைந்த தோல்விக்கு தற்போது பழிதீர்த்து கொண்டுள்ளது.

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசியது. வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாய்ஹூப் 18 ரங்களிலும், கயல் மேயர்ஸ் 17 இடங்களிலும் ஆட்டம் இழந்தனர்.

108 ரண்களுக்கு சுருண்டது

108 ரண்களுக்கு சுருண்டது

இதன்பின்னர் வங்கதேச அணியின் சுழற் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீட்டு கட்டு போல் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சரிந்தன. அதிகபட்சமாக கிமோபால் 25 ரன்கள் எடுக்க கேப்டன் பூரான் டக் அவுட் ஆனார். இதனால் 35 வது ஓவரிலே வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச வீரர்கள் மெகதி ஆசன் 4 விக்கெட்டுகளையும், நாசும் அகமத் 3 விக்கெட் களையும் கைப்பற்றினர்.

அபார வெற்றி

அபார வெற்றி

இதனை அடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் நஜ்முல் ஹுசைன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் தமீம் இக்பால் 7 பவுண்டரிகளை விளாசி 62 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருக்கு லிட்டன் தாஸ் 32 ரன்கள் சேர்த்து கம்பெனி கொடுக்க வங்கதேச அணி 20.4 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

 வங்கதேசம் சாதனை

வங்கதேசம் சாதனை

இதன் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்து போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்திடம் தோல்வியை தழுவி சோகமான ரெக்கார்டை படைத்துள்ளது. ஒரு காலத்தில் சாம்பியன் அணியாக விளங்கிய வெஸ்ட் இண்டீஸ் தற்போது வங்கதேசமிடம் இப்படி தோற்பது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

Story first published: Thursday, July 14, 2022, 13:29 [IST]
Other articles published on Jul 14, 2022
English summary
West Indies all out for 108 runs and lost against Bangladesh for record consecutive 10 matchesவங்கதேச புலிகள் அசத்தல்.. 108 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. தொடர்ந்து 10 வது முறை தோல்வி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X