For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மா.. சொத்தை பவுலிங்..! ஏமாந்து அவுட் ஆகிட்டோம்..! இந்தியாவை மட்டம் தட்டிய வெஸ்ட் இண்டீஸ்

ஆன்டிகுவா: சூப்பரான பவுலிங் எல்லாம் கிடையாது, நாங்கள் தான் வேண்டும் என்றே விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்தோம் என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராஸ்டன் சேஸ் நக்கலடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியாவின் இஷாந்த் சர்மா அற்புத பவுலிங்கால் வெஸ்ட் இண்டீசை வாரிச் சுருட்டினார். 5 விக்கெட்டுகளை அள்ளி, எதிரணிக்கு அதிர்ச்சி தந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக, ராஸ்டன் சேஸ் 48 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.

சும்மா ஒண்ணும் டக் அவுட் ஆகலை.. ரன்னே அடிக்காமல் சாதனை செய்து டீமை காப்பாற்றிய வெ.இண்டீஸ் வீரர்! சும்மா ஒண்ணும் டக் அவுட் ஆகலை.. ரன்னே அடிக்காமல் சாதனை செய்து டீமை காப்பாற்றிய வெ.இண்டீஸ் வீரர்!

அசத்தல் பவுலிங்

அசத்தல் பவுலிங்

இந்திய அணியின் தரமான, கலக்கலான பவுலிங், வெஸ்ட் இண்டீசை தடுமாற வைத்தது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தது. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக கூறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீசின் ராஸ்டன் சேஸ்.

சொத்தை பவுலிங்

சொத்தை பவுலிங்

அதாவது, இந்திய அணியின் பவுலிங் எல்லாம் வொர்த் இல்லை, நாங்கள் சொத்தை பந்துகளில் விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெஸ்ட் இல்லை

பெஸ்ட் இல்லை

இந்திய அணியின் பவுலிங் எல்லாம் ரொம்ப சாதாரணமாகவே இருந்தது, சிறப்பு ஒன்றும் இல்லை. நாங்கள் தான் எளிதாக விக்கெட்டுகளை சாதாரண பந்துகளுக்கு கொடுத்தோம்.

கவனம் குறைந்தது

கவனம் குறைந்தது

நானும் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நின்று ஆடினேன். அணியை முன்னிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எனது கவனக்குறைவு, விக்கெட்டை இழக்க நேரிட்டது.

பிரமாதம் கிடையாது

பிரமாதம் கிடையாது

நேராக வந்த பந்தை என் அருகில் வரும் வரை நான் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டேன். பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவில்லை, மத்தபடி பந்து வீச்சு ஒன்றும் பிரமாதமாக இருந்தது என்று சொல்ல முடியாது என்றார்.

Story first published: Sunday, August 25, 2019, 10:38 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
West indies batsman roston chase, comments on Indian bowling attack.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X