For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானின் மிரள வைக்கும் பவுலிங்.. முதல் டெஸ்ட்டில் திக் திக்..த்ரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!

ஜமைக்கா : பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ரஹானேவின் 2வது டெஸ்ட் போட்டி ரஹானேவின் 2வது டெஸ்ட் போட்டி

டி20 தொடரில் சரிவர முடிவு எட்டப்படாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ம் தேதி முதல் ஜமைக்காவில் நடைபெற்று வந்தது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங்

இந்த போட்டியுல் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஆலம் 56 ரன்களும், ஃபஹீம் அஷ்ரஃப் 44 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பக்கபலமாய் இருந்தனர்.

லீடிங்

லீடிங்

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான க்ரைக் பிராத்வெயிட் அபாரமாக ஆடி 97 ரன்களை குவித்தார். 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த ஹோல்டர் மட்டுமே அதிகபட்சமாக 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 தொடர்ந்து சரிந்த விக்கெட்டுகள்

தொடர்ந்து சரிந்த விக்கெட்டுகள்

36 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, வெறும் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சீலஸ் 5 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், ஹோல்டர், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. விரைவில் ஆட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் அதனை மாற்றினர். அடுத்தடுத்து விக்கெட் எடுத்து வெஸ்ட் இண்டீஸை திணறடித்தனர்.

Recommended Video

ICC T20 World Cup 2021 Schedule Announced | OneIndia Tamil
எளிய இலக்கு

எளிய இலக்கு

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தொடக்க வீரர் பிராத்வெயிட் 2 ரன்களுக்கு வெளியேறினார். கிரன் பாவெல் 4 ரன், போன்னர் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் - ஜமைன் பிளாக்வுட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஆனால் நீண்ட நேரம் இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை. மிக நிதானமாக செயல்பட்டு வந்த சேஸ் 22 ரன்னில் அவுட்டானார். மறுமுணையில் இருந்த பிளாக்வுட் அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

இனி வரும் டெயில் எண்டர்ஸ் ஆவது அணியை காப்பாற்றி இலக்கை விரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வந்த வீரர்கள் அனைவரும் சிறிது நேரத்திற்கு திரும்பினர். கெயில் மேயர்ஸ் டக் அவுட், ஹோல்டர் 16 ரன்கள், ஜோசுவா 13 ரன்கள், ஜோமல் வாரிகான் 6 ரன்கள் என தொடர்ந்தும் ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் கையில் இருந்தது. அப்போது சாதுர்யமாக செயல்பட்ட பந்துவீச்சாளர் ராச் மறுமுணை வீரர் ஸ்ட்ரைக்கு வராத வகையில் நிதானமாக பேட்டிங் செய்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கொடுத்தார். தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடைசி நேர ட்விஸ்ட்டால் மாறிப்போனது.

Story first published: Monday, August 16, 2021, 20:46 [IST]
Other articles published on Aug 16, 2021
English summary
West Indies beats pakistan by 1 wicket, Fans goes Crazy for interesting match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X