For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியை அவுட் ஆக்குவது எப்படி.. வீரர்களுக்கு நையாண்டி பாடம் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் கோச்

டெல்லி: சர்வதேச அளவில் 70 சதங்களை அடித்த பெருமைக்குரிய இந்திய கேப்டன் விராட் கோலி, தற்போது மிகுந்த வலிமை மிக்க ஆட்டக்காரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

கிரிக்கெட்டில் அவரை எளிதில் வீழ்த்துவது சாத்தியமில்லை என்பதை உலக அணிகள் உணர்ந்துள்ளன. ஆனால் அவரை உடனடியாக அவுட்டாக்க மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் சில ஆலோசனைகளை தனது அணிக்கு வழங்கியுள்ளார்.

விராட் ஸ்டம்பை கொண்டு பேட்டிங் செய்ய வைக்கலாம், ஆடுவதற்கு முன்பாகவே 100 ரன்களை அவருக்கு கொடுத்துவிடலாம், நம்முடைய பௌலர்கள் விராட்டை கண்டு அச்சப்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம், ஒரே நேரத்தில் இரண்டு பௌலர்கள் விராட்டிற்கு பந்துவீசும்படி செய்யலாம் போன்ற பரிந்துரைகளே அவை.

 சர்வதேச போட்டிகளில் 70 சதங்கள்

சர்வதேச போட்டிகளில் 70 சதங்கள்

தன்னை மிகச்சிறந்த ஆட்டக்காரராகவும் சிறந்த கேப்டனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ள விராட் கோலி, சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் தன்னுடைய 70வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

 தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்

தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்

இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ள 3 சர்வதேச டி20 போட்டிகள் ஐதராபாத்தில் நாளை துவங்கவுள்ளன. இதேபோல 15ம் தேதிமுதல் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன.

 ஆலோசனைகளுடன் பில் சிம்மன்ஸ்

ஆலோசனைகளுடன் பில் சிம்மன்ஸ்

இந்த தொடரில் சதங்களை விளாசுவதில் இருந்து விராட்டை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை கோச் பில் சிம்மன்ஸ், அதற்கென நையாண்டியுடன் சில பல ஆலோசனைகளை தன்னுடைய அணியினருக்கு வழங்கியுள்ளார்.

"ஆடுவதற்கு முன்பே 100 ரன்கள் கொடுத்து விடலாம்"

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்றுனராக களமிறங்கியுள்ள பில் சிம்மன்ஸ், பேட்டை விடுத்து ஸ்டம்பை கொண்டு விராட்டை ஆட வைக்கலாம் என்று நையாண்டியுடன் பரிந்துரைத்துள்ளார். மேலும் விராட் ஆடுவதற்கு முன்பாகவே 100 ரன்களை கொடுத்து விட்டு மற்ற விரர்களுக்கு பௌலிங் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

"ஒரே நேரத்தில் இரு பௌலர்கள் பந்துவீச்சு"

விராட்டை கண்டு எதிரணி பௌலர்கள் அச்சமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சிம்மன்ஸ், அடுத்த அதிரடியாக ஒரே நேரத்தில் விராட்டிற்கு இரண்டு பௌலர்கள் பந்து வீசுவதன்மூலம் அவரை சீக்கிரத்திலேயே அவுட் ஆக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

"அதிக திறமையுடன் எதிர்கொள்ள வேண்டும்"

விராட்டை அவுட் ஆக்குவது கடினம் என்பதை ஒப்புக் கொண்டுள்ள பில் சிம்மன்ஸ், கடந்த ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுடன் மோதிய நிலையில், அதைவிட அதிக திறமையுடன் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

"இந்தியாவுடன் மோதுவது எளிதல்ல"

இந்தியா இந்தியா தான் என்றும், அதனுடன் மோதி ஜெயிப்பது எளிதானதல்ல என்றும் தெரிவித்துள்ள பில் சிம்மன்ஸ், கடந்த ஆண்டை காட்டிலும், இந்திய வீரர்களின் திறமை அதிகரித்துள்ளது போலவே, மேற்கிந்திய தீவுகள் அணியும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக திறமையுடன் மோத தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 5, 2019, 14:04 [IST]
Other articles published on Dec 5, 2019
English summary
West Indies Head Coach Phil simmons Suggestions to out Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X