For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்

ஆன்டிகுவா அண்ட் பார்புடா : மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் தன்னுடைய 95வது வயதில் காலமானார்.

புகழ்பெற்ற மூன்று டபள்யூக்களின் இறுதி வீரரான வீக்ஸ், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

அவருக்கு விண்டீஸ் கிரிக்கெட், ஐசிசி மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சர்வதேச அளவில் விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் தான் பெஸ்ட்... மான்டி பனேசர் கருத்துசர்வதேச அளவில் விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் தான் பெஸ்ட்... மான்டி பனேசர் கருத்து

எவர்டன் வீக்ஸ் காலமானார்

எவர்டன் வீக்ஸ் காலமானார்

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் தன்னுடைய 95வது வயதில் காலமாகியுள்ளார். அவருக்கு விண்டீஸ் கிரிக்கெட், ஐசிசி மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் தங்களின் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே இடத்தில் பிறந்தவர்கள்

ஒரே இடத்தில் பிறந்தவர்கள்

இரண்டாவது உலகப்போருக்கு பிறகு அமைக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் எவர்டன் வீக்ஸ், கிளைட் வால்காட் மற்றும் பிராங் ஓரல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் வால்கட் கடந்த 2006ல் மரணமடைந்தார். ஓரல் 1967ல் காலமானார். இவர்கள் மூவரும் 18 மாதங்கள் இடைவெளியில் ஒரே இடத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எவர்டன் வீக்ஸ் தற்போது உயிரிழந்துள்ளார்.

3 டபள்யூ ஓவல் மைதானம்

3 டபள்யூ ஓவல் மைதானம்

மேற்கிந்திய தீவுகள் அணியின் புகழ்பெற்ற மூன்று டபள்யூக்களின் இறுதி வீரரான வீக்ஸ், கடந்த ஆண்டில் மாரடைப்பு காரணமாக அவதியுற்றார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்து காலமடைந்துள்ளார். இவர் மற்றும் மறைந்த சக வீரர்கள் கிளைட் வால்காட், பிராங் ஓரல் ஆகியோர் நினைவாக பிரிட்ஜ்டவுன் தேசிய மைதானத்திற்கு த்ரி டபள்யூ ஓவல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 சதமடித்து சாதனை

தொடர்ந்து 5 சதமடித்து சாதனை

கடந்த 1948 முதல் 1958 வரை 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வீக்ஸ், 4,455 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 58.61. அதிகபட்ச ரன்னாக ஒரு போட்டியில் 207 எடுத்துள்ளார். 15 சதங்களை குவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து 5 போட்டிகளில் சதத்தை குவித்துள்ளார் வீக்ஸ். இதுவே தற்போதுவரை சாதனையாக உள்ளது.

95 நிமிடங்களில் 100 ரன்கள்

95 நிமிடங்களில் 100 ரன்கள்

கேரி சோபருடன் இணைந்து 95 நிமிடங்களில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை அடித்ததும் சாதனையாக கருதப்படுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் அடிக்கப்பட்ட ஒரு பந்து கையில் பட்டதில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையிலும் 3 மணிநேரத்தில் மீண்டும் மைதானத்திற்கு வந்து 16 பவுண்டரிகள் உள்பட 90 ரன்களை அடித்த இவரது மனஉறுதி தற்போதும் பாராட்டப்படுகிறது.

Story first published: Thursday, July 2, 2020, 11:17 [IST]
Other articles published on Jul 2, 2020
English summary
The National stadium in Bridgetown is named the Three Ws Oval
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X