For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி பாதாளத்திற்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ்.. "விளையாடுங்கனு கெஞ்ச முடியாது".. பயிற்சியாளர் ஆவேசம்

மும்பை: ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் கிங்காக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது.

டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்த பெருமையை மீட்டது.

அவ்வளவு ஏன் 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. ஆனால் தற்போது மீண்டும் டி20 கிரிக்கெட்டில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை நோக்கி செல்கிறது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

அதற்கு காரணம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்தால் வீரர்கள் எதிர்பார்க்கும் ஊதியத்தை கொடுக்க முடியாமல் போனது தான். இதனால் பல்வேறு நட்சத்திர வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல், மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ரஸில் இந்தியா தொடரின் போது ஓய்வில் தான் இருந்தார்.

வருவதில்லை

வருவதில்லை

தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்டிரட் தொடருக்கு சென்றுவிட்டார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை. இதே போன்று சுனில் நரைனும் தேசிய அணிக்காக விளையாடாமல் சென்றுவிட்டார். இவன் லீவிஸ், ஓசோனே தாமஸ் போன்ற வீரர்கள் உடல் தகுதியை நிரூபிக்க இதுவரை நேரில் வரவில்லை.

டி20 உலககோப்பை

டி20 உலககோப்பை

ராஸ்டன் சேஸ் மற்றும் கோட்ரேல் காயத்திலிருந்து குணமாகவில்லை. பெபியன் ஆலன் குடும்ப பிரச்சினையை காரணம் காட்டி விளையாடாமல் உள்ளார். இதனால், இருக்கிற வீரர்களை வைத்து தான் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியை தழுவியுள்ளது.இன்னும் டி20 உலககோப்பைக்கு 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்,அணியில் யாரை சேர்ப்பது என்ற தலைவலியில் உள்ளனர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.

Recommended Video

India அணியின் Captain-ஆக KL Rahul பெயர் அறிவிப்பு | IND vs ZIM *Cricket
பயிற்சியாளர் ஆவேசம்

பயிற்சியாளர் ஆவேசம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் சிம்மன்ஸ், நாட்டுக்காக விளையாடமல் இருக்கும் வீரர்களிடம் நான் என்ன சொல்ல மடியும். அவர்கள் காலை பிடித்து எல்லாம் கெஞ்ச முடியாது. இப்போது எல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பு வருகிறது. அங்கே செல்லாமல் நாட்டுக்காக விளையாடுங்கள் என்று சொல்லும் உரிமை எங்களுக்கு இல்லை. தற்சமயம் இருக்கும் வீரர்களை வைத்து தான் விளையாடி வருகிறோம்.

Story first published: Thursday, August 11, 2022, 19:56 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
West Indies in Big trouble as star Players not playing for their country அடி பாதளத்திற்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ்.. "விளையாடுங்கனு கெஞ்ச முடியாது".. பயிற்சியாளர் ஆவேசம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X