For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு-பொலார்ட் தலைமையில் அதிரடி வீரர்கள் தேர்வு..

பார்பிடாஸ்: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த நிலையில் ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்தது.

கடந்த வாரம் அயர்லாந்துடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியது. இதனால் சில வீரர்கள் நீக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த அணியை இந்திய தொடருக்கு மேற்கிந்திய தீவுகள் அணி களமிறக்கியுள்ளது.

“நாங்க சுற்றுப்பயணம் வர அதை செய்யுங்க” பிசிசிஐ-க்கு கண்டிஷன் போட்ட இலங்கை.. ஒத்துழைக்குமா இந்தியா“நாங்க சுற்றுப்பயணம் வர அதை செய்யுங்க” பிசிசிஐ-க்கு கண்டிஷன் போட்ட இலங்கை.. ஒத்துழைக்குமா இந்தியா

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

பொலார்ட் தலைமையிலான அணியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் கீமர் ரோச் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தான் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்,அயர்லாந்து தொடரில் சொதப்பிய ராஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரிவிஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

திரும்பிய நட்சத்திரங்கள்

திரும்பிய நட்சத்திரங்கள்

கோவிட் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள அதிரடி வீரரும் சுழற்பந்துவீச்சாளர் ஃபெபியன் ஆலன் இந்திய தொடருக்கு திரும்பியுள்ளார். அனுபவ வீரர் டேரன் பிராவோ, தொடக்க வீரர் பிராண்டன் கிங் ஆகியோரும் இந்திய தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இளம் நட்சத்திர வீரர் ஹைடன் வால்ஷ் ஜூனியர் இந்திய தொடரில் களமிறங்க உள்ளார்.

ஏன் வாய்ப்பு?

ஏன் வாய்ப்பு?

புதிய தேர்வுக்குழுத் தலைவராக தேஸ்மண்ட் ஹைனஸ் முதல் முறையாக அணியை தேர்வு செய்துள்ளார். அனுபவமும், இளம் வீரர்களையும் கலந்த அணியை தேர்வு செய்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஒரே இடத்திற்கு பல வீரர்கள் போட்டி போடும் நிலை உருவாக வேண்டும் என்றும், அதற்காக தான் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறினார். கீமர் ரோச் தொடக்க ஓவர்களில் விக்கெட்டை எடுப்பார் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேஸ்மண்ட் ஹைனஸ் கூறினார்

ஒருநாள் அணி விவரம்

ஒருநாள் அணி விவரம்

பொலார்ட், ஃபெபியன் ஆலன், போனர்,டேரன் பிராவோ,புருக்ஸ், ஜேசன் ஹோல்டர், சாய் ஹோப்,அகேவ் ஹூசைன்,அல்சாரி ஜோசப்,பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரான்,கேமர் ரோச்,ரோமரியோ சிஃப்பர்ட், ஓடியன் ஸ்மித், ஹைடன் வால்ஸ் ஜூனியர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, January 27, 2022, 17:05 [IST]
Other articles published on Jan 27, 2022
English summary
West Indies ODI squad for Indian series 2022 announced இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு-பொலார்ட் தலைமையில் அதிரடி வீரர்கள் தேர்வு..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X