For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்க பேன்ட்.. அங்க கைலி.. சென்னை டெஸ்ட் நடக்கும் "அதே" நாளில்.. கிரிக்கெட் உலகை அதிர வைத்த சம்பவம்!

டாக்கா: வங்கதேசம் அணிகளுக்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் வீரர் கைலி மையர்ஸ் நேற்று ஆடிய விதம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி கடுமையாக திணறி வருகிறது. ரஹானே, கோலி , ரோஹித், கில் போன்ற டாப் வீரர்களை சொற்ப ரன்களில் பறிகொடுத்துவிட்டு இந்திய அணி திணறிக்கொண்டு இருக்கிறது.

எனக்கு எதிராக அவ்வளவு பேசினார்.. அவரை எடுக்க வேண்டாம்.. கறாராக நோ சொன்ன தோனி.. பின்வாங்கிய சிஎஸ்கே? எனக்கு எதிராக அவ்வளவு பேசினார்.. அவரை எடுக்க வேண்டாம்.. கறாராக நோ சொன்ன தோனி.. பின்வாங்கிய சிஎஸ்கே?

இங்கிலாந்துக்கு எதிராக பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி போராடி வரும் இதே நிலையில் இன்னொரு பக்கம் கிரிக்கெட் உலகில் இன்னொரு ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகள்

மேற்கு இந்திய தீவுகள்

இந்திய அணிக்காக இங்கு பேண்ட் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த போது மேற்கு இந்திய தீவுகள் அணியில் கைலி சிறப்பாக ஆடி இருக்கிறார். மேற்கு இந்திய தீவுகள் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. அங்கு இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

சிறப்பான பவுலிங் அட்டாக் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணியை வங்கதேசம் எளிதாக வீழ்த்தியது. இதனால் டெஸ்ட் போட்டிகளிலும் கண்டிப்பாக மேற்கு இந்திய தீவுகள் தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரர்கள் பலர் அணியில் இருந்தே வெளியேறினார்கள்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

தொடர் தோல்வி காரணமாக அணியில் இருந்து இவர்கள் பாதியில் கழன்று கொண்டார்கள். முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசம் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் டிரா ஆனது. முக்கிய வீரர்கள் இல்லாமல் இரண்டாவது டெஸ்டில் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

 வாய்ப்பு

வாய்ப்பு

இதிலும் முதல் நான்கு நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணியே ஆதிக்கம் செலுத்தியது. முதலில் 430 ரன்கள் எடுத்து வங்கதேசம் முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் மேற்கு இந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின் இறங்கிய வங்கதேசம் 223 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இலக்கு

இலக்கு

இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 390 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்கொண்டு களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் கடைசி நாளில் அதிரடியாக ஆடியது. அதிலும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கைலி மையர்ஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். இதுதான் இவருக்கு முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

அணியில் மூத்த வீரர்கள் விலகியதால் வேறு வழியின்றி இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே கைலி மிகவும் அற்புதமாக ஆடினார். இவர் அடித்த ஷாட்கள், கவர் டிரைவ், லாங் ஆப், ஆன் திசைகளில் அடித்த சிக்ஸ் என்று எல்லாமே பார்க்கவே அற்புதமாக இருந்தது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

முதல் இன்னிங்சில் இவர் 40 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 310 பந்துகள் பிடித்த இவர் 7 சிக்ஸ், 20 பவுண்டரி அடித்தார். கடைசிவரை அவுட்டாகாமல் மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிபெற வைத்தார்.

சிறப்பு

சிறப்பு

கடைசி இன்னிங்சில் இவர் நேற்று எடுத்ததுதான் டெஸ்ட் போட்டியில் வீரர் ஒருவர் கடைசி நாளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அறிமுக போட்டியிலேயே மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கைலி இப்படி ஆடியது பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் உலகிலும், சுணங்கி போய் இருக்கும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் கைலி புதிய எழுச்சியை கொடுத்து இருக்கிறார்.

Story first published: Monday, February 8, 2021, 10:09 [IST]
Other articles published on Feb 8, 2021
English summary
West Indies player Kyle Mayers batting against Bangaldesh in the second test goes viral in social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X