77 பந்துகளில் 205 ரன்கள்.. கிரிக்கெட் உலகையே அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. டி20ல் புது சாதனை!

அமெரிக்கா: டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உலகில் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. எப்படிபட்ட ஸ்கோராக இருந்தாலும் அடித்துவிடலாம் என்ற சூழலில் உள்ளது.

அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த ரகீம் கார்ன்வால் எனும் பேட்ஸ்மேன் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டியுள்ளார்.

கோட் சூட்டில் ஜொலித்த இந்திய வீரர்கள்.. டி20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா பயணம்.. ஆனால் ஒரே ஒரு குறை! கோட் சூட்டில் ஜொலித்த இந்திய வீரர்கள்.. டி20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா பயணம்.. ஆனால் ஒரே ஒரு குறை!

 சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் என்ற பெயரில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று அட்லாண்டா ஃபையர் மற்றும் ஸ்கொயர் ட்ரைவ் எனும் அணிகள் மோதின. இதில் அட்லாண்டா அணிக்காக விளையாடிய ரகீம் கார்ன்வால், டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை விளாசி அசத்தினார்.

 எப்படி நிகழ்ந்தது

எப்படி நிகழ்ந்தது

பெரிய உடலமைப்பை கொண்ட கார்ன்வெல் வெறும் 77 பந்துகளை மட்டுமே சந்தித்து17 பவுண்டரிகள் மற்றும் 22 சிக்ஸர்களுடன் 205 ரன்களை குவித்தார். எனினும் இது ஐசிசி அங்கீகாரம் பெறாத தொடர் என்பதால் சர்வதேச ரெக்கார்டாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவருடன் மற்ற வீரர்களும் அதிரடி காட்ட 20 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய எதிரணி 154 ரன்களுக்கெல்லால் சுருண்டது.

ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

ஓப்பனிங் வீரரான ரகீம் கார்ன்வால் கரீபியன் லீக் தொடர் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கார்ன்வால் 238 ரன்களை குவித்துள்ளார். இதே போல பவுலிங்கிலும் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

 சர்வதேச போட்டியில் வாய்ப்பு

சர்வதேச போட்டியில் வாய்ப்பு

29 வயதே ஆகும் கார்ன்வால் தொடர்ச்சியாக உள்நாட்டு தொடர்களில் அதிரடி காட்டுவதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கதவுகளை தட்டி வருகிறார். கிறிஸ் கெயில், கெயீரன் பொல்லார்ட், பிராவோ போன்ற வீரர்கள் இல்லாத இந்த சமயத்தில் கார்ன்வால் நல்ல மாற்றாக இருப்பார் என்பதால் விரைவில் வெஸ்ட் இண்டீஸின் டி20 அணியில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
West Indies player Rahkeem Cornwall slams 77 ball Double century in US-based Atlanta open T20 league
Story first published: Friday, October 7, 2022, 16:42 [IST]
Other articles published on Oct 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X