For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Eng Vs WI: இங்கிலாந்தை புரட்டிப் போட்டு.. 2வது இடத்துக்கு எகிறினார் ஜேசன் ஹோல்டர்

லண்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Recommended Video

BCCi to reschedule Australia and England series

தனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போதுதான் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர் முதல் முறையாக உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார் என்பது ஹோல்டர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஹோல்டர் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி செளதாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அசத்தியதால் ஹோல்டருக்கு இந்த உயர்வு கிடைத்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு

வரலாற்றுச் சிறப்பு

கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் சர்வதேச அளவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி இதுதான். அந்த வரலாற்றுப் பெருமையுடன் கூடவே இங்கிலாந்தில் வைத்தே அந்த அணியை அபாரமாக வீழ்த்திய சாதனையையும் படைத்தது ஹோல்டர் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இப்போட்டியில் மொத்தம் 7 விக்கெட்களைச் சாய்த்தார் ஹோல்டர்.

சூப்பர் சாதனை

சூப்பர் சாதனை

முதல் இன்னிங்ஸில் 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை அள்ளிய அவர் 2வது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை சாய்த்தார். தற்போது 862 புள்ளிகளுடன் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஹோல்டர். கடந்த 2000மாவது ஆண்டு கர்ட்னி வால்ஷ் கடைசியாக டெஸ்ட் தரிவரிசையில் அதிக உயரத்திற்குப் போயிருந்தார். அவர் 866 புள்ளிகளை அப்போது பெற்றிருந்தார். அதன் பின்னர் யாரும் அந்த உயரத்தைப் பிடிக்கவில்லை.

வறட்சி போயாச்சு

வறட்சி போயாச்சு

ஆனால் தற்போது அந்த வறட்சியைப் போக்கி ஹோல்டர் 822 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இது ஹோல்டருக்கு மட்டுமல்லாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குமே கூட பெரிய சாதனைதான். இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய வீரர்கள் அனைவருமே பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அந்தந்த இடத்தில் அப்படியே தொடர்கின்றனர்.

2வது இடத்தில் விராட் கோலி

2வது இடத்தில் விராட் கோலி

விராட் கோலி 2வது இடத்தில் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் முதலிடம். சட்டேஸ்வர் புஜாரா , அஜிங்கியா ரஹானே ஆகியோர் 7 மற்றும் 9வது இடத்தில் நீடிக்கின்றனர். ஜஸ்பிரீத் பும்ரா பந்து வீச்சாளர்களில் 7வது இடத்தில் இருக்கிறார். டாப் 10 வீரர்களில் இவர் மட்டுமே இந்தியர் ஆவார். பேட்ஸ்மேன் வரிசையில் ஜேசன் ஹோல்டர் 35வது இடத்தில் இருக்கிறார். அதேபோல ஆல்ரவுண்டர்கள் பட்டியலிலும் அவர் முன்னேறியுள்ளார்.

Story first published: Wednesday, July 15, 2020, 18:04 [IST]
Other articles published on Jul 15, 2020
English summary
Jason Holder attained the highest rating points by any West Indies bowler in 20 years
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X