For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திக்திக் கிளைமேக்ஸ்.. நேற்று சென்னை டெஸ்ட் நடந்த அதே நேரத்தில்.. கிரிக்கெட் உலகை அதிர வைத்த சம்பவம்!

சென்னை: நேற்று சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி நடந்து வந்த இதே நேரத்தில் இன்னொரு பக்கம் வங்கதேசம் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கிறது .

4 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில ஆடியிருக்காரு பந்த்... 4லயும் அரைசதம் விளாசியிருக்காரு! 4 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில ஆடியிருக்காரு பந்த்... 4லயும் அரைசதம் விளாசியிருக்காரு!

இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்கள் பின்னடைவை சந்தித்துள்ளது.

எப்படி

எப்படி

நேற்று சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி நடந்து வந்த இதே நேரத்தில் இன்னொரு பக்கம் வங்கதேசம் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் கைலி மேயர்ஸ் அதிரடியால் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்ற நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி அதிரடியாக வென்றது.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி 409 ரன்களை எடுத்தது. டா சில்வா, பூனர் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியில் இளம் வீரர்கள் எல்லோரும் நன்றாக ஆடினார்கள். அதன்பின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி வெறும் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

மேற்கு இந்திய தீவுகள்

மேற்கு இந்திய தீவுகள்

பின்னர் மீண்டும் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. இதனால் கடைசி ஒன்றரை நாளில் 230 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் அணி இருந்தது. வங்கதேசம் அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் திட்டமே வேறாக இருந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

கடைசி நாளில் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கும், ரிவர்ஸ் ஸ்விங்கிற்கும் சாதகமாக இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தனர். தமீம் இஃபால் மட்டும் 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் பவுலர்கள் எல்லோரும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ரஹீம்

ரஹீம்

ரஹீம் 4 விக்கெட், பிராத்வெய்ட், ஜோ மல் தலா 3 விக்கெட் எடுத்தனர். அதிலும் கடைசி ஒரு விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மேற்கு இந்திய தீவுகள் அணி ஆடி வந்தது. என்ன நடக்குமோ என திக் திக் என்று போட்டி சென்று கொண்டு இருந்தது . இந்த நிலையில் கடைசியில் ஹசன் அவுட்டாக வங்கதேசம் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

மேற்கு இந்திய தீவுகள் அணியில் மூத்த வீரர்கள் எல்லோரும் விலகிய நிலையில் இளம் வீரர்கள், ஏ அணி வீரர்களை வைத்து வங்கதேசம் அணியை அதன் சொந்த மண்ணில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீழ்த்தி உள்ளது. அதிலும் பல வீரர்களுக்கு இதுதான் முதல் டெஸ்ட் தொடர்.

பாராட்டு

பாராட்டு

மேற்கு இந்திய தீவுகள் அணியின் இந்த வெற்றியை சர்வதேச கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது . பொருளாதார சிக்கல் , அணி தேர்வு என்று பல விஷயங்களில் மேற்கு இந்திய தீவுகள் அணி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அந்த அணி ஆசிய அணி ஒன்றை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதித்து உள்ளது .

Story first published: Monday, February 15, 2021, 12:04 [IST]
Other articles published on Feb 15, 2021
English summary
West Indies white washes Bangladesh in the test series on their homeland with young players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X