For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி தோனியை அணியில் பார்க்கவே முடியாது.. காரணம் தோனி சொன்ன அந்த வார்த்தை!

மும்பை : உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தோனி தேர்வு செய்யப்படவில்லை.

தோனி தானாகவே ஒதுங்கி விட்டார், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவத்துடன் நேரம் செலவிட உள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் பிசிசிஐ-யின் கிரிக்கெட் தேர்வுக் குழு உள்ளது என கூறப்படுகிறது.

அவர்களிடம் தோனி சொன்ன ஒரு வார்த்தையால், அவரை இனி அணியில் சேர்க்கவே மாட்டார்கள் என்கிறது பிசிசிஐ வட்டாரம்.

தோனி..!! நீங்க ஆபரஷேனெல்லாம் பண்ண முடியாது..!! ஏன்... எதற்காக இந்த கட்டுப்பாடு..! தோனி..!! நீங்க ஆபரஷேனெல்லாம் பண்ண முடியாது..!! ஏன்... எதற்காக இந்த கட்டுப்பாடு..!

தோனிக்கு அழுத்தம்

தோனிக்கு அழுத்தம்

உலகக்கோப்பை பின் பலரும் எதிர்பார்த்தது போல தோனி ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில், இந்திய அணியிலும் அவரை எடுக்க விருப்பமில்லாமல் இருந்தது பிசிசிஐ. இதையடுத்து அவருக்கு தேர்வுக் குழு மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

டி20யிலும் இல்லை

டி20யிலும் இல்லை

2023 உலகக்கோப்பை தொடர் மற்றும் 2020 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை மனதில் வைத்து அணித் தேர்வு நடந்த நிலையில், தோனியை 2020 டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஆட வைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, "இனியும் உங்களை அணியில் ஒரு பகுதியாக பார்க்க முடியாது" என தோனியிடம் கூறியுள்ளார் தேர்வுக் குழு தலைவர் பிரசாத்.

என்ன சொன்னார் தோனி?

என்ன சொன்னார் தோனி?

அதற்கு பதில் அளித்த தோனி, "என்னை தேர்வு செய்வதும், செய்யாததும் தேர்வுக் குழுவின் முடிவு" என கூறி இருக்கிறார். எப்படி தோனியை கழட்டி விடுவது என காத்திருந்தவர்களுக்கு இந்த பதில் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஒதுங்கிய தோனி

ஒதுங்கிய தோனி

அணியில் வாய்ப்பு இல்லை என்ற நிலையில் தான் தோனி அடுத்த இரண்டு மாதங்கள் இராணுவத்துடன் செலவு செய்ய உள்ளதாக பிசிசிஐ-யிடம் கூறியதாக தெரிகிறது. இந்த தகவலும் தோனியிடம் இருந்து வரவில்லை. பிசிசிஐ தான் இதை தெரிவித்துள்ளது.

இனியும் வாய்ப்பு இல்லை

இனியும் வாய்ப்பு இல்லை

தோனி போன்ற அதிக செல்வாக்கு கொண்ட முன்னாள் கேப்டன் நினைத்தால், அணியில் இடம் பெற முடியும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. ஆனால், அவர் "நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய அந்த பதிலால் அவருக்கு இனி எப்போதும் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

ரிஷப் பந்த் வளர்ச்சி

ரிஷப் பந்த் வளர்ச்சி

மேலும், அடுத்து வரும் போட்டிகளில் ரிஷப் பந்த்தின் வளர்ச்சி தோனியின் இடத்தை முற்றிலுமாக பறித்து விடும். தோனி இதை எல்லாம் தெரிந்தே தான் அணியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இப்போது தோனி எப்போது ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பதே பிசிசிஐ-யின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Monday, July 22, 2019, 12:51 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
What Dhoni said to selection committee about his future?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X