For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிதாலி ராஜ் பற்றி பேசறீங்களே.. தோனிக்கு நடந்தது பற்றி தெரியுமா? பிசிசிஐ ரகசியங்கள்

Recommended Video

தோனிக்கே நடந்தது பற்றி தெரியுமா? பிசிசிஐ ரகசியங்கள்

மும்பை : மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜை ஓரங்கட்ட நடந்து வரும் திட்டங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் தோனிக்கு கேப்டன் பதவி கொடுக்கக் கூடாது ஒரு பிசிசிஐ அதிகாரி கூறினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அரங்கில் ரகசியமாய் நடந்து வரும் பல விஷயங்கள் வெளிவரத் துவங்கி உள்ளன. தோனிக்கு என்ன நேர்ந்தது என பார்ப்போம்.

அவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே!! மனம் வெதும்பிய மிதாலி ராஜ்அவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே!! மனம் வெதும்பிய மிதாலி ராஜ்

தோனி கேப்டன்

தோனி கேப்டன்

இரு மாதம் முன்பு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பதவி ஏற்றார். அதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் மற்றும் துணை கேப்டன் தவான் ஓய்வு பெற்ற நிலையில், தோனியை கேப்டனாக ஆட வைக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது.

நிர்வாகி தலையீடு

நிர்வாகி தலையீடு

எனினும், ஒரு மூத்த பிசிசிஐ நிர்வாகி தோனிக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டாம். அவருக்கு அடுத்த மூத்த வீரருக்கு கேப்டன் பதவி அளிக்கலாம் என கூறியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது அபத்தம்

இது அபத்தம்

இது போன்ற சூழ்நிலையில், நிர்வாகிகள் அணித்தேர்வில், அணி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என கூறுவதெல்லாம் அபத்தம் என ஒரு பிசிசிஐ-ஐ சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். மிதாலி ராஜ் விவகாரத்தில் நிர்வாக கமிட்டி அணி தேர்வில் தலையிடாது என ஒரு கமிட்டி உறுப்பினர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

200 ஒருநாள் போட்டி கேப்டன்

200 ஒருநாள் போட்டி கேப்டன்

அப்போது இந்த தடையை மீறி தோனி கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். தோனிக்கு அது 200வது ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி ஆகும். உலக அளவில் இதுவரை தோனியை சேர்ந்து மூன்று வீரர்கள் மட்டுமே 200 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்துள்ளனர்.

வெளிப்படைத் தன்மை வேண்டும்

வெளிப்படைத் தன்மை வேண்டும்

இப்படி பெருமை வாய்ந்த மூத்த வீரருக்கே இது தான் நிலைமை என்றால் பிசிசிஐ-இல் நிச்சயம் வெளிப்படைத் தன்மை வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் பிசிசிஐ வர வேண்டும்.

Story first published: Wednesday, November 28, 2018, 18:41 [IST]
Other articles published on Nov 28, 2018
English summary
What happened to Dhoni in Asia cup before he became captain for 200th match?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X