"வெறும் 24 மணி நேரத்தில்".. டெஸ்ட் தோல்விக்கு பின் நடந்த சம்பவம்.. கோலி ராஜினாமாவின் ரகசிய தகவல்..

கேப் டவுன்: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக ஒரு டிவிட்டை போட்டு, ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார்

ஆனால் விராட் கோலியின் இந்த முடிவு இன்று அவசரமாக எடுக்கப்பட்டது இல்லை. 3வது டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு விராட் கோலி வாழ்க்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது

யாரிடம் ராஜினாமா பற்றி பேசினார் உள்ளிட்ட ரகசிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

கோலி முடிவு

கோலி முடிவு

டி20, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து இனி டெஸ்டில் கவனம் செலுத்தலாம் என்று கோலி உறுதியாக இருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க தொடர் கோலிக்கு சம்மட்டி அடியாக இருந்தது. மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் விரக்தி அடைந்த கோலி, அணி தேர்வில் தம்மால் முழு சுதந்திரத்துடன் நடக்க முடியவில்லை. இதனால் தாம் கேப்டன் பொறுப்பில் தொடர வில்லை என்று முடிவு எடுத்தார்

சக வீரர்கள் அப்செட்

சக வீரர்கள் அப்செட்

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை முதலில் கோலி பயிற்சியாளர் டிராவிட்டிடம் கூறியுள்ளார். புதிய கேப்டன் டெஸ்ட் அணிக்கும் வந்தால் தான், அணிக்கு நல்லது என்று அவரிடம் கூறிய கோலி, பிறகு அணி வீரர்களை அழைத்து நேற்று மாலையே தனது முடிவை கூறியுள்ளார். கோலியின் முடிவால் சக வீரர்கள் அப்செட் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷாவிடம் பேசினார்

ஜெய்ஷாவிடம் பேசினார்

இதனையடுத்து விராட் கோலி, இன்று மதியம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவிடம் ராஜினாமா முடிவை பற்றி கூறியுள்ளார். இதற்கு பி.சி.சி.ஐ. ஒப்புதல் வழங்கிய பிறகே ரசிகர்களுக்கு கடிதம் எழுதி தனது ஓய்வு முடிவை கோலி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கோலியின் இந்த முடிவுக்கு அவரது மனைவி அனுஸ்கா சர்மா முழு ஒத்துழைப்பு வழங்கி மகிழ்ந்ததாகவும் தெரிகிறது

அடுத்தது யார்?

அடுத்தது யார்?

இந்திய அணி இனி மார்ச் மாதம் சொந்த மண்ணில் இலங்கையுடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதில் கோலி பங்கேற்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர ஓய்வில் இருக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், புதிய டெஸ்ட் கேப்டன் குறித்து பி.சி.சி.ஐ. விரைவில் முடிவை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவிற்கு தான் அந்த வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
What happened in 24 hours after a loss in kohli decision to quit test captaincy டெஸ்ட் தோல்விக்கு பிறகு 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?? கோலி ராஜினாமாவின் ரகசிய தகவல்கள்..
Story first published: Saturday, January 15, 2022, 22:28 [IST]
Other articles published on Jan 15, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X