For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - இலங்கை தொடர் ரத்து? .. கரார் காட்டும் கங்குலி.. அந்த ஒரு விஷயம் நடந்தால்.. எல்லாம் போச்சு!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

நான் வியந்துவிட்டேன்... ரெய்னாவின் மனதில் இடம்பிடித்த 3 இளம் வீரர்கள்.. ரிஷப் பண்ட்க்கு இடம் இல்லை! நான் வியந்துவிட்டேன்... ரெய்னாவின் மனதில் இடம்பிடித்த 3 இளம் வீரர்கள்.. ரிஷப் பண்ட்க்கு இடம் இல்லை!

முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, கடந்த 6ம் தேதி நாடு திரும்பியது. பின்னர் தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து திரும்பிய மொத்த அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

போட்டிகள் ஒத்திவைப்பு

போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியாவுடனான தொடர் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை ஏ அணி ஒன்றை உருவாக்கி பயிற்சி அளித்து வந்தது. மெயின் அணி வீரர்கள் குவாரண்டனை முடிக்க காலதாமதம் ஆனால் இலங்கை ஏ அணியை களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், போட்டிகள் 4 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது.

முதற்கட்ட பரிசோதனை

முதற்கட்ட பரிசோதனை

இந்நிலையில் இந்த தொடர் முழுமையாக ரத்தாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இலங்கையின் 2 அணிகளிலுமே முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் தான் வந்துள்ளன. வீரர்கள் பபுளுக்குள் மிகவும் நெருங்கி பழகுவதால் 2ம் கட்ட பரிசோதனையின் போது மேலும் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியாக வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை யாருக்கேனும் நடந்துவிட்டால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறும் எனக்கூறப்படுகிறது.

Recommended Video

Ms Dhoni ரசிகர்களிடம் சிக்கிய Harbajan singh | Oneindia Tamil
வெளியேறுமா இந்தியா?

வெளியேறுமா இந்தியா?

இந்திய அணி கடந்த ஜூன் 28ம் தேதியே இலங்கை வந்தடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதல் முறை போட்டிகளை ஒத்திவைத்துள்ள போதே அவர்களின் மனநிலையில் ஏமாற்றம் என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே கொரோனாவால் மேலும் சில நாட்கள் அவர்களை அங்கு காத்திருக்க சொல்ல முடியாது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால், இந்திய ஏ அணியை வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அனுப்பவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே மீண்டும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டால், இந்திய வீரர்களை திரும்ப அழைத்துவிட கங்குலி கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, July 11, 2021, 19:28 [IST]
Other articles published on Jul 11, 2021
English summary
Report: Ganguly Thinks to call back indian Players from Srilanka series, if if the matches Postponed again
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X