இந்திய வீரர்கள் ரசித்து ருசிக்கும் இங்கிலாந்து உணவுகள்.. அஷ்வின் "மெனு" என்ன தெரியுமா?

சவுத்தாம்ப்டன்: இந்திய வீரர்கள், இங்கிலாந்தில் தாங்கள் விரும்பி உண்ணும் உணவு குறித்து மனம் திறந்துள்ளனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரும் ஜூன் 18ம் தேதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சவுத்தாம்ப்டனில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஏமாற்றம்.. திறமை இருந்தும் தொடர் புறக்கணிப்பா? - மயங்க் அகர்வாலின் ஏமாற்றம்.. திறமை இருந்தும் தொடர் புறக்கணிப்பா? - மயங்க் அகர்வாலின்

இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் ஓரளவு வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்த நிலையில், வலைப்பயிற்சியில் அவர்கள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.

காலை உணவு

காலை உணவு

இந்த நிலையில், இந்திய வீரர்கள் சிலரிடம் பிசிசிஐ சார்பில் சிறப்பு நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அவர்கள் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இதில், வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி மற்றும் நம்மூர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்களுக்கு பிடித்த இங்கிலாந்து நாட்டின் காலை உணவு துருவிய முட்டைகள், வேகவைத்த பீன்ஸ் மற்றும் டோஸ்ட் தானாம். அதே நேரத்தில் இந்தியாவின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே தனது பிடித்த மெனு sausages என்றார்.

பிடித்த படம்

பிடித்த படம்

அதேபோல், இந்திய வீரர் புஜாராவின் சைவ உணவு உண்பவர் என்பதால் brown toast, உருளைக்கிழங்கு ரோஸ்டிஸ் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை தான் விரும்பி எடுத்துக் கொள்வேன் என்றார். அதுமட்டுமல்ல, இந்திய வீரர்களிடம் ‘Rapid fire Challenge' கேள்விகள் வைக்கப்பட்டது. அதில், இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட படத்தில் பிடித்த படம் எது என்ற கேள்விக்கு, அனைவரும் ஒரு சேர தெரிவித்த பதில், ஷாருக் கான் நடித்த Dilwale Dulhania Le Jayenge படம் தானாம்.

ஜாலியாக நடக்கலாம்

ஜாலியாக நடக்கலாம்

மேலும், அஷ்வின் தனக்கு ஏன் இங்கிலாந்து பிடிக்கும் என்று கூறுகிறார். அதில், "இங்கிலாந்திற்கு வருவதன் மிகப் பெரிய ஆசீர்வாதம், குறிப்பாக லண்டனின் பிரதான பெரிய தெருக்களில் நடப்பது... நீங்கள் சாலையில் சாதாரணமாக நின்று கொண்டு காபி குடிக்கலாம், சுற்றி உட்கார்ந்து பேசலாம். நீங்கள் யாருடன் செல்கிறீர்களோ அவர்களுடன் அமைதியாக அரட்டை அடிக்கலாம்" என்று இந்தியாவில் தனக்கு இல்லாத சுதந்திரத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

ரஹானே செம

ரஹானே செம

இந்திய துணை கேப்டன் ரஹானே கூறுகையில், "பூங்காக்களைச் சுற்றி நடப்பதும், குடும்பத்தினருடன் கஃபேக்கள் செல்வற்கு நான் விரும்பினாலும், எனது உடனடி பணி நியூசிலாந்திற்கு எதிராக நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது தான்" என்றார். (என்ன ஒரு கடமை உணர்ச்சி!)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
what Indian Cricketers Are Eating in England - இந்திய அணி
Story first published: Wednesday, June 16, 2021, 11:08 [IST]
Other articles published on Jun 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X