For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க பிரச்சனையை தீர்த்து வைக்க அவர் வேணும்.. அடம்பிடித்து அஸ்வினை வாங்கிய டிசி.. காரணம் இது தான்!

டெல்லி : ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் இருந்து வாங்கியது.

பஞ்சாப் அணி அஸ்வினை அணி மாற்றம் செய்ய உள்ளதாக கூறியதில் இருந்து பல மாதங்களாக பேரம் பேசி அஸ்வினை வாங்கி இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ்.

ஆடுகளம் தான் காரணம்

ஆடுகளம் தான் காரணம்

அஸ்வின் மீது அந்த அணி அதிக ஈடுபாடு காட்டியதற்கு என்ன காரணம்? அதற்கு முக்கிய காரணம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் சொந்த மைதானமான பெரோஸ் ஷா கோட்லாவின் ஆடுகளம் தான் என கூறப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் தடுமாற்றம்

டெல்லி டேர்டெவில்ஸ் தடுமாற்றம்

டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிர்ஷ்டம் இல்லாத அணியாக இருந்தது. பல சீசன்களாக பிளே-ஆஃப் பக்கமே எட்டிப் பார்க்காத நிலையில் இருந்தது அந்த அணி.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

2019 ஐபிஎல் தொடரில் அந்த அணி தன் பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றிக் கொண்டது. 2018 ஐபிஎல் தொடரின் பாதியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் என்ற இளம் வீரரை கேப்டனாக அறிவித்து, அவரையே 2019 சீசனிலும் கேப்டனாக தொடர வைத்தது.

கங்குலி, பாண்டிங் கூட்டணி

கங்குலி, பாண்டிங் கூட்டணி

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக இருந்த நிலையில், இந்திய சூழ்நிலையில் வீரர்களை வழிநடத்த கங்குலியை ஆலோசகராக நியமித்து அதிரடியில் இறங்கியது அந்த அணி.

பிளே-ஆஃப் சென்றது

பிளே-ஆஃப் சென்றது

இது எல்லாம் சேர்ந்து 2019 ஐபிஎல் தொடரில் அந்த அணியை பிளே-ஆஃப் வரை அழைத்துச் சென்றது. எனினும், அந்த அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. இந்த முறை ஐபிஎல் தொடரில் கோப்பை வென்றே தீருவது என்ற நோக்கத்தில் இருக்கும் அந்த அணிக்கு ஒரு பெரிய குறை உள்ளது.

ஒரே ஒரு குறை

ஒரே ஒரு குறை

டெல்லி கேபிடல்ஸ் அணியின் சொந்த மைதானத்தின் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. அதில் கலக்கலாக பந்து வீசி எதிரணியை நிலை குலைய வைக்க அதிக சர்வதேச அனுபவம் வாய்ந்த நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் இல்லை என்ற குறை இருந்தது.

உலகத்தரம் வாய்ந்தவர்

உலகத்தரம் வாய்ந்தவர்

இந்த நிலையில் தான் உலகத்தரம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளரான அஸ்வினை அணி மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அந்த அணியின் கேப்டனாக இருந்த அவரை வேறு அணிக்கு மாற்ற நடந்த இந்த முயற்சியில், துவக்கம் முதலே அதிக ஆர்வம் காட்டியது டெல்லி கேபிடல்ஸ்.

1.5 கோடி, ஒரு வீரர்

1.5 கோடி, ஒரு வீரர்

பல மாத பேரத்திற்குப் பின் அஸ்வினை 1.5 கோடி பணம் மற்றும் உள்ளூர் வீரர் ஜகதீஷா சுச்சித் ஆகியவற்றை கொடுத்து வாங்கி இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். இதன் மூலம் தங்கள் அணியின் சுழற் பந்துவீச்சை பலப்படுத்தி இருக்கிறது அந்த அணி.

பாண்டிங் நம்பிக்கை

பாண்டிங் நம்பிக்கை

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அஸ்வின் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு அதிக மதிப்பை சேர்ப்பார் என்று கூறிய அவர், டெல்லி ஆடுகளத்தில் அவர் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புவதாக கூறி இருக்கிறார்.

Story first published: Saturday, November 9, 2019, 22:17 [IST]
Other articles published on Nov 9, 2019
English summary
What made Delhi Capitals to buy Ashwin from KXIP? The reason is the Delhi’s home ground that supports spin bowling a lot.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X