For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை டீமில் எடுத்த உடன்.. கங்குலி பெருமையாக சொன்ன அந்த வார்த்தை.. வெளியான தகவல்!

கொல்கத்தா : இந்திய அணியில் தோனியை தேர்வு செய்தது சவுரவ் கங்குலி என பலரும் பல முறை கூறி உள்ளனர்.

Recommended Video

What Ganguly told about Dhoni before his debut?

ஆனால், முதலில் தோனியை அணியில் தேர்வு செய்த போது கங்குலி அவரைப் பற்றி என்ன நினைத்தார் தெரியுமா?

அது பற்றி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பத்திரிக்கையாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் இயக்குனரும் ஆன ஜோய் பட்டாச்சாரியா கூறி உள்ளார்.

டி20 உலக கோப்பை 2020 தள்ளி வைச்சாச்சு... ஐபிஎல் கண்டிப்பா நடக்கும்... ஆனா தோனி கேரியர் டி20 உலக கோப்பை 2020 தள்ளி வைச்சாச்சு... ஐபிஎல் கண்டிப்பா நடக்கும்... ஆனா தோனி கேரியர்

இந்தியா ஏ அணியில் தோனி

இந்தியா ஏ அணியில் தோனி

2004ஆம் ஆண்டு தான் தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். பீகார் அணியில் முதலில் ஆடி வந்தார் தோனி. அப்போது தேர்வுக் குழுவினரின் பார்வையில் பட்டார். அதன் பின் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றார்.

தேர்வு செய்யப்பட்ட தோனி

தேர்வு செய்யப்பட்ட தோனி

பாகிஸ்தான் ஏ, கென்யா ஏ அணிகளுடனான முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ அணி சார்பாக ஆடிய தோனி சிறப்பாக ஆடி இருந்தார். அதன் மூலம், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இருந்ததால் கங்குலி தோனியை தேர்வு செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

விமானத்தில்..

விமானத்தில்..

தோனியின் முதல் தொடர் வங்கதேச கிரிக்கெட் தொடர் தான். அப்போது இந்திய அணி வங்கதேசம் செல்ல தயாராக விமானத்தில் அமர்ந்து இருந்த போது கேப்டன் கங்குலி, ஜோய் பட்டாச்சாரியாவிடம் தோனி குறித்து பேசி உள்ளார்.

சாட்டையடி பேட்ஸ்மேன்

சாட்டையடி பேட்ஸ்மேன்

இன்னும் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட ஆடி இராத நிலையில் தோனியை சுட்டிக் காட்டி "எங்களிடம் ஒரு சாட்டையடி பேட்ஸ்மேன் இருக்கிறார்" என பெருமையாக சுட்டிக் காட்டி இருக்கிறார் கங்குலி. அப்போதே தோனியை பற்றி சரியாக கணித்துள்ளார் கங்குலி.

கங்குலி கணிப்பு

கங்குலி கணிப்பு

மேலும், இவரை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். தோனி பெரிய நட்சத்திரமாக மாறப் போகிறார் எனவும் ஜோய் பட்டாச்சாரியாவிடம் கூறி உள்ளார். கங்குலி சொன்னது பின்னர் அப்படியே உண்மை ஆனது. தோனி பெரிய கிரிக்கெட் ஜாம்பவானாக மாறினார்.

தனி இடம்

தனி இடம்

கங்குலி பல வீரர்களை அடையாளம் கண்டார். வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கானம் ஹர்பஜன் சிங் என இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் அவரால் அணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான். அவர்களில் தோனிக்கு தனி இடம் உண்டு.

சதம்

சதம்

தோனி தன் முதல் தொடரான வங்கதேச தொடரில் படு மோசமாகவே ஆடினார். ஆனாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். அடுத்து நடந்த பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் சாட்டையடி சதம் அடித்து மிரள வைத்து அணியில் தன் இடத்தை தக்க வைத்தார் தோனி.

Story first published: Wednesday, July 22, 2020, 17:31 [IST]
Other articles published on Jul 22, 2020
English summary
What Sourav Ganguly told about Dhoni before his debut?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X