For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை ஜெயிச்சது அவருதான்.. ஆனா டீம் என்னுது.. இது எப்படி இருக்கு? செம பன்ச் வைத்த கங்குலி!

மும்பை : 2011 உலகக்கோப்பை தொடரை தோனி சிக்ஸ் அடித்து வென்ற தருணத்தை மனம் விட்டு பாராட்டினார் கங்குலி.

Recommended Video

Sourav Ganguly recalls Dhoni's winning shot in World cup 2011

அப்படியே அந்த உலகக்கோப்பை அணியில் பல வீரர்களை உருவாக்கியது நான் தான் என நாசூக்காக சுட்டிக் காட்டினார்.

கங்குலி இணையத்தில் மாணவர்கள் இடையே உரையாற்றினார். அப்போது தான் தோனி உலகக்கோப்பை வென்றது குறித்து பாராட்டி பேசி, கூடவே பன்ச் வைத்துள்ளார்.

டி20 உலக கோப்பை, ஐபிஎல் ரெண்டுமே ஆடணும்... ரோகித் சர்மா விருப்பம் டி20 உலக கோப்பை, ஐபிஎல் ரெண்டுமே ஆடணும்... ரோகித் சர்மா விருப்பம்

2003 உலகக்கோப்பை

2003 உலகக்கோப்பை

2003 உலகக்கோப்பை தொடரை கேப்டனாக வழிநடத்திய கங்குலி, அப்போது அணிக்கு உத்வேகம் அளித்து இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அப்போது இந்திய வீரர்கள் பந்துவீச்சின் போது ஒவ்வொரு விக்கெட்டுக்கும் கூடி வட்டமாக நின்று பேசிய காட்சிகள் யாராலும் மறக்க முடியாது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

அந்த அளவுக்கு அணியை ஒருங்கிணைத்து ஒரு கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார் சவுரவ் கங்குலி. ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. அதன் பின் 2011 உலகக்கோப்பை தொடரில் தான் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது.

2011 உலகக்கோப்பை வெற்றி

2011 உலகக்கோப்பை வெற்றி

2011 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பெரும்பாலான போட்டிகளில் ஆடிய இந்திய அணி உலகக்கோப்பையையும் வென்றது. 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி உலகக்கோப்பை வென்றது.

கடைசி சிக்ஸ்

கடைசி சிக்ஸ்

தோனி கடைசி சிக்ஸ் அடித்து உலகக்கோப்பை வெற்றியை பெற்றுக் கொடுத்த அந்த தருணம் மறக்க முடியாத காட்சியாக இந்திய ரசிகர்கள் மனதில் பதிந்தது. அது பற்றி தன் உரையில் குறிப்பிட்டு பாராட்டினார் சவுரவ் கங்குலி.

கிரேட் தோனி

கிரேட் தோனி

"என்னைப் பொறுத்தவரை பெரிய நாள் என்றால் 2011 உலகக்கோப்பை வென்ற நாள் தான். கிரேட் தோனி.. அந்த ஷாட்.. கடைசி பந்தில் அடித்த அந்த சிக்ஸ் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நிலைத்து இருக்கும். என்ன தருணம் அது.." என்றார் கங்குலி.

மகிழ்ச்சியாக இருந்தது

மகிழ்ச்சியாக இருந்தது

"2003இல் நான் கேப்டனாக இருந்த அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அதனால், தோனிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என 2003 உலகக்கோப்பை தோல்வியை குறிப்பிட்டார் கங்குலி.

விட்டுச் சென்ற அணி

விட்டுச் சென்ற அணி

"உலகக்கோப்பை வென்ற அணியில் ஏழு அல்லது எட்டு வீரர்கள் எனக்கு கீழ் ஆடத் துவங்கியவர்கள். சேவாக், தோனி, யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர். ஒரு கேப்டனாக அந்த பெருமையை விட்டுச் சென்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறி உள்ளார் கங்குலி.

விமர்சனம்

விமர்சனம்

சிலர் தோனியின் வெற்றிகளுக்கு காரணம், கங்குலி விட்டுச் சென்ற பலமான அணி தான் என விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கங்குலியே அதை நாசூக்காக கூறி தான் விட்டுச் சென்ற அணி உலகக்கோப்பை வென்றது என பன்ச் வைத்து பேசி இருக்கிறார்.

Story first published: Monday, June 15, 2020, 11:22 [IST]
Other articles published on Jun 15, 2020
English summary
Sourav Ganguly says players started career under him won 2011 World cup. He praised Dhoni for his victory but he also mentions his legacy behind that victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X