For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரப்போகுதா? பேச்சுவார்த்தை கூட நடந்ததாமே!!

மும்பை : கங்குலி தன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுமா என்பது குறித்து பேசியுள்ளார். ஏற்கனவே, கங்குலியின் சுயசரிதை புத்தகம் வெளியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

கங்குலி ஏற்கனவே இதற்காக யார் தன்னை அணுகினார்கள் என்பது குறித்து கூறியுள்ளார். மேலும், தனக்கு பிடித்த கிரிக்கெட் திரைப்படங்கள் பற்றியும் கூறினார்.

பேச்சு நடந்தது

பேச்சு நடந்தது

சில மாதங்கள் முன்பு கங்குலியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பாலிவுட் திரைப்படம் ஒன்று தயாராக உள்ளதாக செய்தி அடிபட்டது. அது பற்றி கங்குலியிடம் பேசுகையில், "இதை எடுக்கப்போவது ஏக்தா கபூர் என்றால், அந்த செய்தி உண்மை. அவர் என்னை இது தொடர்பாக ஒருமுறை என்னிடம் பேசினார். அதன்பின் வேறு அது வளரவில்லை" என தெரிவித்தார்.

இதுவரை யோசிக்கவில்லை

இதுவரை யோசிக்கவில்லை

மேலும், "சில விளையாட்டு வீரர்கள் பற்றிய படங்கள் வந்து இருந்தாலும், நான் என் வாழ்க்கை வரலாறு படம் பற்றி யோசிக்கவில்லை. நேரம் இருந்தால் யாராவது அதை எடுக்கலாம். மக்கள் அதை பார்க்க விரும்புவார்கள் என நம்புகிறேன்" என கூறினார் கங்குலி.

பிடித்த படம் எது?

பிடித்த படம் எது?

மேலும், தோனி மற்றும் சச்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் பற்றிய தன் கருத்தை கூறினார். "எனக்கு எம்.எஸ்தோனி திரைப்படத்தை விரும்பினேன். டெண்டுல்கர் திரைப்படம் சற்று வித்தியாசமானதாக இருந்தது. இப்போது 1983 உலகக்கோப்பை வென்ற அணி குறித்த திரைப்படம் உருவாகி வருகிறது. அதை நிச்சயம் பார்ப்பேன்" என கூறினார்.

கங்குலி படம் வருமா?

கங்குலி படம் வருமா?

பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு தொடர்பான திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வகையில் கங்குலியின் திரைப்படம் வெளியானால், பெரிய வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Story first published: Friday, January 18, 2019, 15:39 [IST]
Other articles published on Jan 18, 2019
English summary
What Sourav Ganguly told about his Biopic movie?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X