For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே.. உலக கோப்பை 'பிக்ஸ்' செய்யப்பட்டதா வந்த வாட்ஸ் அப் மெசேஜ் பொய்யா போச்சே!

By Veera Kumar

கிறைஸ்ட்சர்ச்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகவும், இந்தியாவுக்கு மீண்டும் கோப்பை கிடைக்காது என்றும், தென் ஆப்பிரிக்காதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போவதாகவும் ஒரு பரபரப்புச் செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. அந்த தகவலுக்கேற்ப முதல் 9 போட்டிகளின் முடிவுகளும் இருந்தன. ஆனால் பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் போட்டியின் முடிவு வாட்ஸ்அப் மெசேஜை தவறு என்று உறுதி செய்துவிட்டது.

தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஒரு மெசேஜில், ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கனவே ஃபிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று கூறப்பட்டுள்ளது.

9 போட்டிகளிலுமே ரிசல்ட் பக்கா

9 போட்டிகளிலுமே ரிசல்ட் பக்கா

முதல் 9 போட்டிகளிலும் அச்சு பிறளாமல் வாட்ஸ்அப்பில் இருப்பது போலவே, ரிசல்ட் சரியாகவும் வந்துவிட்டது. குறிப்பாக அயர்லாந்து, மே.இ.தீவுகளை வெல்லும் என்று கூறியதைப்போலவே அதிர்ச்சியளிக்கும் விதமாக அயர்லாந்து வெற்றியும் பெற்றது. நேற்று நடைபெற்ற நியூசிலாந்து-இங்கிலாந்து போட்டிவரை வாட்ஸ்அப் மெசேஜ் சரியாகவே இருந்தது.

இன்னைக்கு மாறிடுச்சே..

இன்னைக்கு மாறிடுச்சே..

ஆனால் இன்றைய போட்டியில், மேற்கிந்திய தீவுகளை பாகிஸ்தான் வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் மிக மோசமாக 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் மெசேஜ் ரிசல்ட், முதல் முறையாக மாறியுள்ளது. உண்மையிலேயே வாட்ஸ் அப் மெசேஜ் பொய்த்துப்போயுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அதிலும் இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில், வாட்ஸ் அப் மெசேஜ் படி, நாளைய போட்டியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Saturday, February 21, 2015, 11:27 [IST]
Other articles published on Feb 21, 2015
English summary
A message on WhatsApp smartphone messenger, has gone viral, which says all 49 matches of ICC World Cup 2015 matches are "fixed". And to everyone's shock, the results predicted in the message have come true. But WhatsApp 'fixing' message had said Pakistan will win, proved wrong in today match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X