
5வது டெஸ்ட் போட்டி
கடந்தாண்டு இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் தற்போது பிர்மிங்கம் நகரத்தில் நடைபெறவிருக்கிறது.

போட்டி நேரம் என்ன
போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால், இந்திய நேரப்படி எப்போது போட்டி தொடங்கும் என்பது குழப்பமாகவே இருந்தது. இந்நிலையில் இந்திய ரசிகர்களையும் மனதில் வைத்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் போட்டியானது ஜூலை 1ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் ஒருநாளைக்கு 7 மணி நேரம் ஆட்டம் நடைபெறும்.

நேர அட்டவணை
ஆட்டத்தின் முதல் செஷன் மதியம் 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மதிய உணவு இடைவேளை முடிந்து மாலை 5.40 மணிக்கு 2வது செஷன் தொடங்கி இரவு 7.40 மணிக்கு முடிவடைகிறது. இதன்பின்னர் தேநீர் இடைவேளை கொடுத்து இரவு 8 மணிக்கு 3வது செஷன் தொடங்குகிறது. போட்டி 10 மணிக்கு முடிவடைகிறது.

எங்கு & எப்படி பார்ப்பது
இந்த போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதால், சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 ஆகிய சேனல்களில் ரசிகர்கள் காணலாம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த முறை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்யாது.