சர்பிராஸ் கானை இந்திய அணியில் எப்போது சேர்ப்பீங்க.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி

ராஜ்கோட் : இந்திய கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் கானை எப்போது அணியில் சேர்ப்பீர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி பாராட்டி வருகின்றனர்.

இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசி சர்பிராஸ் கான் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

நடப்பாண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். குறிப்பாக ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி, துலீப் கோப்பை இறுதிப்போட்டி ,நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி என அனைத்திலும் சதம் விளாசிய சர்ஃப்ராஸ்கான், தற்போது இராணி கோப்பையிலும் சதம் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சர்பிராசை பாராட்டியுள்ள சக மும்பை அணி வீரர் சூரியகுமார் யாதவ், உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். சூரியகுமார் யாதவ் 30 வயது தாண்டிய பிறகு தான் இந்திய அணிக்குள் வந்தார். இதனால் சப்ராஸ்கானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் இப்படி பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பா இந்த சிறுவனுக்கு உடனடியாக டெஸ்ட் போட்டியின் உபகரனங்களை கொடுங்கள் என்று இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கும்படி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே இந்தியா அடுத்த டெஸ்ட் தொடர் விளையாடும் நாள் நீண்ட தூரத்தில் உள்ளது. ஆனால் சர்பிராஸ் கான் தம்மை தேர்ந்தெடுக்க பலமான காரணத்தை தனது ஆட்டத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
When will sarfaraz khan will selected for indian team - cricketers lauds young prodigyசர்பிராஸ் கானை இந்திய அணியில் எப்போது சேர்ப்பீங்க.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி
Story first published: Saturday, October 1, 2022, 23:39 [IST]
Other articles published on Oct 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X