For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup 2019: சச்சினின் இந்த சாதனைக்கு வயது 16.... முறியடிக்க எந்த வீரராவது இருக்கீங்களா?

மும்பை:உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் 16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சச்சினின் சாதனை இம்முறையாவது முறியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அணிகளும் தயார், கண்டுகளிக்க ரசிகர்கள் தயார். இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் 6ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனையை வரும் உலக கோப்பை தொடரில் யார் முறியடிப்பார்கள்? இந்த ஆண்டாவது இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்று கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் உலா வரத் தொடங்கி விட்டன.

தோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா? நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்!! தோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா? நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சச்சின் குவித்த 673 ரன்கள்

சச்சின் குவித்த 673 ரன்கள்

அது நடந்தது 2003ம் ஆண்டு உலக கோப்பை.... 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்கள் குவித்தார் சச்சின் டெண்டுல்கர். இதுவே உலக கோப்பை தொடரில் தனி நபர் அடித்த அதிக ரன்கள் ஆகும். 2003-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய இந்த சாதனையை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை.

16 ஆண்டுகால சாதனை

16 ஆண்டுகால சாதனை

2003 உலக கோப்பை தொடரில் ஒரு சதம், 6 அரை சதங்களை அடித்துள்ளார் சச்சின். இந்த சாதனை நிகழ்த்தி, கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகி விட்டன. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சில வீரர்கள் இந்த தொடரில் சச்சினின் சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டியலில் யார்? யார்?

பட்டியலில் யார்? யார்?

அந்த தொடர்பான உத்தேச பட்டியலையும் ரசிகர்களே வெளியிட்டு இருக்கின்றனர். அதில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அவரை தொடர்ந்து இங்கிலாந்தின் ஜானி பெயர்ஸ்டோவ், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மேற்கிந்திய தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், இந்தியாவின் ஹிட் மேன் ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

இதுவும் சாதனை தான்

இதுவும் சாதனை தான்

இவர்களில் யார் இந்த சாதனையை முறியடிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. சச்சின் கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த தலைமுறை ஆட்டக்காரர்களும் வலம் வர தொடங்கி விட்டனர். ஆனாலும்... அவர் சாதனை இன்று வரை முறியடிக்கப் படாமல் இருப்பதே ஒரு சாதனை தான்.

Story first published: Friday, May 17, 2019, 11:51 [IST]
Other articles published on May 17, 2019
English summary
who can break Sachin's 16 year old record in world cup history?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X