For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் இந்த அஜாஸ் பட்டேல்..?? சொந்த ஊரில் சாதனை படைத்த நியூசி.வீரர்..!!

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்கு காரணம் அஜாஸ் படடேல்..

Recommended Video

Virat Kohli, Dravid visit NZ's dug-out, congratulate history-maker Ajaz Patel | Oneindia Tamil

அஜாஸ் யூனிஸ் பட்டேல் பிறந்தது மும்பை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? தனது 8 வயது வரை மும்பையில் வசித்து வந்த அஜாஸ் பட்டேல், பிறகு நியூசிலாந்துக்கு குடும்பத்துடன் குடியேறினார்.

கிரிக்கெட் மீது காதல் கொண்ட அவர் நியூசிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அடியேடுத்து வைத்தார்.

பட்டேல் சுழலில் ஆட்டம் கண்டது இந்தியா.. 325 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!பட்டேல் சுழலில் ஆட்டம் கண்டது இந்தியா.. 325 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!

உள்ளூர் போட்டி

உள்ளூர் போட்டி

2015 ஃபோர்ட் கோப்பையில் அஜாஸ் பட்டேல் முதல் முறையாக களமிறங்கினார். அதன் பின் நடைபெற்ற பிளங்கட் ஷீல்ட் கோப்பை தொடரில் ஒரே சீசனில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதே போன்று 2016/17ஆம் ஆண்டு சீசனில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஜாஸ் பட்டேல்.2018ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளுக்கான சிறந்த வீரர் என்ற விருதை அஜாஸ் பட்டேல் பெற்றார்.

முதல் போட்டி

முதல் போட்டி

இதன் பின்னர் 2018ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார் அஜாஸ் பட்டேல். இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. பாகிஸ்தான் 141 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்த போது தனது மாயஜால பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த ஊரான மும்பைக்கு வந்த அஜாஸ் பட்டேல், காலத்திற்கும் அழியாத சாதனையை படைத்தார். இந்த 10 விக்கெட்டுகளில் உங்களுக்கு பிடித்த விக்கெட் எது என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு, விக்கெட்டுகள் பற்றி ஏதும் இல்லை. நல்ல பந்துகளை வீசுவது பொருத்து தான் உள்ளது என்று பதில் அளித்தார்.

வேக பந்துவீச்சு

வேக பந்துவீச்சு

அஜாஸ் பட்டேல் முதலில் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது அவருக்கு போதிய உயரம் இல்லாததால் அவரது பயிற்சியாளர் சுழற்பந்துவீச்சை தேர்வு செய்ய அறிவுறுத்தினார். 30 வயதுக்கு பிறகு ஏதும் சாதிக்க முடியாது என்று நினைக்கும் இளைஞர்களே, அஜாஸ் பட்டேல், 4 வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கிய பிறகு, 30 வயதில் தான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் பட்டேலுக்கு தற்போது வயது 33..

Story first published: Saturday, December 4, 2021, 17:02 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Ajaz Patel Picks 10 Wickets in a innings against India. Ajaz Patel created History in Mumbai .Ajaz Patel Joins Elite club .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X