For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த இளம் நடுவர்”.. ஐபிஎல் தொடரில் பங்கேற்பா?.. அப்படி என்ன ஸ்பெஷல்!

மும்பை: லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் மூலம் பிரபலமடைந்த இளம் பெண் அம்பயர் ஒருவரை ஐபிஎல் தொடருக்கும் நியமிக்க வேண்டும் எனும் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னாள் வீரர்கள் பங்குபெறும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு வீரர்களை விட, கள நடுவர்கள் தான் அதிக கவனம் பெற்று வருகின்றன. ஏனென்றால் முற்றிலும் பெண் நடுவர்கள் இந்த தொடருக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2022: டெல்லிக்கு தாவும் மும்பையின் முக்கிய வீரர்.. 3 அதிரடி வீரர்களை டார்கெட் செய்த பாண்டிங்!ஐபிஎல் 2022: டெல்லிக்கு தாவும் மும்பையின் முக்கிய வீரர்.. 3 அதிரடி வீரர்களை டார்கெட் செய்த பாண்டிங்!

 பெண் அம்பயர்

பெண் அம்பயர்

குறிப்பாக சுப்தா போஷ்லே கெயிக்வாட் என்ற நடுவரின் புகைப்படன் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகவும் இளமையான கிரிக்கெட் நடுவரான அவரை ஐபிஎல் தொடருக்கும் நடுவராக நியமிக்க வேண்டும் என கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அப்படிபட்ட சுப்தா போஷ்லே யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

யார் அவர்?

யார் அவர்?

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரத்தை சேர்ந்தவர் சுப்தா. இவரின் தந்தை கிரிக்கெட் பயிற்சியாளர், அவரின் சகோதரர், உறவினர்கள் என பலரும் ரஞ்சிக்கோப்பை வீரர்களாக இருந்துள்ளனர். இதன் காரணமாகவே சுப்தா கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளார். மத்திய பிரதேச அணிக்காக U 16, U 19 தொடர்களில் விளையாடிய அவர், அதன்பின்னர் தனது பாதையை மாற்றினார்.

கல்லூரியில் பணி

கல்லூரியில் பணி

அம்பயரிங்கில் O பிரிவை முடித்த அவர் 2012ம் ஆண்டு முதல் முக்கிய உள்நாட்டு தொடர்களுக்கு களநடுவராக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் மிகவும் இளமையான பெண் நடுவர் என்ற பெருமையும் இவரையே சேரும். தற்போது இவர் தனியர் கல்லூரியில் விளையாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இனி வரும் முக்கிய தொடர்களில் நடுவராக அழைக்கப்படுவார் எனத்தெரிகிறது.

 ஐபிஎல் தொடரில் வாய்ப்பு

ஐபிஎல் தொடரில் வாய்ப்பு

ஆனால் ஐபிஎல் தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஐபிஎல் தொடரில் அதிகப்படியான பந்துகள் அம்பயர் நிற்கும் திசைகளிலும் பறக்கும் என்பதால் பாதுகாப்பு பிரச்சினைகள் அவருக்கு அதிகம் இருக்கலாம். இதன் காரணமாக பிசிசிஐ வித்தியாச முயற்சிகளை செய்யாது எனத்தெரிகிறது.

Story first published: Saturday, January 29, 2022, 19:15 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Fans requesting BCCI to appoint Shubhda Bhosle Gaikwad, the young umpire for IPL 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X