For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சிஏ பரீட்சை வேண்டாம்; கிரிக்கெட் விளையாடு" ... அம்மா அட்வைஸால் ஐபிஎல்-ல் சாதித்த வெங்கடேஷ் ஐயர்

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ரசிகர்களின் கவனத்தை வருண் சக்கரவர்த்திக்கு பிறகு ஈர்த்தவர் வெங்கடேஷ் ஐயர் தான்.

Recommended Video

Who is Venkatesh Iyer? From MBA Student to KKR's debutant? | IPL 2021 | OneIndia Tamil

ஆறடிக்கும் மேல் உயரமுள்ள வெங்கடேஷ், கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கி, ஆர்சிபி பவுலர்கள் அனைவரையும் ஓடவிட்டார்.

கேகேஆர் நிர்வாகமே இவர் இந்தளவு சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்திருக்காது போல. அந்தளவு நேற்று அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

RCB vs KKR: அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் நன்கொடை - சிலிர்க்க வைக்கும் ஆர்சிபி அணிRCB vs KKR: அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் நன்கொடை - சிலிர்க்க வைக்கும் ஆர்சிபி அணி

 90 மீட்டர் சிக்ஸ்

90 மீட்டர் சிக்ஸ்

குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்திய கைல் ஜேமிசன் ஓவரை, நேற்று வெங்கடேஷ் லெஃப்டில் டீல் செய்தது வியக்க வைத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வெங்கடேஷ் 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகளும், 1 மெகா சிக்ஸரும் அடங்கும். அவர் சிக்ஸ் அடித்தது கைல் ஜேமிசன் ஓவரில். அதுவும், 90 மீட்டர் சிக்ஸ் அது. நேற்று தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் அவர் விளையாடினார். ஆனால், கண்களிலும் துளி பயம் இல்லை. அவரது ஷார்ட்ஸ் பதட்டமின்றி பறந்தன. ஏதோ, 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தேர்ந்த கிரிக்கெட்டரைப் போல பந்துகளை க்ளீயர் செய்தார் வெங்கடேஷ். இதன் மூலம் கொல்கத்தா அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக வெங்கடேஷ் உருவடுத்துள்ளார்.

 எந்நேரமும் படிப்பே கதி

எந்நேரமும் படிப்பே கதி

இதில் ஆச்சர்யம் என்னவெனில், "கிரிக்கெட் தான் என் உயிர் மூச்சு" என்ற எண்ணமே இல்லாதவர் வெங்கடேஷ். அவருக்கு தெரிந்ததெல்லாம் படிப்பு.. படிப்பு.. படிப்பு... பள்ளிக் காலத்தில் இருந்தே படிப்பில் கில்லியாக விளங்கியவர் இவர். எந்நேரமும், தனது அறையில் புத்தகமும், கையுமாக இருந்தவரை, அவரது அம்மா தான் கையில் பேட்டை கொடுத்து, போய் வேர்க்க விறுவிறுக்க கிரிக்கெட் விளையாடு வலுக்கட்டாயமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக தள்ளி, இன்று ஐபிஎல் வரை கொண்டு வந்திருக்கிறார்.

 படிப்பே முக்கியம்

படிப்பே முக்கியம்

சிஏ படித்த 2016 இல் இடைநிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார், அப்போது அவர் ஒரு முடிவை எடுத்தார். அதாவது, சிஏ இறுதிப் போட்டிக்கு முயற்சிப்பதால் விளையாட்டை கைவிடுவது அல்லது குறைந்தபட்சம் தற்காலிகமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்தார். ஏனெனில், மத்தியப் பிரதேச அணிக்காக அவர் ஏற்கனவே டி 20 மற்றும் 50 ஓவர்கள் போட்டிகளில் விளையாடி வந்தார். தவிர மாநிலத்தின் 23 வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

 நல்ல மதிப்பெண் பெற்றேன்

நல்ல மதிப்பெண் பெற்றேன்

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், "நான் சிஏவை விட்டுவிட்டு எம்பிஏ நிதியியல் படிக்க முடிவு செய்தேன். நான் நிறைய நுழைவுத் தேர்வுகள் எழுதினேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றேன், ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்தேன். எனினும், நான் கிரிக்கெட்டும் விளையாடினேன். இதனால், என் மீது நம்பிக்கை வைத்து அனைவரும் என்னை கிரிக்கெட் பாதையில் திசைத்திருப்பினார்கள். உண்மையாக சொல்ல வேண்டுமெனில், நான் எப்போதும் ஒரு பிரகாசமான மாணவனாக இருந்தேன். நான் கிரிக்கெட் விளையாட வராமல் இருந்திருந்தால், நான் ஒரு ஐஐடி (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) அல்லது ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) ஆகியவற்றில் ஒரு ரவுண்டு வந்திருப்பேன்

 தனி வழியில் செல்வேன்

தனி வழியில் செல்வேன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் ஒரு வசனம் வரும். "என் வழி தனி வழி என்று.. என்னோட வழியும் அப்படித்தான். நான் எப்போதும் தனி வழியில் செல்பவன். இது ஒரு அற்புதமான பயணம், இன்னும் பல கற்றல் மற்றும் நல்ல அனுபவங்களுடன் மென்மேலும் வளர விரும்புகிறேன்" என்று முடித்துள்ளார்.

Story first published: Tuesday, September 21, 2021, 16:55 [IST]
Other articles published on Sep 21, 2021
English summary
who is venkatesh iyer smashed rcb bowlers - வெங்கடேஷ் ஐயர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X