For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷிகர் தவானா? சுப்மான் கில்லா? 2023 உலககோப்பையில் தொடக்க வீரர் யார்? கவாஸ்கர் "நச்" பதில்

டாக்கா : அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக ஷிகர் தவான் இருக்க வேண்டுமா? இல்லை சுப்மான் கில் இருக்க வேண்டுமா என்பது குறித்து சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களுக்கு என அரை டசன் கணக்கில் இளம் வீர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரோகித் சர்மா , ஷிகர் தவான், சுப்மான் கில், இஷான் கிஷன், ருத்ராஜ் கெய்க்வாட், ரிஷப் பந்த் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் சராசரி என்ன தெரியுமா? ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு தேவை.. தினேஷ் கார்த்திக் ஆதரவு! ஒருநாள் கிரிக்கெட் சராசரி என்ன தெரியுமா? ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு தேவை.. தினேஷ் கார்த்திக் ஆதரவு!

சுப்மான் ரெக்கார்ட்

சுப்மான் ரெக்கார்ட்

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சுப்மான் கில் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்தி வருகிறார். குறிப்பாக 15 ஒரு நாள் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள சுப்மான் கில் 687 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதமும் நான்கு அரை சதமும் அடங்கும். சராசரியாக 57 ரன்கள் அடித்து வருகிறார். ஆனால் ஷிகர் தவான் கடந்த சில ஆட்டங்களாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

திறமையான வீரர்

திறமையான வீரர்

இதனால் ஷிகர் தவான் அணிக்கு தேவையா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சுப்மான்கில் திறமையான வீரராக இருக்கிறார். அவர் ரன் சேர்க்கும் விதம் நிச்சயம் ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஆனால் சுப்மான் கில் அவருடைய உண்மையான திறமைக்கு நியாயம் சேர்க்கவில்லை. அவர் எப்போதும் ஐம்பது ரன்கள் எடுத்துவிட்டு ஆட்டம் இழந்து விடுகிறார்.

 இடம் கிடைக்காது

இடம் கிடைக்காது

வெறும் 50 60 ரன்கள் எடுத்தால் உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காது. சில சமயம் ரன் அடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தும் போது 50 ரன்களில் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழப்பது சகஜம் தான். ஆனால் 50 , 60 ரன்களை விட 120 ரன்கள் அடிக்கும் வீரர் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். எப்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் இடது கை , வலது கை பேட்ஸ்மேன் ஆக இருப்பது நல்லது.ஷிகர் தவான் இடது கைவிரல் என்பது மட்டுமல்ல பல அனுபவத்தை கொண்ட வீரராக திகழ்கிறார்.

அனுபவம் வாய்ந்தவர்

அனுபவம் வாய்ந்தவர்

என்னை கேட்டால் டி20 கிரிக்கெட் ஷிகர் தவான் களமிறங்க வேண்டும் என்று நான் சொல்வேன். ஷிகர் தவான் பல சாதனைகள் செய்த பிறகும் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என எண்ணுகிறார். இப்போது அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டு அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும். முக்கிய வீரர்கள் இல்லாத போது ஷிகர் தவான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிலைமை மாற வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 5, 2022, 22:04 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
Who will get chance to be a opening batsman - shubman gill or shikhar dhwan - Gavaskar answers ஷிகர் தவானா? சுப்மான் கில்லா? 2023 உலககோப்பையில் தொடக்க வீரர் யார்? கவாஸ்கர் "நச்" பதில்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X