For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்.. ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும் மற்ற வீரர்களுக்கு போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக யார் களமிறங்குவார்கள் என்று தற்போது பார்க்கலாம்.

8 மாதங்களாக டி20 யில் சொதப்பும் இஷான் கிஷன்.. விமர்சனத்துக்கு லைக் செய்து மாட்டி கொண்ட இந்திய வீரர் 8 மாதங்களாக டி20 யில் சொதப்பும் இஷான் கிஷன்.. விமர்சனத்துக்கு லைக் செய்து மாட்டி கொண்ட இந்திய வீரர்

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என தனது நீண்ட கால ஆசையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் நடுவரிசையில் ஒரு அதிரடி வீரர் வேண்டும் என சூர்யகுமார் யாதவை தேர்வுக்குழு சேர்த்துள்ளது. இதுவரை 79 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 5549 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 14 சதமும் 28 அரை சதமும் அடங்கும்.

கடைசி 2 டெஸ்ட்

கடைசி 2 டெஸ்ட்

சூரியகுமார் யாதவ் ஒரு இன்னிங்சில் சராசரியாக 44 ரன்கள் அடித்திருக்கிறார். நடப்பு சீசனில் கூட சூரியகுமார் யாதவ் 2 ரஞ்சி போட்டிகள் விளையாடி 223 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். எனினும் சூரியகுமார் யாதவ் டி20 போல மற்ற கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சுப்மன் கில்

சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக சுப்மன் கில் இடம்பெற்றாலும் டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் இடத்தில் கே.எல் ராகுலுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் சுப்மன் கில் பெஞ்சில் அமர வேண்டிய நிலை தான் இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் இல்லை என்றால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் நடு வரிசையில் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலியை போல் சுப்மன் கில் நடுவரசையில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம்.

சர்பிராஸ் கான்

சர்பிராஸ் கான்

கிரிக்கெட் அணியில் எப்படியாவது இடம் கிடைக்க வேண்டும் என போராடி வருபவர் சர்பிராஸ் கான். ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடும் சர்பிராஸ் கான் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக டான் பிராட்மேன் பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை 38 போட்டிகளில் விளையாடி 13 சதம், 9 அரை சதமும் சர்பிராஸ் கான் அடித்திருக்கிறார். இதனால் முதல் டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜடேஜா -அக்சர்பட்டேல்

ஜடேஜா -அக்சர்பட்டேல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சுழற்பந்து வீச்சை பலப்படுத்த வேண்டும் என நினைத்தால் அவர்கள் ஜடேஜா மற்றும் அக்சர்பட்டேல் என இருவரையும் சேர்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ஜடேஜாவை சேர்த்து அதன் பிறகு அஸ்வின் குல்திப் யாதவ், அக்சர்பட்டேல் என மூன்று வீரர்களையும் விளையாட வைக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படி செய்தால் இந்திய அணியின் பந்துவீச்சு பலம் மேலும் அதிகரிக்கும். எனினும் ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்ம் பொருத்து இது குறித்து ரோகித் சர்மா முடிவு எடுப்பார்.

Story first published: Wednesday, February 1, 2023, 16:31 [IST]
Other articles published on Feb 1, 2023
English summary
Who will replace shreyas iyer in the first test vs australia ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்.. ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X