ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு?

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டதற்கு பின் இருக்கும் முக்கியமான காரணம் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார். 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை பிப்ரவரி 11ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை வரை ஐபிஎல் அணிகள் தாங்கள் வெளியேற்றும் வீரர்களின் லிஸ்டை தயாரிக்க முடியும்.

இவங்கதான் வேண்டும்.. தொடர் வெற்றிக்கு பின் கறாராக சொன்ன கோலி.. மீட்டிங்கில் காரசார விவாதம்.. பின்னணி

அந்த வகையில் சிஎஸ்கே அணி முதல் ஆளாக ஹர்பஜனை வெளியேற்றி அவரின் ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

சிஎஸ்கே அணியில் இருந்து ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டதற்கு பின் இருக்கும் முக்கியமான காரணம் வெளியாகி உள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் போது இவர் பாதியில் வெளியேறியதுதான் இதற்கு முக்கிய காரணம். சிஎஸ்கே அணி கடுமையான கஷ்டத்தில் இருந்த போது ஹர்பஜன் பாதியில் தொடரிலிருந்து வெளியேறினார். இது சிஎஸ்கேவை பாதித்தது.

மோசம்

மோசம்

அதேபோல் 2020 ஐபிஎல் தொடரின் போதே சிஎஸ்கே அணியை அவ்வப்போது ஹர்பஜன் கிண்டல் செய்து இருந்தார். தோனியின் வயதை தாக்கி பேசும் வகையில் ஹர்பஜன் கிண்டல் செய்தார். ஒரு போட்டியில் தோனி ஓடும் போது மூச்சு வாங்கியதை ஹர்பஜன் மறைமுகமாக கிண்டல் செய்து இருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

தோனியை பதான் கிண்டல் செய்த சமயங்களில் பதானுக்கு ஆதரவாக ஹர்பஜன் கருத்து தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக ஹர்பஜன் மீது தோனி வருத்தத்தில் இருந்தார். அதோடு மொத்த சிஎஸ்கே அணியையும் கூட ஹர்பஜன் அவ்வப்போது கிண்டல் செய்து வந்தார்.

கோபம்

கோபம்

இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஹர்பஜன் மீது கோபத்தில் இருந்தது. இதை தொடர்ந்தே மொத்தமாக ஹர்பஜனை அணியில் இருந்து நீக்கும் முடிவை சிஎஸ்கே எடுத்துள்ளது. இவருடனான ஒப்பந்தத்தை சிஎஸ்கே இன்றி முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Why CSK team released Senior Spin Bowler Harbhajan Singh as a first player for IPL 2021?
Story first published: Wednesday, January 20, 2021, 15:14 [IST]
Other articles published on Jan 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X