For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை பழிவாங்க கோயங்கா எடுத்த முடிவு..!! மீண்டும் ஐ.பி.எல்க்கு வந்த கம்பீர்..!! பின்னணி என்ன?

லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுக்காலம் தடை விதிக்கப்பட்ட போது தோனி புனே அணிக்காக விளையாடினார்.

அந்த 2 ஆண்டுகள் தோனி ரசிகர்கள் மறக்க நினைக்கும் ஆண்டுகள். புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கொயங்கா தோனியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தினார்

இதனை பொறுத்து கொள்ள முடியாத தோனியின் மனைவி, கொயங்காவை வெளிப்படையாகவே விமர்சித்தார்.

மறக்கமுடியாத 2021: தோனி எடுத்த சபதம் முதல்.. பிரிந்து சென்ற வீரர்கள் வரை.. சிஎஸ்கேவின் சுவாரஸ்யங்கள்மறக்கமுடியாத 2021: தோனி எடுத்த சபதம் முதல்.. பிரிந்து சென்ற வீரர்கள் வரை.. சிஎஸ்கேவின் சுவாரஸ்யங்கள்

கேப்டன் பதவி பறிப்பு

கேப்டன் பதவி பறிப்பு

புனே அணிக்கு தோனி ஒரு சீசனில் கேப்டனாக இருந்தார். அப்போது அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கொயங்கா, தோனியை விமர்சித்து, மட்டம் தட்டியே டிவிட் போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தோனியை விட ஸ்மித் தான் சிறந்த வீரர் என்று கூறி தோனியை கேப்டன் பதவியை விட்டு நீக்கி ஸ்மித்துக்கு அந்த பொறுப்பை வழங்கினார்

தோனியின் பதிலடி

தோனியின் பதிலடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை முடிந்ததும் தோனி, தனது ஜெர்சியை அணிந்து கெத்தாக புகைப்படத்தை பதிவிட்டு கொயங்காவுக்கு பதிலடி தந்தார். இதனால் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு எப்படியாவது வர வேண்டும் என 9 ஆயிரம் கோடி வரை செலவு செய்துள்ள கொயங்கா, தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ளார்.

காய்நகர்த்தும் கொயங்கா

காய்நகர்த்தும் கொயங்கா

தோனிக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக சென்னை அணிக்கு விளையாடிய வீரர்களை இப்போதே கொயங்கா குறிவைத்து காய் நகர்த்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் கம்பிரை தனது அணியின் வழிநடத்தக் கூடிய மெண்டராக நியமித்துள்ளார் கொயங்கா.

கம்பீருக்கு பொறுப்பு

கம்பீருக்கு பொறுப்பு

கம்பிருக்கு தோனியின் பெயரை கேட்டாலே ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தோனியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொயங்கா கம்பிரை வைக்கு காய் நகர்த்தியுள்ளார். கொயங்காவின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ள கம்பீர் , வெற்றி பெற வேண்டும் என்ற வெறி தன்னுள் இருப்பதாகவும், தற்போது அதற்கான வாய்ப்பு வழங்கியதற்கு கம்பீர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Saturday, December 18, 2021, 19:36 [IST]
Other articles published on Dec 18, 2021
English summary
Why Gambhir appointed as Mentor for Lucknow Franchise தோனியை பழிவாங்க கொயங்கா எடுத்த முடிவு. மீண்டும் ஐபி.எல்.க்கு வந்த கம்பீர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X