இந்தியா ஏன் ஃபாலோ ஆன் தரவில்லை தெரியுமா?? விராட் கோலியின் சூப்பர் பிளான்!!

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில்325 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

“என்னடா இது ஒன்னுமே புரியலயே”.. மும்பை பிட்ச் கொடுத்த திடீர் சர்ஃபரைஸ்.. கதிகலங்கிப்போன நியூஸி, அணி!“என்னடா இது ஒன்னுமே புரியலயே”.. மும்பை பிட்ச் கொடுத்த திடீர் சர்ஃபரைஸ்.. கதிகலங்கிப்போன நியூஸி, அணி!

ஃபாலோ ஆன்

ஃபாலோ ஆன்

263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் தரும் (அதாவது மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கும்) என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் விராட் கோலி ஃபாலோ ஆன் தராமல் மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.( 200 ரன்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தால், எதிரணியை மீண்டும் பேட்டிங் செய்ய பணிக்கலாம் இதுவே ஃபாலோ ஆன் விதி). விராட் கோலி ஏன் ஃபாலோ ஆன் தரவில்லை என்பதற்கான காரணங்களை காணலாம்.

முதல் காரணம்

முதல் காரணம்

மும்பை டெஸ்ட்டில் இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ளது. தற்போதே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதில் மூன்றாவது அல்லது 4வது நாள் ஆட்டம் எல்லாம் பேட்டிங் செய்வதே கடினமாகும். இதனால் கடைசியாக பேட்டிங் செய்வதை தவிர்க்க, கோலி ஃபாலோ ஆன் தராமல் மீண்டும் விளையாடினார்.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

ஏற்கனவே நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு 110 ஓவர்கள் வீசியுள்ளனர். குறிப்பாக அஜாஸ் பட்டேல் 47 புள்ளி 5 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் இந்திய அணியோ 28ஓவர் தான் வீசியது. இதனால், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வே இல்லாமல் உள்ள நிலையில், மீண்டும் பந்துவீசுங்கள் என்று கூறினால், அவர்களால் களத்தில் நிற்பதே கஷ்டமாகும்.

மூன்றாவது காரணம்

மூன்றாவது காரணம்

புஜாரா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் ஆகியோர் முதல் இன்னிங்சில் சோபிக்கவில்லை. இதனால் இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் அடித்து, தென்னாப்பிரிக்க தொடருக்கு மனது அளவில் தயாராக இருக்கவே மீண்டும் பேட்டிங் செய்ய இந்தியா தேர்ந்து எடுத்தது. இதுவே ஃபாலோ ஆன் கொடுத்து இருந்தால் இந்தியாவுக்கு மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பே இல்லாமல் போய் இருக்கும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Newzealand 2nd Test Day 2- Newzealand bowled out for 62. India takes Lead but Didn’t enforce follow on for NZ.
Story first published: Saturday, December 4, 2021, 17:57 [IST]
Other articles published on Dec 4, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X