For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்களை எல்லாம் வச்சுக்கிட்டு.. எல்லா முயற்சியும் தோல்வி.. கோலியை விடாமல் துரத்தும் பெரிய பிரச்சனை

சிட்னி: இந்திய அணியில் பல மாதங்களாக 5வது வீரராக இறங்க போகும் வீரர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. பல கட்ட முயற்சிக்கு பிறகும் இன்னும் முழுமையாக 5வது வீரர் யார் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.

கடந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பில் இருந்தே இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் யார் என்ற குழப்பம் நிலவி வருகிறது. முதலில் இந்திய அணியில் 5வது இடத்தில் கேதார் ஜாதவ், மனீஷ் பாண்டே போன்ற வீரர்கள் ஆடி வந்தனர்.

இவர்கள் இருவரும் பார்ம் அவுட் ஆன பின் 5வது இடத்தில் இறங்க பல வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். விஜய் சங்கர் போன்ற பவுலிங் ஆல் ரவுண்டர்கள் கூட 5வது இடத்தில் களமிறக்கப்பட்டனர்.

 எப்படி

எப்படி

ஆனால் விஜய் சங்கர் இந்த இடத்தில் சரியாக ஆடவில்லை. தற்போது இந்திய அணியில் ரோஹித், தவான் ஓப்பனிங் இறங்கினால் கோலி ஒன் டவுன் இறங்குவார். அதன்பின் கே.எல் ராகுல் 2 டவுன் இறங்குவார். இவர்கள் நான்கு பேருக்கு அடுத்து 5வதாக இறங்க போகும் வீரர் யார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. 6 மற்றும் 7வது இடத்தில் பாண்டியா, ஜடேஜா இறங்குவார்கள் .

 ஏன் சிக்கல்

ஏன் சிக்கல்

தற்போது இந்த இடத்தில் சஞ்சு சாம்சன், பண்ட், மணீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கியமான வீரர்கள் எல்லோரும் களமிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு விட்டனர். சஞ்சு சம்சானை நம்பி களமிறக்கினால் அவர் சொதப்பிவிட்டு செல்கிறார். பண்டும் தனக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் ஒரு முறை கூட அதை நிரூபிக்கவில்லை.

நிரூபிக்கவில்லை

நிரூபிக்கவில்லை

இன்னொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் கொஞ்சம் கூட நம்பிக்கை இன்றி ஆடி சொதப்பபி வருகிறார் . மனீஷ் பாண்டேவும் கூட அனுபவம் இருந்தாலும் இதுவரை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இப்படி மிடில் ஆர்டரில் இறங்கும் வீரர்கள் யாருமே பெரிய அளவில் இந்திய அணியில் நம்பிக்கை அளிக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.

மோசம்

மோசம்

இவர்களுக்கும் கோலி மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுத்து பார்த்துவிட்டார்.ஆனாலும் இவர்கள் யாரும் கோலியின் நம்பிக்கையை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இவர்களின் இந்த தொடர் செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவர்களில் யாரை நிரந்தரமாக இந்திய அணியில் எடுப்பது என்று தெரியாமல் கோலி புலம்ப தொடங்கி உள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர்கள் இல்லாமல் இன்னும் இரண்டு பேர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். ஒருவர் சூர்யகுமார் யாதவ் இன்னொருவர் இஷான் கிஷான். இவர்கள் இருவரும் மிடில் ஆர்டரில் நன்றாக ஆட கூடியவர்கள். ஆனாலும் இவர்களுக்கு மட்டும் ஏனோ கோலி வாய்ப்பு கொடுக்க மறுப்பு தெரிவித்தது வருகிறார்.

Story first published: Sunday, December 13, 2020, 14:16 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
Why Team India is still struggling to find its middle-order batsman in limited over matches?.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X