"முடியாது".. நடராஜனுக்கு கான்ட்ராக்ட் கொடுக்காத பிசிசிஐ.. நேற்று இரவு நடந்தது என்ன? இதுதான் பின்னணி!

சென்னை: தமிழக வீரர் நடராஜனுக்கு பிசிசிஐ கான்ட்ராக்ட் கொடுக்கப்படவில்லை. இந்திய அணியில் அறிமுகம் ஆகி நன்றாக இவர் ஆடிய நிலையில் கான்ட்ராக்ட் மறுக்கப்பட்டுள்ளது.

Natarajanக்கு Contract கொடுக்காத BCCI! A+ Gradeல் Kohli, Rohit, Bumrah | OneIndia Tamil

இந்திய அணியில் ஆடும் சேலத்தை சேர்ந்த வீரர் நடராஜன், தனது யார்க்கர்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். 2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இவர் மிகவும் சிறப்பாக ஆடினார்.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

இதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 2021 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து நடராஜன் சிறப்பாக ஆடி வருகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

நடராஜன் தொடர்ந்து பார்மில் இருந்து வரும் நிலையில், அவருக்கு பிசிசிஐ அமைப்பு கான்ட்ராக்ட் கொடுக்கவில்லை. இந்திய அணியில் ஆடும் முக்கிய வீரர்களுடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்யும். உங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படும் என்று பிசிசிஐ ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்.

வகை

வகை

ஏ, ஏ+, பி, சி என்று வெவ்வேறு வகையில் பிசிசிஐ ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்.ஒருநாள், டெஸ்ட், டி 20 மூன்றிலும் தொடர்ந்து ஆடும் வீரர்களுக்கு ஏ+ ஒப்பந்தம் வழங்கப்படும். பும்ரா, ரோஹித், கோலிக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 7+ பெறும் வீரர்கள் குறைந்த பட்சம் 7+ கோடி ரூபாயை வருட வருமானமாக பெறுவார்கள்.

நடராஜன்

நடராஜன்

ஆனால் நடராஜனுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. ஆனால் இதற்கு பின் எந்த விதமான புறக்கணிப்பும் இல்லை. இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.

விதி என்ன

விதி என்ன

அதுவும் இல்லை என்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இதனால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Why Natarajan snubbed from BCCI contract even after a good show?
Story first published: Friday, April 16, 2021, 8:48 [IST]
Other articles published on Apr 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X