For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன.. இங்க பாருங்க பிளானை

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மோதலில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

இவ்வாறு பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்ந்தெடுத்ததால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கலாம். பாகிஸ்தான் இவ்வாறு பந்து வீச்சை தேர்ந்தெடுக்க காரணம், மான்செஸ்டர், ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழைதான்.

Why Pakistan choose fielding against India match?

மழை காரணமாக மைதானம் ஈரமாக உள்ளது. பிட்சும் அப்படியே உள்ளது. இதனால் பந்து பிட்சில் பட்டதும் நன்கு ஸ்விங் ஆகும். இதேபோல, அடிக்கப்படும் பந்தும், மைதானத்தில் உருண்டு ஓடும்போது, ஈரப்பதம் காரணமாக மெதுவாகி, பவுண்டரிகள் செல்வது குறையும். ஆனால், இரண்டாவது பேட் செய்யும்போது இதுபோன்ற நிலை ஓரளவுக்கு மாறி, பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால்தான், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் திறமையானவர்கள். இந்த சூழ்நிலையையும் மாற்றிக் காட்டி, சூப்பர் துவக்கம் கொடுத்துள்ளனர். மெதுவாக ஆடினாலும் பரவாயில்லை, விக்கெட் போய்விடக் கூடாது என்பதுதான், இந்திய பேட்ஸ்மேன்கள் மனநிலையாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த சவாலையும் இந்திய அணி கடந்து சென்று வெற்றி பெறும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Sunday, June 16, 2019, 15:32 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
Why Pakistan choose fielding against India match, here is the reason.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X