இவரு 3 வருஷமா கிரிக்கெட்டே விளையாடல.. ஆனா கேப்டன்..! அந்த காரணம் சொன்ன வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்

போர்ட் ஆப் ஸ்பெயின்: அணியில் தனக்கான இடத்துக்காக ஹோல்டர் போட்டி போட வேண்டும் என்பதால், பொல்லார்டு கேப்டனாக்கப்பட்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வெஸ்ட் இண்டீசின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவே இல்லை.

அவரை அணி நிர்வாகம் எப்படி தேர்வு செய்தது என்ற கேள்வி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மத்தியில் எழுந்தது. ரசிகர்களும் இந்த விஷயத்தை பற்றி தீவிரமாக கருத்துகளை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

உசுருக்கு உத்தரவாதமில்ல..! செத்துட்டா..? மலிங்கா உள்ளிட்ட 10 வீரர்கள் கதறல்

அழைப்பு எதற்காக?

அழைப்பு எதற்காக?

அதனால், பொல்லார்டு ஒரு நாள் போட்டி தொடருக்கு ஏன் அழைக்கப்பட்டார்? கேப்டன் பொறுப்பு ஏன் வழங்கப்பட்டது என்பது குறித்து வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆதரவு

ஆதரவு

அதற்கான காரணத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் தெரிவித்துள்ளார். இவர் தான், பொல்லார்டுக்கு வலுவாக தனது ஆதரவை தெரிவித்தவர். அவர் கூறியிருப்பதாவது:

முக்கியமான சக்தி

முக்கியமான சக்தி

3 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடாதவர் பொல்லார்டு. ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கியமான சக்தி. அவர் தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடருவார்.

போட்டி மனப்பான்மை

போட்டி மனப்பான்மை

இப்போது ஒருநாள் அணிக்கு பொல்லார்டு கேப்டன் ஆகியிருப்பதால், அணியில் தனக்கான இடத்துக்காக ஹோல்டர் போட்டி போட வேண்டிய நிலை ஏற்படும். அது அவரை மென்மேலும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்க உதவி புரியும்.

சரியான நபர்

சரியான நபர்

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல பொல்லார்டு தான் சரியான நபர். அவரிடம் ஆட்டத்தின் மீதான அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் அதிகம் உள்ளது. அதன் காரணமாக தான் கேப்டனாக்கப்பட்டார் என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Why pollard being elected as captain, West Indies cricket board explains.
Story first published: Tuesday, September 10, 2019, 11:15 [IST]
Other articles published on Sep 10, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X