அத்தனை பேர் இருந்தும்.. நடராஜனை கூப்பிட்டு கோப்பையை கொடுத்த ரஹானே.. இதுதான் காரணம்.. செம்ம!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் ரஹானே கொடுத்தது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது..

இந்தியா ஆஸ்திரேலியா மோதிய மிக நீண்ட டெஸ்ட் தொடர் நேற்று முடிவிற்கு வந்தது. கிரிக்கெட் திருவிழா போல நடைபெற்ற இந்த தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

நீங்க உள்ளே போக முடியாது.. இந்திய வெற்றிக்கு பின் வேகமாக ஓடி வந்த ஷேன் வார்னே..பரபரப்பு நிமிடங்கள்!

கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஏன்

ஏன்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் ரஹானே கொடுத்தது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணிக்காக இந்த தொடரில் ஆடிய வீரர்களில் பலர் புதியவர்கள். நடராஜன், சிராஜ், சைனி, வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர் எல்லோருக்கும் இது அறிமுக தொடர்.

ஆனால்

ஆனால்

அதிலும் வாஷிங்க்டன் சுந்தர் முதல் தொடரிலேயே சிறப்பாக ஆடி மொத்தமாக 4 விக்கெட், 80+ ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் முதல் தொடரில் ஆடிய சிராஜ் கடைசி டெஸ்டில் 6 விக்கெட் எடுத்தார். இவர் தனது அப்பாவை இழந்த போதும் கூட இந்தியா திரும்பாமல் ஆஸ்திரேலியாவில் தங்கி இருந்தார்.

ஷரத்துல்

ஷரத்துல்

அதேபோல் ஷரத்துல் தாக்கூரும் ஆஸ்திரேலியாவில் முதல் தொடரில் ஆடி உள்ளார்.முதல் இன்னிங்சில் 67 ரன்கள். மொத்தமாக 3+4 என்று 7 விக்கெட்டுகள் எடுத்து கடைசி டெஸ்டில் அதிரடி காட்டினார். இன்னொரு பக்கம் பல புறக்கணிப்பிற்கு பின் மீண்டும் அணிக்குள் வந்த பண்ட் நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

பலர்

பலர்

இப்படி பலர் இருந்தும் குழந்தையை பார்க்காமல் ஆஸ்திரேலியாவில் தங்கிய நடராஜனிடம் ரஹானே கோப்பையை கொடுத்துள்ளார். இதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது.இவர் இந்திய வீரர்களோடு தன்மையாக பழகும் விதம். ஈகோ பார்க்காமல் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் விதம் ரஹானேவை கவர்ந்து இருக்கிறது.

ரஹானே

ரஹானே

எந்த ஈகோவும் இல்லை. கடுமையாக உழைக்கிறார். உழைப்பு மட்டுமே குறியாக இருக்கிறார் என்று ரஹானே இவரை பாராட்டி உள்ளார். அதோடு கடைசி இன்னிங்சில் இவர் விக்கெட் எடுக்கவில்லை.இதனால் அவர் துவண்டு போக கூடாது என்பதால் அவரை ஊக்குவிக்கும் விதமாக ரஹானே கோப்பையை கொடுத்துள்ளார்.

ரஹானே எப்படி

ரஹானே எப்படி

பொதுவாக ஒரு வீரர் ஒரு இன்னிங்சில் சொதப்பும் போதுதான் அவரை ரஹானே அதிகம் ஊக்குவிப்பார். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் சிராஜ் சொதப்பிய போதும் ரஹானே அவரை ஊக்குவித்து இந்திய அணியை பெவிலியனுக்கு வழி நடத்தி செல்லும்படி கூறினார். அதேபோல்தான் தற்போது நடராஜனையும் இவர் ஊக்குவித்துள்ளார் என்கிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Why Rahane gave the Border Gavaskar Trophy to Natarajan from Tamilnaduout of all the players?
Story first published: Wednesday, January 20, 2021, 10:19 [IST]
Other articles published on Jan 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X