For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்சியே வேண்டாம்.. ஆளை விடுங்க.. அவரை கைகாட்டி விட்டு.. விலகி ஓடிய சச்சின்.. காரணம் இதுதான்!

மும்பை : சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாக பல சாதனைகள் செய்தவர்.

Recommended Video

Why Sachin Tendulkar not able to be successful as a Indian Cricket captain?

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் அவர்தான். 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரரும் அவர்தான். அதிக ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரரும் அவர்தான்.

இத்தனை அரிய சாதனைகள் செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டனாக அத்தனை சிறப்பாக செயல்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனின் ஓவியம்... ரசிகரின் கைவண்ணம்மும்பை இந்தியன்ஸ் கேப்டனின் ஓவியம்... ரசிகரின் கைவண்ணம்

தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம்

தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம்

அதற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக கூறி உள்ளார் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் மதன் லால். சச்சின் தன் தனிப்பட்ட ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் தான் அவரால் அணியை சரியாக கவனிக்க முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.

இரண்டு முறை கேப்டன்

இரண்டு முறை கேப்டன்

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு இரண்டு முறை கேப்டனாக சிறிது காலம் பணியாற்றினார். ஆனால், இரண்டு முறையும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதன் பின் சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை.

ஒதுங்கிக் கொண்ட சச்சின்

ஒதுங்கிக் கொண்ட சச்சின்

மீண்டும் 2007இல் ஒரு வாய்ப்பு வந்த போதுகூட அவர் தோனியை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டார். அந்த அளவுக்கு கேப்டன்சிக்கும், அவருக்கும் ஒத்துப் போகவில்லை. கேப்டன்சி வேண்டாம் என ஒதுங்கும் அளவுக்கு என்ன நடந்தது? இது பற்றி 1996-97இல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் மதன் லால் பேசி உள்ளார்.

ஒப்புக் கொள்ள முடியாது

ஒப்புக் கொள்ள முடியாது

சச்சின் டெண்டுல்கர் சிறந்த கேப்டன் இல்லை என ஒரு விமர்சனம் உள்ளது. அதைப் பற்றி பேசிய மதன் லால், அவர் சிறந்த கேப்டன் இல்லை எனக் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்றார். மேலும், அவரால் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என விளக்கினார்.

மிகவும் சிரமப்பட்டார்

மிகவும் சிரமப்பட்டார்

"சச்சின் அவரது தனிப்பட்ட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தினார். அணியை கவனிக்க மிகவும் சிரமப்பட்டார். ஏனெனில், ஒரு கேப்டனாக நீங்கள் உங்கள் செயல்பாட்டை மட்டும் பார்க்க முடியாது. மற்ற பத்து வீரர்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை பெற வேண்டும்." என்றார் மதன் லால்.

கேப்டன்சி ரெக்கார்டு

கேப்டன்சி ரெக்கார்டு

சச்சின் 25 டெஸ்ட் போட்டிகளிலும், 73 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி உள்ளார். 25 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 9 தோல்விகள், 12 டிரா செய்துள்ளார். 73 ஒருநாள் போட்டிகளில் வெறும் 23 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் அரங்கில்..

ஐபிஎல் அரங்கில்..

சர்வதேச அரங்கில் சறுக்கினாலும், ஐபிஎல் அரங்கில் ஓரளவு சிறப்பான கேப்டன்சி ரெக்கார்டை வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் கோப்பை வெல்லாவிட்டாலும் 55 போட்டிகளில் 32 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் சச்சின்.

Story first published: Thursday, June 18, 2020, 12:50 [IST]
Other articles published on Jun 18, 2020
English summary
Why Sachin Tendulkar not able to be successful as a captain for Indian team? Former player and coach Madan Lal expalined.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X