For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் செம ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில், நேற்று டி20 கிரிக்கெட் போட்டியில் வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தண்டனையை வழங்கி வருகிறது.

இதன் காரணமாக தான் அவர் டி20 கிரிக்கெட்டில் நேற்று சரியாக விளையாடவில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் கடந்த ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து சுப்மன் கில் தொடர்ந்து பத்து போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டி என ஓய்வே இன்றி சுப்மன் கில் விளையாடுகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்

பேட்டிங் பாதிக்காதா

பேட்டிங் பாதிக்காதா

இந்த அனைத்து போட்டிகளும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதனால் சுப்மன் கில்லுக்கு ஓய்வே கிடைக்காமல் தொடர்ந்து விமானம் விட்டு விமானம் ,ஹோட்டல் விட்டு ஹோட்டல் என பறந்து கொண்டே இருக்கிறார். 23 வயதான வீரருக்கு ஏன் இவ்வளவு நெருக்கடியை இந்திய அணி நிர்வாகம் கொடுக்க வேண்டும். ஒரு வீரர் நன்றாக விளையாடுகிறார் என்றால் அவருக்கு ஓய்வே கொடுக்காமல் தொடர்ந்து போட்டியில் பயன்படுத்தினால் அவருடைய பேட்டிங் திறமை பாதிக்காதா?

 ஏன் ஒரே வீரர்

ஏன் ஒரே வீரர்

இல்லை இந்திய அணியில் தான் வேறு வீரர்களே விளையாட கிடைக்கவில்லையா? முச்சதம் விளாசி ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா? என பிரித்வி ஷா காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சுப்மன் கில், டி20 ,ஒருநாள், டெஸ்ட் என அனைத்திலும் வாய்ப்பு கொடுத்தால் மற்ற வீரர்களுக்கு எப்போது தான் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியில் வீரர்கள் கொட்டி கிடக்கிறார்கள். டி20க்கு ஒரு அணி, ஒரு நாள் போட்டிக்கு ஒரு அணி மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு அணி என மூன்று அணிகளை உருவாக்க வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆஸி தொடர்

ஆஸி தொடர்

இந்த நிலையில் சுப்மன் கில் போன்ற வீரருக்கு எதற்கு தொடர்ந்து அனைத்து வகை கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். அடுத்ததாக ஆஸ்திரேலியா தொடர் நடைபெற இருக்கிறது. இதில் சுப்மன் கில் நடுவரிசையில் கூட விளையாட பயன்படுத்தலாம். அப்படி இருக்க இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கி விட்டு அடுத்த தொடருக்கு தயாராகும்படி பிசிசிஐ கூறி இருக்கலாம். தற்போது தொடர்ந்து போட்டியில் விளையாடுவதால் அது நிச்சயம் சுப்மன் கில் பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஓய்வு வழங்கிவிடலாம்

ஓய்வு வழங்கிவிடலாம்

மனதளவிலும் உடலளவிலும் தொய்வு ஏற்படுத்தும் வகையில் பிசிசிஐ இப்படி செயல்படலாமா? வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு சுப்மன் கில்லுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு தண்டனையை அணி நிர்வாகம் கொடுக்கிறது. தேர்வு குழுவும் எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும் இல்லாமல் இப்படி செயல்படுவது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சுப்மன் கில்லுக்கு எஞ்சிய இரண்டு t20 போட்டியில் ஓய்வு வழங்கிவிடலாம்.

காயம் ஏற்படும் அபாயம்

காயம் ஏற்படும் அபாயம்

அவருக்கு பதிலாக பிரித்விஷா அல்லது ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்களை சேர்க்க வேண்டும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.அப்படி இல்லை என்றாலும் ஜித்தேஷ் சர்மாவை மூன்றாவது வீரராக களம் இறக்கி விட்டு ராகுல் திருப்பாதியை தொடக்க வீரராக பயன்படுத்தலாம். இப்படி பல வகையில் வீரர்கள் இருக்கும்போது சுப்மன் கில்லை தொந்தரவு செய்வது எதிர்காலத்தில் அவருக்கு காயத்தை ஏற்படுத்தக் கூடவும் வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Saturday, January 28, 2023, 13:00 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
why Shubman gill is not rested in newzealand t20 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X