For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் முற்றிய மோதல்..!! அணியிலிருந்து பொலார்டு நீக்கம்..!! ஒரு இரவில் என்ன நடந்தது?

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலிருந்து, மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பொலார்டு அதிரடியாக நீக்கப்பட்டார்.

பொலார்டுக்கு பதிலாக இளம் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.

இதற்கு பொலார்டுக்கு காலில் சூளுக்கு ஏற்பட்டதாக அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் நடந்த உண்மையே வேறு என்று கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி – பிளேயிங் லெவன் – பிட்ச் ரிப்போர்ட்இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி – பிளேயிங் லெவன் – பிட்ச் ரிப்போர்ட்

பொலார்ட் விமர்சனம்

பொலார்ட் விமர்சனம்

கடந்த மாதம் அயர்லாந்தக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது. இதில் 3 போட்டியில் பேட்டிங் செய்த பொலார்டு மொத்தமாகவே 4 ரன்கள் மட்டும் தான் அடித்துள்ளார். ஆனால், தோல்விக்கு இளம் வீரர்கள் தான் காரணம் என்று பொலார்டு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இளம் வீரர்கள் எதிர்ப்பு

இளம் வீரர்கள் எதிர்ப்பு

இதனால் ஆத்திரமடைந்த இளம் வீரர்கள் சிலர் பொலார்டின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, பொலார்டு அவர்களை வசைப்பாடியதாக தகவல் வெளியானது. இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஆனால் அணியில் பிரச்சினை இல்லை என்று கூறி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமாளித்தது.

கோல்டன் டக்

கோல்டன் டக்

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய திவுகள் அணி தோல்வியை தழுவியது. இதில் கேப்டனாக பொலார்டு செயல்பாடு மோசமாக இருந்தது. மேலும் பேட்டிங்கில் கோல்டன் டக் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில், இளம் வீரர்கள் சிலர், பொலார்டு நடவடிக்கை குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

Recommended Video

Top 5 Best All Rounders in IPL history | OneIndia Tamil
நடவடிக்கை

நடவடிக்கை

மேலும் கேப்டனாக பொலார்ட் செயல்படும் வரை அணி வெற்றி பெறாது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, பொலார்ட் தொடர்ந்து விளையாடுவதால், அவரை இன்றைய போட்டியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்தது. இதனால் பி.சி.சி.ஐ. பாணியில், பொலார்டுக்கு காயம் என்று கூறி, அவரை வெளியே உட்கார வைத்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்.

Story first published: Wednesday, February 9, 2022, 16:54 [IST]
Other articles published on Feb 9, 2022
English summary
WI Team in Turmoil as Kieron Pollard axed from the Playing xi vs Ind வெஸ்ட் இண்டீஸ் அணியில் முற்றிய மோதல்..!! அணியிலிருந்து பொலார்டு நீக்கம்..!! ஒரு இரவில் என்ன நடந்தது?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X