உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 Live: ஆப்கனை 150 ரன்களில் சாய்த்த இங். புள்ளி பட்டியலில் முதலிடம்

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது.

1
43667

2019 உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பத்து அணிகள் ரவுண்டு ராபின் முறையில் மோதும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த லீக் சுற்றின் 24வது போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வலுவான இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இரண்டு அணிகளும் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தோடு மோதி வருகிறது.

10:46 pm

மான்செஸ்டர்: 50வது ஓவர். ஆர்ச்சர் வீசினார். முதல் 2 பந்துகளில் ரன் இல்லை. 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் ரஷித் கான் 8 ரன்களில் அவுட். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கன் 247/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி. 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி.

10:39 pm

மான்செஸ்டர்: 49வது ஓவர் மார்க் வுட். முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் அழகான யார்க்கர். ஆனாலும் ஒரு ரன் கிடைத்தது. 3வது பந்தில் ரன் இல்லை.4வது பந்தில் பவுண்டரி. 5வது பந்தில் 2 ரன்கள். 6வது ரன் இல்லை.

10:36 pm

மான்செஸ்டர்: 47வது ஓவர். பந்தை வீசினார் மார்க் வுட். நஜிபுல்லா முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் போல்டு. 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார் அலிகில். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்திலும் ரன் வரவில்லை. 6வது பந்திலும் ரன் இல்லை.

10:25 pm

மான்செஸ்டர்: 46வது ஓவர் ஆர்ச்சர். முதல் பந்தில் ஒரு ரன். 2வது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் பளார் என்று ஒரு பவுண்டரி விளாசினார் ஷாகிடி. 5வது பந்தில் போல்டு.

10:14 pm

மான்செஸ்டர்: 44வது ஓவர். வோக்ஸ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ஷாகிடி ஒரு ரன். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் நஜிபுல்லா மிட் விக்கெட் திசையில் ஒரு அற்புதமான சிக்சர் அடித்தார்.

10:08 pm

மான்செஸ்டர்: 43வது ஓவர். மீண்டும் ஆதில் ரஷித். முதல் பந்தை எதிர்கொண்ட முகமது நபி ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் நபி அவுட். ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

10:05 pm

மான்செஸ்டர்: 42வது ஓவர். ஆப்கன் அவுட்டுக்கு பிறகு களத்துக்கு வந்தவர் முகமது நயிப். பவுலர் வோக்ஸ். முதல் பந்தில் ஷாகிடி ஒரு ரன். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் ரன் வரவில்லை. அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள்.

09:59 pm

மான்செஸ்டர்: 41வது ஓவர். ஆதில் ரஷிதின் இந்த ஓவரிலும் ஆப்கன் திணறல். 5வது பந்தில் அஸ்கர் ஆப்கன் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட். அவர் அடித்தது 44 ரன்கள்.

09:56 pm

மான்செஸ்டர்: 40வது ஓவரை வீசினார் வோக்ஸ். ரன்களை எடுப்பதில் ரொம்பவும் சிரமப்பட்டது ஆப்கன் அணி. மொத்தமாக 2 ரன்கள் தான் வந்தன.

09:52 pm

மான்செஸ்டர்: 39வது ஓவரை ஆதில் ரஷித் வீசினார். 6 ரன்கள் கிடைத்தன. 39 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் எடுத்துள்ளது ஆப்கன்.

09:51 pm

மான்செஸ்டர்: 38வது ஓவரை வீசினார் வோக்ஸ். முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் ஒரு ரன் எடுத்தார் 1 ரன். 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் ஒரு ரன். 5,6வது பந்தில் ரன் இல்லை.

09:42 pm

மான்செஸ்டர்: 36வது ஓவரை வீசினார் ஆர்ச்சர். முதல் 2 பந்துகளில் 3 ரன்கள். 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ஒரு அழகான பவுண்டரி அடித்தார் ஷாகிடி.

09:37 pm

மான்செஸ்டர்: 35வது ஓவர். ஆப்கனும், ஷாகிடியும் நிதானமாகவே ஆடி வருகின்றனர். கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் ஷாகிடி.

08:53 pm

மான்செஸ்டர்: 25வது ஓவர் ஆதில் ரஷித் வீசினார். முதல் பந்திலும், 3வது பந்திலும் ஒரு ரன் கிடைத்தது. புல் டாசாக வந்த 5வது பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்ட ரஹ்மத் ஷா அவுட். 6வது பந்தில் ரன் இல்லை. தாம் வீசிய முதல் ஓவரில் ஒரு விக்கெட் எடுத்திருக்கிறார் ஆதில் ரஷித்.

08:48 pm

மான்செஸ்டர்: 24வது ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் ஒரு ரன். அடுத்த 2 பந்துகளில் ரன்கள் இல்லை. கடைசி பந்தில்1 ரன்.

08:37 pm

மான்செஸ்டர்: 21வது ஓவரில் மொயின் அலி. முதல் பந்தில் ஒரு ரன். 2வது பந்தில் 1 ரன். 3வது பந்தில் பவுண்டரி. மொத்தம் 8 ரன்கள் வந்தன.

08:37 pm

மான்செஸ்டர்: 21வது ஓவரில் மொயின் அலி. முதல் பந்தில் ஒரு ரன். 2வது பந்தில் 1 ரன். 3வது பந்தில் பவுண்டரி. மொத்தம் 8 ரன்கள் வந்தன.

08:32 pm

மான்செஸ்டர்: 20வது ஓவரில் ஸ்டோக்ஸ். முதல் பந்தில் ஒரு ரன். 2, 3வது பந்தில் ரன் அடிக்க முடியாமல் திணறினார் ஷாகிடி. 4வது பந்தில் ஒரு ரன் அடித்தார். 5வது ஓவரில் ரன் இல்லை. 6வது பந்தில் ஒரு ரன்.

08:26 pm

மான்செஸ்டர்: 19வது ஓவரில் முதல் பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்தில் பவுண்டரி. இந்த ஓவரில் 5 ரன்கள் வந்தன.

08:24 pm

மான்செஸ்டர்: 18வது ஓவரில் ஸ்டோக்ஸ். மிக நேர்த்தியாக வீசினார். 3வது பந்தில் 1 ரன்னும், 4வது பந்தில் 2 ரன்களும் வந்தன. மற்ற பந்துகளில் ரன்கள் இல்லை.

08:17 pm

மான்செஸ்டர்: 17வது ஓவரில் ஆப்கன் அதிரடி. ஒரு சிக்சர் அடித்தார் ரஹ்மத் ஷா. அந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.

08:10 pm

மான்செஸ்டர்: 15வது ஓவரில் மொயின் அலி. முதல் 2 பந்துகளில் தலா 2 ரன்கள். அதே போல கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் கிடைத்தன.

08:10 pm

மான்செஸ்டர்: 13வது ஓவரை மொயின் அலி வீசினார். ஷாகிடி எதிர்கொண்டார். மொத்தம் 4 ரன்கள் வந்தன,

07:57 pm

மான்செஸ்டர்: 12வது ஓவர். மார்க்வுட் வீசினார். முதல் 3 பந்துகளில் ரன்கள் வரவில்லை. 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் குல்பதின் நயிப் அவுட்.

07:53 pm

மான்செஸ்டர்: 11வது ஓவரில் பந்துவீச்சில் மாற்றம். மொயின் அலி வந்தார். மொத்தம் 3 ரன்கள் தான் கொடுத்தார்.

07:49 pm

மான்செஸ்டர்: 10வது ஓவரை வீசினார் ஆர்ச்சர். 2வது பந்தில் 1 ரன் வந்தது. 6வது பந்தில் 3 ரன்கள் கிடைத்தது.

07:45 pm

மான்செஸ்டர்: 9வது ஓவர் வோக்ஸ் வந்தார். குல்பதின் 2 பவுண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தன.

07:39 pm

மான்செஸ்டர்: 8வது ஓவரில் ஆர்ச்சர். கடந்த ஓவரில் குல்பதின் பிரித்து மேய்ந்தார். ஆகையால் இந்த ஓவரை கவனமாக வீசினார் ஆர்ச்சர். ரன் எடுத்த ரஹ்மத் ஷா திணறினர்.

07:35 pm

ஓவரில் வோக்ஸ். முதல் பந்தில் 2 ரன்கள். அடுத்த பந்துகளில் ஒவ்வொரு ரன்களாக வந்தன. மொத்தம் 6 ரன்கள் வந்தன.

07:30 pm

மான்செஸ்டர்: 6வது ஓவரில் கொஞ்சம் அதிரடி காட்டியது ஆப்கன். ஆர்ச்சரின் முதல் 3 பந்துகளில் வெளுத்தார் குல்பதின் நயிப். முதல் பந்தில் பவுண்டரி. அடுத்த பந்தில் ஒரு அருமையான சிக்சர். மீண்டும் அடுத்த பந்தில் பவுண்டரி. 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் ரன் இல்லை.

07:28 pm

மான்செஸ்டர்: 5வது ஓவர் வோக்ஸ். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் ரஹ்மத் ஷா. 3வது பந்தில் ஸ்லிப்பில் கேட்சை கோட்டை விட்டார் ரூட். தப்பித்தார் ரஹ்மத் ஷா.

07:21 pm

மான்செஸ்டர்: 4வது ஓவரை வீசினார் ஆர்ச்சர். அவரது பந்துகளை தொடுவதற்கு திணறினர் ஆப்கன் வீரர்கள். இருப்பினும் 3 ரன்கள் வந்தது.

07:20 pm

மான்செஸ்டர்: 3வது ஓவரை வீசினார் வோக்ஸ். முதல் பந்தில் ஒரு ரன். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் ஒரு ரன். அடுத்த 3 பந்துகளில் ரன் இல்லை.

07:20 pm

மான்செஸ்டர்: 398 ரன்களை நோக்கி களம் இறங்கியது ஆப்கன். 2வது ஓவரில் ஜட்ரான் டக் அவுட். ஆரம்பத்திலே அதிரடி அவுட்.

07:20 pm

மான்செஸ்டர்: 398 ரன்களை நோக்கி களம் இறங்கியது ஆப்கன். 2வது ஓவரில் ஜட்ரான் டக் அவுட். ஆரம்பத்திலே அதிரடி அவுட்.

06:45 pm

ENG Vs AFG: ஆப்கனுக்கு எதிரான போட்டியில் 397/6 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

06:37 pm

மான்செஸ்டர்: 50வது ஓவர்.ஜட்ரானின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் போல்டு. 2வது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் பவுண்டரி. 4வது பந்து வைடானது. அதற்கு மாற்றான பந்தில் சிக்சர். 5வது பந்தில் சூப்பர் சிக்ஸ். 6வது பந்தில் ஒரு ரன்.

06:21 pm

மான்செஸ்டர்: 48வது ஓவர். மோர்கன் அவுட்டை தொடர்ந்து களத்துக்கு வந்தார் பட்லர். அதிரடியாக ஆட முயற்சித்தார். 4வது பந்தில் கேட்சானார்.

06:14 pm

மான்செஸ்டர்: 47வது ஓவர். குல்பதின் நயீப் பந்தில் முதல் 2 பந்துகளில் சிக்சர். 4வது பந்தை தூக்கி அடித்த ரூட் அவுட்.

06:14 pm

மான்செஸ்டர்: 46வது ஓவரை வீசினார் ஜட்ரான். முதல் பந்து வைடு. 2வது பந்தில் பவுண்டரி. 3வது பந்தில் சிக்சர். 4வது பந்தில் பவுண்டரி. மொத்தம் 17 ரன்கள் வந்தன.

06:14 pm

மான்செஸ்டர்: 45வது ஓவர் ரஷித் கான். முதல் பந்திலே சிக்ஸ்… அடித்தவர் ரூட். 4வது பந்தில் மற்றொரு சிக்ஸ். சிக்சர்கள் இல்லாத ஓவர் இல்லை என்று கூறலாம். 6வது பந்திலும் சிக்சர்.

06:14 pm

மான்செஸ்டர்: 44வது ஓவரில் வந்தார் குல்பதின் நயிப். இந்த ஓவரிலும் பவுண்டரி வந்தது. மொத்தம் 11 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.

05:57 pm

மான்செஸ்டர்: 43வது வீசினார் ரஷித் கான். 2வது பந்தில் 89 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்சர் அடித்தார் மோர்கன். 4வது பந்திலும் 79 மீட்டர் தூரத்துக்கு மற்றொரு சிக்ஸ். ஒரே ஓவரில் 3 சிக்சர்கள். தூள் கிளப்பி சதம் அடித்தார் மோர்கன்.

05:57 pm

மான்செஸ்டர்: 42வது ஓவரில் திடீரென ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார் மோர்கன். பந்து முன்னே விழ, கேட்ச் மிஸ்சானது. 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில், 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்திலும் ரன் இல்லை.

05:57 pm

மான்செஸ்டர்: 41வது ஓவரில் முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் தான். ஆனால் அதற்கு அடுத்த பந்தில் இறங்கி வந்து ஒரு சிக்சர் விளாசினார் மோர்கன். 3வது பந்தில் பேக்வுட் சென்று மீண்டும் ஒரு சிக்சர். மைதானமே உற்சாகமானது.

05:44 pm

மான்செஸ்டர்: 40வது ஓவரில் அதிரடி காட்டியது இங்கிலாந்து. முதல் பந்தில் மோர்கன் அடித்தார் ஒரு அற்புதமான சிக்ஸ். மறுபடியும் 3வது பந்தில் பவுண்டரி விளாசினார். 4வது பந்து வைடானது. மாற்றாக வீசிய பந்தில் ரன் இல்லை. கடைசி பந்தில் ஒரு ரன் வந்தது.

05:39 pm

மான்செஸ்டர்: 39வது ஓவரில் ஒரு அழகான சிக்ஸ் அடித்தார் மோர்கன். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் ஒரு ரன். அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது.

05:39 pm

மான்செஸ்டர்: 38வது ஓவரை வீசினார் முஜிபுர் ரஹ்மான். முதல் பந்தில் ஒரு ரன். இந்த ஓவரிலும் சற்று நிதானம் காட்டியது இங்கிலாந்து. அந்த ஓவரில் 4 ரன்கள் வந்தது.

05:39 pm

மான்செஸ்டர்: 37வது ஓவரில் நிதான ஆட்டம். ஒன்று, இரண்டு என்று நிதானமாக ரன்கள் வந்தன. ஆப்கன் வீரர்களின் பீல்டிங் மெதுவாக இருக்கிறது என் கூறலாம். 4வது பந்தில் பவுண்டரி அடித்தார் ரூட். 5வது பந்தையும் தூக்கி அடிக்க வந்தது 2 ரன்கள். அந்த ஓவரில் மொத்தம் 11 ரன்கள் வந்தன.

05:39 pm

மான்செஸ்டர்: 36வது ஓவரின் முதல் பந்தில் 200 ரன்களை எட்டியது இங்கிலாந்து. அந்த ஓவரில் அதிரடி காட்டினார் மோர்கன். மொத்தம் 2 சிக்சர்கள் உள்பட 18 ரன்கள் வந்தன.

05:23 pm

மான்செஸ்டர்:35வது ஓவரை வீசினார் ஜட்ரான். முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்திலும் அப்படியே. 3வது பந்து ரூட் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால், சிறிது தூரம் முன்பே விழுந்ததால் கேட்சாக மாறவில்லை. 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ரூட், மோர்கன் வேகமாக ஓடி 2 ரன் சேர்த்தனர். மற்றும் 6வது பந்தில் ரன் இல்லை.

05:20 pm

மான்செஸ்டர்: ரஷித் கான் பந்துவீசினார். ஒன்று, இரண்டு என்று 7 ரன்கள் அந்த ஓவரில் இங்கிலாந்துக்கு வந்தது.

05:12 pm

மான்செஸ்டர்: 33வது ஓவரில் அரைசதம் கடந்தார் ரூட். 2வது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார்.. வந்தது பவுண்டரி. அந்த ஓவரில் 6 ரன்கள் வந்தன.

05:10 pm

மான்செஸ்டர்: 32வது ஓவரில் 3வது பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் ஓர் அற்புத சிக்சரை அடித்து தள்ளினார் மோர்கன். மீண்டும் 4வது பந்தில் மற்றொரு அதிரயடியான சிக்சர். அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் அணிக்கு வந்தன.

05:10 pm

மான்செஸ்டர்: 31வது ஓவரை வீசினார் முகமது நபி. அந்த ஓவரில் 4 ரன்கள் தான் வந்தன. பெயர்ஸ்டோவ் அவுட்டை அடுத்து களத்துக்கு வந்தார் மோர்கன். ஸ்கோர் 167/2 ரன்கள்.

05:02 pm

மான்செஸ்டர்: 30வது ஓவரில் சதத்தை நோக்கி நெருங்கி கொண்டிருந்த பெயர்ஸ்டோவ் அவுட்டானார். அவர் எடுத்தது 90. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு திருப்புமுனை கிடைத்தது.

04:59 pm

மான்செஸ்டர்: 30வது ஓவரை வீசினார் குல்பதின். முதல் பந்தில் ஒரு ரன். அடுத்த 3 பந்துகளில் ரன் இல்லை. ஆனால் 4வது பந்தில் பெயர்ஸ்டோவ் காட் அண்ட் போல்டு.. பெவிலியன் திரும்பினார்.

04:58 pm

மான்செஸ்டர்: 29வது ஓவரில் முஜிபுர் ரஹ்மான் வந்தார். இங்கிலாந்து நிதான ஆட்டம். அந்த ஓவரின் முடிவில் ஸ்கோர் 163/1 ரன்கள்.

04:58 pm

மான்செஸ்டர்: 28வது ஓவரில் பவுலிங் மாற்றம். மீண்டும் வந்தார் குல்பதின் நயிப். முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. அடுத்த 2 பந்துகளில் ரன் இல்லை. 4, 5வது பந்துகளில் தலா ஒரு ரன். 6வது பந்தில் ரன் இல்லை.

04:58 pm

மான்செஸ்டர்: 27வது ஓவரை வீசினார் முகமது நபி. அந்த ஓவரின் 4வது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் பெயர்ஸ்டோவ். அந்த ஓவரில் இங்கிலாந்துக்கு 10 ரன்கள் கிடைத்தன.

04:42 pm

மான்செஸ்டர்: 25வது ஓவரை வீசினார் முகமது நபி. முதல் பந்தில் ரூட் ஒரு ரன். 2வது பந்தில் பெயர்ஸ்டோவ் ஒரு ரன். 5வது பந்தில் பவுண்டரி வந்தது. அந்த ஓவரில் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் வந்தன.

04:41 pm

மான்செஸ்டர்: 24வது ஓவரை வீசினார் ரஷித் கான். முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் அற்புதமாக பவுண்டரி. 3வது பந்தில் 2 ரன்கள். 4வது பந்தில் அழகான சிக்சரை விளாசினார் பெயர்ஸ்டோவ். 5 மற்றும் 6வது பந்தில் தலா ஒரு ரன் கிடைத்தது.

04:36 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 22 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 30 ரன்களும், பிரைஸ்டோ 54 ரன்களும் எடுத்துள்ளனர்

04:27 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 21 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 29 ரன்களும், பிரைஸ்டோ 52 ரன்களும் எடுத்துள்ளனர்

04:25 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 26 ரன்களும், பிரைஸ்டோ 52 ரன்களும் எடுத்துள்ளனர்

04:20 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 19 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 24 ரன்களும், பிரைஸ்டோ 46 ரன்களும் எடுத்துள்ளனர்

04:14 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 18 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 21 ரன்களும், பிரைஸ்டோ 43ரன்களும் எடுத்துள்ளனர்

04:11 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 17 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 20 ரன்களும், பிரைஸ்டோ 38 ரன்களும் எடுத்துள்ளனர்

04:06 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 11 ரன்களும், பிரைஸ்டோ 35 ரன்களும் எடுத்துள்ளனர்

03:58 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 8 ரன்களும், பிரைஸ்டோ 32 ரன்களும் எடுத்துள்ளனர்

03:51 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 7 ரன்களும், பிரைஸ்டோ 24 ரன்களும் எடுத்துள்ளனர்

03:42 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 1 விக்கெட்டிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 2 ரன்களும், பிரைஸ்டோ 17 ரன்களும் எடுத்துள்ளனர்

03:41 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 26 ரன்களுக்கு தவ்லாத் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்

03:38 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓவரில் 42 ரன்கள் எடுத்துள்ளது. ஜேம்ஸ் 24 ரன்களும், பிரைஸ்டோ 17 ரன்களும் எடுத்துள்ளனர்

03:27 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 6 ஓவரில் 30 ரன்கள் எடுத்துள்ளது. ஜேம்ஸ் 14 ரன்களும், பிரைஸ்டோ 16 ரன்களும் எடுத்துள்ளனர்

03:17 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 4 ஓவரில் 15 ரன்கள் எடுத்துள்ளது. ஜேம்ஸ் 9 ரன்களும், பிரைஸ்டோ 6 ரன்களும் எடுத்துள்ளனர்

03:17 pm

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஓவரில் 11 ரன்கள் எடுத்துள்ளது. ஜேம்ஸ் 9 ரன்களும், பிரைஸ்டோ 2 ரன்களும் எடுத்துள்ளனர்

10:53 pm

டாண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த வங்கதேச அணிக்கு ஷகிப் 124, லிட்டன் தாஸ் 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தனர்.

10:39 pm

டாண்டன் : 38 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் 118, லிட்டன் தாஸ் 72 ரன்கள் எடுத்துள்ளனர். 38வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார் லிட்டன் தாஸ். வங்கதேசம் வெற்றி பெற 12 ஓவர்களில் 28 ரன்களே தேவை.

10:22 pm

டாண்டன் : 34 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் 100, லிட்டன் தாஸ் 47 ரன்கள் எடுத்துள்ளனர். ஷகிப் தன் ஒன்பதாவது ஒருநாள் போட்டி சதம் கடந்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும்.

10:09 pm

டாண்டன் : 33 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் 95, லிட்டன் தாஸ் 42 ரன்கள் எடுத்துள்ளனர்.

09:54 pm

டாண்டன் : 28 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் 81, லிட்டன் தாஸ் 16 ரன்கள் எடுத்துள்ளனர். ஷகிப் தனி ஆளாக போட்டியை மாற்றி வருகிறார். அவர் அதிரடியால் வங்கதேசம் ஓவருக்கு 7 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ஆடி வருகிறது.

09:31 pm

டாண்டன் : 25 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் 60, லிட்டன் தாஸ் 12 ரன்கள் எடுத்துள்ளனர். வங்கதேசம் தொடர்ந்து ரன் ரேட்டை 6.5ஐ ஒட்டியே வைத்துள்ளது, வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்த்த முடியாமலும், ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமலும் தடுமாறி வருகிறது.

09:14 pm

டாண்டன் : 22 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. ஷகிப் 54, லிட்டன் தாஸ் 3 ரன்கள் எடுத்துள்ளனர். 3 விக்கெட்கள் இழந்த பின் வங்கதேசம் நிதானமாக ரன் சேர்த்து வருகிறது.

09:01 pm

டாண்டன் : முஷ்பிகுர் ரஹீம் 1 ரன் எடுத்த நிலையில், ஓஷேன் தாமஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் 3வது விக்கெட்டை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2 விக்கெட்கள் வீழ்த்தி போட்டியை தன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

08:49 pm

டாண்டன் : தமிம் இக்பால் 48 ரன்கள் எடுத்த நிலையில், எதிர்பாராவிதமாக ரன் அவுட் செய்யப்பட்டார். காட்ரேல் வீசிய பந்தை அவரிடமே அடித்த தமிம், தடுமாறினார். ஒரு வினாடி நேரத்தில் காட்ரேல் பந்தை எடுத்து வீசி, அவரை ரன் அவுட் செய்தார்.

08:45 pm

டாண்டன் : வெஸ்ட் இண்டீஸ் வைடுகள் மூலம் 9 ரன்கள் கொடுத்துள்ளது. சௌம்யா சர்க்கார் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடி வருகிறார். இதையடுத்து, அந்த அணியின் ரன் ரேட் 7-ஐ ஒட்டி இருக்கிறது. வங்கதேசம் வெற்றி பெற 33 ஓவர்களில் 203 ரன்கள் தேவை.

08:39 pm

டாண்டன் : 16 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 1 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது.

08:32 pm

டாண்டன் : 14 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 1 விக்கெட் இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது.

07:47 pm

டான்டன்: 5வது வெஸ்ட் இண்டீசுக்கு காஸ்ட்லியான ஓவராக மாறியது. மொத்தம் சிக்சர், பவுண்டரி என 18 ரன்கள் வந்தது. 5 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 34/0 ரன்கள் எடுத்துள்ளது.

07:45 pm

டான்டன்: 5வது வெஸ்ட் இண்டீசுக்கு காஸ்ட்லியான ஓவராக மாறியது. மொத்தம் சிக்சர், பவுண்டரி என 18 ரன்கள் வந்தது. 5 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 34/0 ரன்கள் எடுத்துள்ளது.

07:38 pm

டான்டன்: 4வது ஓவரை மிக நேர்த்தியாக வீசினார் ஹோல்டர். வங்கதேசம் தடுப்பாட்டம் ஆடியது. முடிவில் ஒரு ரன் தான் வந்தது. 4 ஓவர்கள் முடிவில் 16/0 ரன்கள் எடுத்துள்ளது.

07:38 pm

டான்டன்: வங்கதேசத்துக்கு 2வது ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. 3வது ஓவரை வீசினார் காட்ரெல். அந்த ஓவரில் ரன் எடுக்க வங்கதேசம் திணறியது. முடிவில், 15/0 ரன்கள் எடுத்துள்ளது.

07:28 pm

டான்டன்: வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 322 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது வங்கதேசம். தொடக்க வீரர்களாக சர்க்காரும், தமிம் இக்பாலும் வந்தனர். முதல் ஓவரை வீசினார் காட்ரெல். அந்த ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் வந்தன.

06:53 pm

டாண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்து இருந்தது. வங்கதேசத்திற்கு 322 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம். வங்கதேசம் தாக்குப் பிடித்து ஆடுமா?

06:53 pm

டாண்டன் : பிராவோ 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

06:42 pm

டாண்டன் : அருமையாக ஆடி வந்த ஹோப் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை 4 ரன்களில் தவறவிட்டார்.

06:25 pm

டாண்டன் : கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

06:00 pm

டாண்டன் : ஹெட்மயரை தொடர்ந்து வந்த ரஸ்ஸல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஜேசன் ஹோல்டர் களமிறங்கி உள்ளார்.

05:57 pm

டாண்டன் : 39.3வது ஓவரில் அதிரடியாக ஆடி வந்த ஹெட்மயர் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் களமிறங்கி உள்ளார்.

05:48 pm

டாண்டன் : ஹோப், ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ரன் குவித்து வருகிறது. 35வது ஓவரில் 19 ரன்கள், 36வது ஓவரில் 17 ரன்கள் எடுத்து வங்கதேச அணியை மிரட்டினர். 37 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.

05:27 pm

டாண்டன் : நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 33 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர், ஷாய் ஹோப்பேட்டிங் செய்து வருகின்றனர்.

05:05 pm

டாண்டன் : 29 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 12, ஷாய் ஹோப் 51 ரன்கள் எடுத்துள்ளனர்.

04:50 pm

டாண்டன் : லீவிஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். 24.3 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

04:32 pm

டாண்டன் : 19 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 30, லீவிஸ் 44 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர். ரன் ரேட் 4.31.

04:24 pm

டாண்டன் : 15 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 21, லீவிஸ் 35 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர். கடைசி 5 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்துள்ளனர். ரன் குவிக்கும் வேகம் அதிகரித்து வருகிறது. ரன் ரேட் 4.26.

03:58 pm

டாண்டன் : 10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 12, லீவிஸ் 17 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி படு நிதானமாக ஆடி வருவதால், ரன் ரேட் 3.20 ஆக உள்ளது.

03:31 pm

டாண்டன் : 6 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப், லீவிஸ் பேட்டிங் செய்து வருகின்றனர்.

03:23 pm

டாண்டன் : கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமல் சைபுதின் பந்தில் ஆட்டமிழந்தார். 4 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.

03:15 pm

டாண்டன் : 2 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. கிறிஸ் கெயில், லீவிஸ் பேட்டிங் செய்து வருகின்றனர்.

03:15 pm

டாண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யத் துவங்கியது. கிறிஸ் கெயில், லீவிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். மஷ்ராபே மொர்டாசா முதல் ஓவரை வீசி வருகிறார்.

02:47 pm

டாண்டன் : வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

02:46 pm

டாண்டன் : வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி இந்திய நேரப்படி 3 மணிக்கு துவங்க உள்ளது.

12:03 am

மான்செஸ்டர்: 40வது ஓவரை வீசினார் பாண்டியா. அந்த ஓவரில் 5 ரன்கள் பாகிஸ்தானுக்கு கிடைத்தன. 40 ஓவர்கள் முடிவில் பாக். 212/6 ரன்கள் எடுத்துள்ளது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்களில் வெற்றி. மைதானத்தில் உற்சாகம்.

11:56 pm

மான்செஸ்டர்: 39வது ஓவரை வீசினார் பும்ரா. அந்த ஓவரில் நோபாலும் வீசப்பட்ட மொத்தம் 12 ரன்கள் பாகிஸ்தானுக்கு கிடைத்தன. 39 ஓவர்கள் முடிவில் பாக். 208/6 ரன்கள் எடுத்துள்ளது.

11:52 pm

மான்செஸ்டர்: திடீர் மழையின் குறுக்கீடு... சிறிது நேர தடைக்கு பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 37வது ஓவரில் 10 ரன்கள் வந்தது. களத்தில் வாசிமும், ஷாபாத் கானும் உள்ளனர். ஸ்கோர் 182/6 ரன்கள்.

11:52 pm

மான்செஸ்டர் : பாகிஸ்தான் தோல்வியை நோக்கி சென்று கொண்ட இருக்கும் நிலையில், போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளது. போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

10:09 pm

மான்செஸ்டர்: 27வது வீச வந்தார் ஹர்திக் பாண்டியா. அந்த ஓவரின் 5வது பந்தில ஹபீஸ் அவுட். 6வது பந்தில் மாலிக் கோல்டன் டக். பாக். 129/5 ரன்கள் எடுத்து தடுமாற்றம்

10:00 pm

மான்செஸ்டர்: 26வது ஓவரின் 2வது பந்தில் திடீர் திருப்பம். அருமையாக ஆடிக் கொண்டிருந்த பக்கர் ஜமான் கேட்ச். குல்தீப் பந்தில் சஹல் கேட்ச் பிடித்தார்.

09:57 pm

மான்செஸ்டர்: 25வது ஓவரை வீசினார் சஹல். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு சிக்சரை வெளுத்தார் ஹபீஸ். ஸ்கோர் 25 ஓவர்கள் முடிவில் 126/2 ரன்கள் எடுத்துள்ளது.

09:53 pm

மான்செஸ்டர்: 24வது ஓவரை வீசினார் குல்தீப். கடைசி பந்தில் பாபர் ஆசம் கிளீன் போல்டு. வெல்டன் குல்தீப். பாக். 117/2 ரன்கள் எடுத்துள்ளது.

09:49 pm

மான்செஸ்டர்: 23வது ஓவரில் சஹலின் 2வது பந்தில் சிக்ஸ். அந்த ஓவர் முடிவில் பாக். 113/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:44 pm

மான்செஸ்டர்: 22வது ஓவர். குல்தீப் வீசினார். அந்த ஓவரில் 8 ரன்கள். 22 ஓவர்கள் முடிவில் பாக். 103/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:39 pm

மான்செஸ்டர்: 21வது ஓவரில் சஹல். முதல் பந்தில் சிக்ஸ். பக்கர் ஜமாம் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அந்த ஓவரில் 8 ரன்கள் வந்தன. 21 ஓவர்கள் முடிவில் பாக். 95/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:36 pm

மான்செஸ்டர்: 20வது ஓவரை அபாரமாக வீசினார் குல்தீப். அந்த ஓவரில் ஒரு ரன் தான் எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் பாக். 87/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:31 pm

மான்செஸ்டர்: 19வது ஓவரில் சஹல். முதல் பந்தில் ஒரு ரன். பாக். வீரர்கள் ஒவ்வொரு ரன்களாக சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஓவர் முடிவில் பாக். 86/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:27 pm

மான்செஸ்டர்: 18வது ஓவரில் முதல் பந்தில் ரன் இல்லை. ஆனால் அதற்கு அடுத்த 5 பந்துகளில் தலா ஒரு ரன். 18 ஓவர்கள் முடிவில் பாக். 84/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:26 pm

மான்செஸ்டர்: 17வது ஓவரில் பவுலிங் மாற்றம். சஹல் வந்தார் பந்துவீச. மொத்தம் 4 ரன்கள் தான் வந்தன. 17 ஓவர்கள் முடிவில் பாக். 79/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:22 pm

மான்செஸ்டர்: 16வது ஓவரை வீசினார் பாண்டியா. 2 பவுண்டரிகள். மொத்தம் 11 ரன்கள் வந்தன. 16 ஓவர்கள் முடிவில் பாக். 75/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:13 pm

மான்செஸ்டர்: 15வது ஓவரை வீசினார் குல்தீப். அந்த ஓவரில் 6 ரன்கள் வந்தன. 15 ஓவர்கள் முடிவில் பாக். 64/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:09 pm

மான்செஸ்டர்: 14வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வந்தார். முதல் பந்தில் ரன் அடிக்கவில்லை. 2வது பந்தில் 1 ரன், 3வது பந்தில் பவுண்டரி. அதற்கடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள். 6வது பந்தில் ரன் இல்லை. 14 ஓவர்கள் முடிவில் பாக். 58/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:08 pm

மான்செஸ்டர்: 13வது ஓவரில் பந்துவீச்சாளர் மாற்றம். களத்துக்கு வந்தார் குல்தீப். இந்த ஓவரில் 2 ரன் தான் கிடைத்தது. 13 ஓவர்கள் முடிவில் பாக். 51/1 ரன்கள் எடுத்துள்ளது.

09:03 pm

மான்செஸ்டர்: 12வது ஓவரை வீசினார் விஜய் சங்கர். அந்த ஓவரில் 8 ரன்கள் வந்தன. 12 ஓவர்கள் முடிவில் பாக். 49/1 ரன்கள் எடுத்துள்ளது.

08:59 pm

மான்செஸ்டர்: 11வது ஓவர் ஹர்திக் பாண்டியா. முதல் பந்தை எதிர்கொண்ட பாபர் ஆசம் ஒரு ரன். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் ரன் வரவில்லை. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்தில் ரன் கிடையாது. 11 ஓவர் முடிவில் பாக். 41/1 ரன்கள் எடுத்துள்ளது.

08:52 pm

மான்செஸ்டர்: 10வது ஓவரில் விஜய் சங்கர். முதல் பந்தில் ஒரு ரன் வந்தது. 2வது பந்தில் ரன் கிடையாது. 3வது பந்தில் ஒரு ரன். 4, 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்து வொய்டு. மாற்றாக வீசிய பந்தில் ஒரு ரன். 10 ஓவர் முடிவில் பாக். 38/1 ரன்கள் எடுத்துள்ளது

08:48 pm

மான்செஸ்டர்: 9வது ஓவரில் பவுலர் மாற்றம். களத்துக்கு வந்தார் ஹர்திக் பாண்டியா. 3வது பந்தில் பளிச்சென்று ஒரு பவுண்டரி விளாசினார் பாபர் ஆசம். 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்தில் ரன் இல்லை. 9 ஓவர் முடிவில் பாக். 34/1 ரன்கள் எடுத்துள்ளது

08:43 pm

மான்செஸ்டர்: 8வது ஓவர். பும்ரா வீசினார். இந்த ஓவரில் 4 ரன்களே பாகிஸ்தானுக்கு கிடைத்தது. 8 ஓவர் முடிவில் பாக். 29/1 ரன்கள் எடுத்துள்ளது.

08:38 pm

மான்செஸ்டர்: 7வது ஓவர். மீண்டும் விஜய் சங்கர். முதல் பந்தே பவுண்டரிக்கு பறந்தது. 2வது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ரன் இல்லை. 4வது பந்து லென்த் டெலிவரி. ரன் வரவில்லை. 5வது ஓவரிலும் நோ ரன். 6வது பந்திலும் ரன் நஹி. 7வது ஓவர் முடிவில் பாக். 25/1 ரன்கள் எடுத்துள்ளது.

08:33 pm

மான்செஸ்டர்: 6வது ஓவர் பும்ரா. மறுமுனையில் இளம் வீரர் பாபர் ஆசம். முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் ஒரு ரன். 3வது பந்தில் ரன் வரவில்லை. 4வதுபந்தில் ஒரு ரன் அடித்தார் பக்கார் ஜமான். 5வது பந்தில் ரன் கிடையாது. 6வது பந்து ஷார்ட் பிட்ச் பந்து... அழகான பவுண்டரி. 6வது ஓவர் முடிவில் பாக். 20/1 ரன்கள் எடுத்துள்ளது.

08:28 pm

மான்செஸ்டர்: 5வது ஓவரில் புவனேஸ்குமார் அற்புதம். கைகளை நன்றாக சுழற்றி பவுலிங். அருமையான லென்த்தில் பந்து வீச, இமாம் திணறுகிறார். 4 பந்துகளிலும் ரன் இல்லை. ஹார்ம்ஸ்டிரிங் காயம்.. வெளியேறினார் புவனேஸ்வர். பாக்கி 2 பந்துகளை வீசினார் விஜய் சங்கர். முதல் பந்தில் இமாம் எல்பிடபிள்யூ.

08:21 pm

மான்செஸ்டர்: 4வது ஓவரில் மீண்டும் பும்ரா. முதல் 3 பந்துகளில் நோ ரன். 4வது பந்தில் ஒரு ரன். 5வது பந்தில் ரன் வரவில்லை. 6வது பந்தில் ரன் இல்லை. 4 ஓவர்கள் முடிவில் பாக். 13/0 ரன்கள் எடுத்துள்ளது.

08:14 pm

மான்செஸ்டர்: 2வது ஓவரை வீச வந்தார் பூம், பூம் பும்ரா. அருமையான பவுலிங். முதல் 2 பந்துகளில் திணறினார் பக்கார் ஜமான், ஆனால் 3வது பந்து பவுண்டரிக்கு பறந்தது. அதற்கு 3 பந்துகளில் ரன் இல்லை. 2 ஓவர்கள் முடிவில் பாக். 6/0 ரன்கள் எடுத்துள்ளது.

08:08 pm

மான்செஸ்டர்: 337 ரன்களை நோக்கி களம் இறங்கியது பாக். முதல் ஓவரை வீசினார் புவனேஸ்குமார். களத்தில் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக்கும், பக்கார் ஜமானும் உள்ளனர். முதல் பந்திலும், 4வது பந்திலும் மட்டும் ரன்கள் வந்தன. மற்ற பந்துகளில் ரன்கள் இல்லை. முதல் ஓவர் முடிவில் பாக். 2/0 ரன்கள் எடுத்துள்ளது. பாக். 2/0 (1)

07:48 pm

மான்செஸ்டர் : இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்க்ஸ் முடிந்துள்ள நிலையில், மீண்டும் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால், பாகிஸ்தான் பேட்டிங் இன்னிங்க்ஸ் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

07:33 pm

மான்செஸ்டர் : இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம். கோலி ஆட்டமிழந்த நிலையில், கடைசி இரு ஓவர்களில் ஜாதவ் 9, விஜய் ஷங்கர் 15 ரன்கள் சேர்த்தனர்.

07:19 pm

மான்செஸ்டர் : விராட் கோலி 77 ரன்கள் எடுத்த நிலையில் முஹம்மது ஆமிர் பந்தில் ஆட்டமிழந்தார். இன்னும் 2 ஓவர்களே போட்டியில் மீதமுள்ளன. இந்தியா 330 ரன்களை கடக்குமா?

07:17 pm

மான்செஸ்டர் : ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி மீண்டும் துவங்கியது.

07:07 pm

மான்செஸ்டர் : போட்டி 7.10 மணிக்கு துவங்க உள்ளது. போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படாது. இதன் பின், மழை வரும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

06:59 pm

மான்செஸ்டர் : மழை நின்றாலும், இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நடந்தது போல, அவுட்பீல்டில் தண்ணீர் தேங்கி இருப்பதால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

06:48 pm

மான்செஸ்டர் : மழை நின்றது. போட்டி ஓவர்கள் குறைக்கப்படாமல் மீண்டும் துவங்க உள்ளது.

06:20 pm

மான்செஸ்டர் : 46.4 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை அதிகமாக பெய்தது. அதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி துவங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

06:14 pm

மான்செஸ்டர் : 46வது ஓவரின் முடிவில் மழைத்தூறல் துவங்கி உள்ளது. போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

06:11 pm

மான்செஸ்டர் : தோனி 1 ரன் எடுத்த நிலையில் ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

06:06 pm

மான்செஸ்டர் : பண்டியா 26 ரன்கள் எடுத்த நிலையில், ஆமிர் பந்தில் ஆட்டமிழந்தார். 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது.

06:06 pm

மான்செஸ்டர் : 43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 48, ஹர்திக் பண்டியா 22 ரன்கள் எடுத்துள்ளனர். பண்டியா 43வது ஓவரில் 1 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து தன் அதிரடியை துவக்கி உள்ளார்.

05:49 pm

மான்செஸ்டர் : 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 39, ஹர்திக் பண்டியா 5 ரன்கள் எடுத்துள்ளனர்.

05:41 pm

மான்செஸ்டர் : ரோஹித் ஆட்டமிழந்த நிலையில், ஹர்திக் பண்டியா நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி இருக்கிறார்.

05:40 pm

மான்செஸ்டர் : சதம் கடந்து அதிரடியாக ஆடி வந்த ரோஹித் சர்மா 140 ரன்கள் எடுத்து, ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டை இழந்தது இந்தியா.

05:33 pm

மான்செஸ்டர் : 37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 128, கோலி 29 ரன்கள் எடுத்துள்ளனர்.ரோஹித், கோலி கூட்டணி பெரிய அளவில் ரன் சேர்த்து வருகிறது.

05:21 pm

மான்செஸ்டர் : 34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 113, கோலி 23 ரன்கள் எடுத்துள்ளனர்.

05:12 pm

மான்செஸ்டர் : ஆமிர், வஹாப் ரியாஸ் இருவரும் பிட்ச்சை சேதப்படுத்தியதற்காக தலா இரண்டு முறை எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருவரும் இன்னும் ஒருமுறை எச்சரிக்கை பெற்றால், பந்து வீச தடை விதிக்கப்படும்.

05:09 pm

மான்செஸ்டர் : 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா தன் 24வது ஒருநாள் போட்டி சதம் கடந்தார்.

04:57 pm

மான்செஸ்டர் : 28 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சதத்தை நெருங்கி 94 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

04:44 pm

மான்செஸ்டர் : ராகுல் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா பேட்டிங் செய்து வருகின்றனர். 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது.

04:41 pm

மான்செஸ்டர் : அரைசதம் அடித்து அபாரமாக ஆடி வந்த ராகுல் 57 ரன்கள் எடுத்த நிலையில், வஹாப் ரியாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

04:34 pm

மான்செஸ்டர் : 22 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 69, ராகுல் 51 ரன்கள் எடுத்துள்ளனர்.

04:29 pm

மான்செஸ்டர் : ராகுல் அரைசதம் கடந்தார். சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார் ராகுல்.

04:23 pm

மான்செஸ்டர் : 20 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 63, ராகுல் 39 ரன்கள் எடுத்துள்ளனர்.

04:13 pm

மான்செஸ்டர் : 18 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய துவக்க வீரர்கள் முதன்முறையாக உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்களை கடந்துள்ளனர்.

04:13 pm

மான்செஸ்டர் : 16 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 58, ராகுல் 33 ரன்கள் எடுத்துள்ளனர்.

03:55 pm

மான்செஸ்டர் : ரோஹித் சர்மா அதிரடியாக 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். 2 சிக்ஸர், 6 ஃபோர் அடித்து அரைசதம் கடந்தார் ரோஹித். ராகுல் நிதான ஆட்டம் ஆடி வருகிறார். 12 ஓவர்களில் இந்தியா 79 ரன்கள் குவித்துள்ளது.

03:51 pm

மான்செஸ்டர் : 10 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 37, ராகுல் 14 ரன்கள் எடுத்துள்ளனர்.

03:39 pm

மான்செஸ்டர் : ராகுல் தடுப்பாட்டம் ஆடி வருகிறார். 24 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடியாக ரன் குவித்து வருகிறார்.

03:39 pm

மான்செஸ்டர் : ரோஹித் சர்மா அதிரடியாக ஆடத் துவங்கி உள்ளார். 8 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 31, ராகுல் 10 ரன்கள் எடுத்துள்ளனர்.

03:31 pm

மான்செஸ்டர் : 6 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 25, ராகுல் 7 ரன்கள் எடுத்துள்ளனர்.

03:31 pm

மான்செஸ்டர் : ஆமிருக்கு இரண்டாவது முறையாக பிட்ச்சை சேதப்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்தார் அம்பயர். இன்னும் ஒரு முறை எச்சரிக்கை கொடுத்தால், அதன் பின் ஆமிர் பந்துவீச முடியாது.

03:21 pm

மான்செஸ்டர் : 4 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 14, ராகுல் 2 ரன்கள் எடுத்துள்ளனர்.

03:15 pm

மான்செஸ்டர் : பிட்ச்சை சேதப்படுத்துவதாக முஹம்மது ஆமிருக்கு அம்பயர் எச்சரிக்கை விடுத்தார்.

03:10 pm

மான்செஸ்டர் : ஆமிர் வீசிய முதல் ஓவரை மெய்டனாக ஆடினார் ராகுல். 2 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.

03:06 pm

மான்செஸ்டர் : இந்தியா பேட்டிங் ஆடத் துவங்கியது. ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர்.

02:37 pm

மான்செஸ்டர் : இந்திய அணியில் காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதில் விஜய் ஷங்கர் களமிறங்குகிறார்.

02:35 pm

மான்செஸ்டர் : பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

02:26 pm

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டி இந்திய நேரப்படி 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது மழை இல்லாத காரணத்தால் போட்டி திட்டமிட்ட நேரத்திற்கு துவங்க உள்ளது.

12:33 am

கார்டிப் : தென்னாப்பிரிக்கா அணி 28.4 ஓவர்களில் வெற்றி இலக்கான 127 ரன்களை கடந்தது. 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

12:07 am

கார்டிப் : குலாப்தின் நயிப் பந்துவீச்சில் டி காக் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

11:58 pm

கார்டிப் : 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா 30, டி காக் 60 ரன்கள் எடுத்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் ஓரூர் விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

11:44 pm

கார்டிப் : 16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா 19, டி காக் 43 ரன்கள் எடுத்துள்ளனர். வெற்றியை நெருங்கி வருகிறது தென்னாப்பிரிக்கா.

11:14 pm

கார்டிப் : 8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது.

10:59 pm

கார்டிப் : 4 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. சிறிய இலக்கு என்றாலும், விக்கெட்கள் விழக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது தென்னாப்பிரிக்கா.

10:46 pm

கார்டிப் : தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்யத் துவங்கியது. டி காக், ஹஷிம் ஆம்லா துவக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர்.

10:46 pm

கார்டிப் : டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 127 ரன்கள் நிர்ணயம்.

10:17 pm

லண்டன்: 9வது விக்கெட்டையும் இழந்தது இலங்கை. 1 ரன்னில் மலிங்கா அவுட். வெற்றிக்கு இன்னும் 98 ரன்கள் தேவை. ஆனால் கையில் ஒரு விக்கெட் தான் இருக்கிறது. ஸ்கோர் 237/9 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை.

10:13 pm

கார்டிப் : ஹமித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

10:07 pm

லண்டன்:இலங்கையின் 8வது விக்கெட்டும் காலி. 8 ரன்கள் எடுத்த உடானா அவுட். ரிச்சர்ட்சன் பவுலிங் அழகான கேட்ச் பிடித்தார் வார்னர். 40 ஓவர்களில் இலங்கையின் ஸ்கோர் 236/8 ரன்கள்.

10:06 pm

கார்டிப் : இம்ரான் தாஹிர் வீசிய 34வது ஓவரில் 3 ஃபோர் அடித்து அதிரடியாக ஆடிய ரஷித் கான் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9 விக்கெட்களை இழந்தது ஆப்கானிஸ்தான்.

10:01 pm

கார்டிப் : 33 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த இளம் வீரர் அலிகில் கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

09:58 pm

லண்டன்: 39வது மீண்டும் ஸ்டார்கிற்கு விக்கெட். இந்த முறை மெண்டிஸ் அவுட். அவர் வீசிய கடைசி 7 பந்துகளில் 3 விக்கெட்டுகள். ஸ்கோர் 222/7 ரன்கள். தோல்வியை நோக்கி செல்கிறது இலங்கை.

09:57 pm

கார்டிப் : 32 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ரஷித் கான் 21, இக்ரம் அலிகில் 9 ரன்கள் எடுத்து மிக நிதானமாக ஆடி வருகின்றனர்.

09:55 pm

லண்டன்: 37வது ஓவரில் அடுத்தடுத்து இலங்கை வீரர்கள் அவுட். 7 ரன்கள் எடுத்த பெரேரா ஸ்டார்க் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்கோர் 217/6 ரன்கள்.

09:48 pm

லண்டன்: 37வது ஓவரில் மீண்டும் ஆஸி.க்கு விக்கெட். ஸ்ரீவர்தனா 3 ரன்களில் ஸ்டார்க் பந்தில் போல்டு. ஸ்கோர் 209/5 ரன்கள் எடுத்து இலங்கை தடுமாற்றம்.

09:45 pm

லண்டன்: அனுபவமிக்க மேத்யூஸ் 9 ரன்களில் அவுட். வொய்டு போக வேண்டிய பந்தை இழுத்து பிடித்து அடிக்க... கேரியிடம் கேட்சானது. மிக முக்கிய விக்கெட். ஆட்டம் தற்போது ஆஸி.யின் பக்கம் திரும்பியிருக்கிறது எனலாம். ஸ்கோர் 35.4 ஓவர்களில் 205/4 ரன்கள்.

09:40 pm

கார்டிப் : 27 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. ரஷித் கான் 10, இக்ரம் அலிகில் 3 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

09:33 pm

கார்டிப்: 26வது ஓவரை வீசினார் இம்ரான் தாஹிர். 2வது பந்தில் குல்பதின் நயிப் அவுட். அவர் எடுத்தது 5 ரன்கள். 100 ரன்களை எட்டுவதற்குள் ஆப்கானிஸ்தான் ஆல் அவுட்டாகிவிடும் என்று தெரிகிறது. ஸ்கோர் 78/7 ரன்கள்.

09:31 pm

கார்டிப்: 25வது ஓவரில் ஆப்கானிஸ்தான் 2 ரன்களே எடுத்தது. களத்தில் அலிகிலும், நயீபும் இருக்கின்றனர். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை எதிர்கொள்ள இருவரும் திணறுகின்றனர். ஸ்கோர் 77/6 ரன்கள்

09:27 pm

கார்டிப் : 22வது ஓவரில் நூர் அலி, அஸ்கார் ஆப்கனும், 23வது ஓவரில் முஹம்மது நபியும் ஆட்டமிழந்தனர். 23 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது ஆப்கானிஸ்தான்.

09:26 pm

லண்டன்: 33வது ஓவரில் இலங்கைக்கு அதிர்ச்சி... கை மேல கேட்ச். 97 ரன்களில் அவுட்டானார் கருணரத்னே. ஆஸி.க்கு இந்த விக்கெட் பெரிய திருப்புமுனை. ஸ்கோர் 186/3 ரன்கள்.

09:25 pm

கார்டிப் : மழைக்குப் பின் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 21வது ஓவரில் ஹஸ்மதுல்லா 8 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

09:20 pm

லண்டன்:மேக்ஸ்வெல் வீசிய 30வது ஓவரில் இலங்கை அணிக்கு ரன்கள் தான் கிடைத்தன.இலங்கையின் ஸ்கோர் 176/2 ரன்கள்.

09:20 pm

லண்டன்: 29 ஓவர்களில் இலங்கை 173/2 ரன்களை எடுத்திருக்கிறது. சதத்தை நெருங்கி கொண்டிருக்கிறாதர் கருணரத்னே.

09:03 pm

லண்டன் : திரிமன்னே 16 ரன்கள் எடுத்து பெஹ்ரண்டாப் பந்தில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டை இழந்தது இலங்கை.

08:18 pm

லண்டன்: ஒரு வழியாக ஆஸி.க்கு முதல் விக்கெட். ஸ்டார்க் பந்தை அக்ராஸ் தி லைன் என்ற முறையில் ஆட முயன்ற பெரேரா போல்டு. ஆஸி.க்கு திடீர் திருப்புமுனை. இலங்கையின் ஸ்கோர் 115/1 ரன்கள்.

08:10 pm

லண்டன்:கருணரத்னேவை தொடர்ந்து பெரேராவும் அரை சதம். என்ன செய்வது என்று தெரியாமல் ஆஸி. முழித்து வருகிறது. 14 ஓவர்களில் இலங்கை 107/0 ரன்களை எடுத்து வேகமாக முன்னேறி வருகிறது.

08:06 pm

லண்டன்: மிக எளிதாக விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்திருந்திருக்கிறது இலங்கை. பெரோராவும், கருணரத்னேவும் ஆஸி. பந்தை சாத்து, சாத்தென்னு சாத்தி வருகின்றனர். 13 ஓவர்களில் 103 ரன்களை குவித்திருக்கிறது இலங்கை.

08:02 pm

லண்டன்:ஆஸி.யின் பந்துவீச்சை திணறடித்து வருகிறது இலங்கை. தொடக்க வீரர்கள் பெரேரா, கருணரத்னே அபார ஆட்டம். அதில கருணரத்னே அரை சதம் அடித்துள்ளார். 12 ஓவர்கள் முடிவில் இலங்கை 98/0 ரன்கள் எடுத்து பேயாட்டம் ஆடி வருகிறது.

07:58 pm

கார்டிப் : 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது ஆப்கானிஸ்தான்.

07:52 pm

லண்டன் : 9வது ஓவரில் 18 ரன்கள் சேர்த்தது இலங்கை. 1 சிக்ஸ், 1 ஃபோர் மற்றும் 5 ரன்கள் ஓவர்த்ரோ மூலம் கிடைத்தது. இலங்கை அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்துள்ளது.

07:40 pm

லண்டன் :இலங்கை அதிரடியாக ரன் குவித்து வருகிறது. 7 ஓவர்கள் முடிவில் அந்த அணி 53 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ரன் ரேட் 7.57 ஆக உள்ளது. அந்த அணி 335 ரன்களை சேஸ் செய்து வருகிறது.

07:39 pm

கார்டிப் : ரஹ்மத் ஷா 22 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

07:28 pm

கார்டிப் : ஆப்கானிஸ்தான் படு நிதானமாக ரன் சேர்த்து வருகிறது. 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் 250+ ரன்கள் எடுத்தாலே, தென்னாப்பிரிக்க அணியை கட்டுப்படுத்தலாம் என ஆப்கானிஸ்தான் அணி திட்டமிட்டு இருக்கலாம்.

07:21 pm

லண்டன் : இலங்கை அணி சேஸிங் செய்யத் துவங்கியது. டிமுத் கருணாரத்னே, பெரேரா துவக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர்.

07:20 pm

லண்டன் : 2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

07:20 pm

கார்டிப் : 11 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. நூர் அலி சத்ரான் 20 ரன்களும், ரஹ்மத் ஷா 1 ரன்னும் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

07:08 pm

கார்டிப் : ஜஜாய் 22 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான்.

06:58 pm

கார்டிப் : தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் போட்டி மீண்டும் தொடங்கியது. 7 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது.

06:49 pm

கார்டிப் : மழையால் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் போட்டி, ஓவர்கள் குறைக்கப்படாமல் மீண்டும் துவங்க உள்ளது.

06:46 pm

கார்டிப் : தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் போட்டியில் குறுக்கிட்ட மழை நின்றது. மீண்டும் போட்டி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06:41 pm

லண்டன்:இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் 50 ஓவர்களில் ஆஸி. 334/7 ரன்கள் எடுத்துள்ளது. அற்புதமாக ஆடிய பின்ச் 153 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்களும், மேக்ஸ்வெல் 46 ரன்களும் எடுத்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட்களை இழந்ததால் 350 ரன்கள் எட்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை.

06:35 pm

லண்டன்: 48.3வது ஓவரில் மற்றொரு ரன் அவுட். இந்த முறையும் உடானா டேரக்ட் ஹிட். கம்மின்ஸ் டக் அவுட். ஒரே ஓவரில் ஆஸி. 2 ரன் அவுட்கள்... ஸ்கோர் 319/7 ரன்கள் எடுத்துள்ளது.

06:31 pm

லண்டன்: 48.1வது ஓவரில் ஆஸி.யின் அடுத்த விக்கெட் விழுந்தது. பந்துவீசிய உடானாவே, அலெக்ஸ் கேரியை ரன் அவுட்டாக்கினார். ஸ்கோர் 319/6 ரன்கள் எடுத்துள்ளது.

06:30 pm

கார்டிப் : 5.5 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டது. போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

06:23 pm

லண்டன்: 47வது ஓவரில் ஆஸி.யின் மற்றொரு விக்கெட் போனது. 3 ரன்கள் எடுத்திருந்த மார்ஷ், உடானா பந்தில் கேட்சானார். ஸ்கோர் ஆஸி. அணி 310/5 ரன்கள் எடுத்துள்ளது.

06:22 pm

கார்டிப் : 4 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது. ஜஜாய் 11, நூர் அலி 5 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

06:09 pm

கார்டிப் : முதல் ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 4 ரன்கள் எடுத்துள்ளது.

06:05 pm

லண்டன்: சிறப்பாக ஆடி 73 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித், மலிங்கா பந்தில் போல்டானார். 2 ஓவர்களில் 2 முக்கிய விக்கெட்டுகள் காலி. 43.3 ஓவர்களில் ஆஸி. 278/4 ரன்கள் எடுத்துள்ளது.

06:05 pm

லண்டன்: சிறப்பாக ஆடி 73 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித், மலிங்காக பந்தில் போல்டானார். 2 ஓவர்களில் 2 முக்கிய விக்கெட்டுகள் காலி. 43.3 ஓவர்களில் ஆஸி. 278/4 ரன்கள் எடுத்துள்ளது.

06:05 pm

லண்டன்:153 ரன்கள் எடுத்திருந்த பின்ச் உடானா பந்தில், கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 43 ஓவர்களில் ஆஸி. அணி 275/3 ரன்கள் எடுத்திருந்தது.

06:03 pm

கார்டிப் : ஆப்கானிஸ்தான் பேட்டிங் ஆடத் துவங்கியது. ஹஸ்ரதுல்லா ஜஜாய், நூர் அலி சத்ரான் துவக்க வீரர்களாக களமிறங்கி உள்ளனர். முதல் ஓவரா தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா வீசினார்.

05:42 pm

கார்டிப் : தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

05:40 pm

கார்டிப் : தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி இன்று மாலை 6 மணிக்கு துவங்க உள்ளது.

05:40 pm

லண்டன்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித்.. இப்போது அரைசதம். 46 பந்துகளில் அதை எட்டியிருக்கிறார். பின்சுக்கு உறுதுணையாக இருந்து இறுதி ஓவர்களில் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். 39 ஓவர்கள் முடிவில் ஆஸி. 222/2 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் தான் இருக்கிறது.

05:14 pm

லண்டன்: 33வது ஓவரில் ஆஸி. ரசிகர்கள் குஷியானார்கள். சிறப்பாக ஆடிய பின்ச், உடானா பந்தில் ஒரு அட்டகாச சிக்ஸ் அடித்து சதத்தை எட்டினார். 33 ஓவர் முடிவில் ஆஸி. 185/2 ரன்களை எடுத்திருக்கிறது.

05:14 pm

லண்டன்: இலங்கையின் பந்துகளை ரொம்ப அழகாக எதிர்கொண்டு ஆடி வருகின்றனர் பின்ச்சும், ஸ்மித்தும். தொடக்க வீரர் பின்ச் சதத்தை நெருங்குகிறார். அவருக்கு சப்போர்ட்டாக ஸ்மித்தும் அருமையாக ஆடி வருகிறா. கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஆஸி. 51 ரன்களை எடுத்திருக்கிறது. 32 ஓவர்களில் 176/2 ரன்களை எடுத்துள்ளது.

05:14 pm

லண்டன்: 33வது ஓவரில் ஆஸி. ரசிகர்கள் குஷியானார்கள். சிறப்பாக ஆடிய பின்ச், உடானா பந்தில் ஒரு அட்டகாச சிக்ஸ் அடித்து சதத்தை எட்டினார். 33 ஓவர் முடிவில் ஆஸி. 185/2 ரன்களை எடுத்திருக்கிறது.

05:11 pm

லண்டன்:இலங்கையின் பந்துகளை ரொம்ப அழகாக எதிர்கொண்டு ஆடி வருகின்றனர் பின்ச்சும், ஸ்மித்தும். தொடக்க வீரர் பின்ச் சதத்தை நெருங்குகிறார். அவருக்கு சப்போர்ட்டாக ஸ்மித்தும் அருமையாக ஆடி வருகிறா. கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஆஸி. 51 ரன்களை எடுத்திருக்கிறது. 32 ஓவர்களில் 176/2 ரன்களை எடுத்துள்ளது.

04:35 pm

லண்டன்:ரொம்ப... ரொம்ப நிதான......மாக ஆடிய கவாஜா அவுட். டி சில்வா வீசிய 23வது ஓவரில் 2வது விக்கெட்டை இழந்தது ஆஸி. 10 ரன்கள் எடுத்த கவாஜா, டி சில்வாவின் பந்தை டீப் மிட் விக்கெட் பக்கம் தூக்கி அடித்தார். கேட்ச் பிடித்தார் உடானா. 23 ஓவர்களில் ஆஸி. 100/2 ரன்கள் எடுத்திருக்கிறது

04:27 pm

லண்டன்:வார்னருக்கு பின் களத்துக்கு வந்த கவாஜா,பின்ச்சுடன் கை கோர்த்து ஆடுகிறார். ரொம்ப நிதானம். மறுபுறம் அரைசதம் கடந்திருக்கிறார் பின்ச். முதல் விக்கெட்டை போன்றே 2வது விக்கெட்டிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது ஆஸி. 20 ஓவர்களில் ஆஸி. 93/1 ரன்கள் எடுத்திருக்கிறது.

04:14 pm

லண்டன்: திணறி, திணறி ஆடிய ஆஸி.அணியில் ஆட்டமிழந்தார் வார்னர். அவர் எடுத்தது 26 ரன்கள் தான். டிசில்வா பந்தில் போல்டு. 17வது ஓவரில் இலங்கைக்கு ஒரு திருப்பம் கிடைத்திருக்கிறது. 16.4 ஓவர்களில் ஆஸி. 80/1 இழந்துள்ளது.

04:10 pm

லண்டன்: 15 ஓவர்களில் ஆஸி. விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்துள்ளது. இந்த உலக கோப்பையில் இல்லாதவாறு, வார்னர் மிகுந்த கட்டை போடுகிறார். 25 ரன்கள் அதுவும் 45 பந்துகளில்... ரசிகர்களே குழம்பித் தான் போயிருக்கின்றனர். ஆனால், பின்ச் தொடர்ந்து அரைசதத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.

03:52 pm

லண்டன்: இலங்கைக்கு எதிராக அருமையான தொடக்கத்தை அமைத்து இருக்கிறது ஆஸி. பின்ச், வார்னர் ஜோடி அபாரமான, நிதானமான ஆட்டம். 9.3 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருக்கிறது இந்த முதல் விக்கெட் ஜோடி. 10 ஓவர்கள் முடிவில் ஆஸி. அணி 53/0 ரன்கள் எடுத்துள்ளது.

03:27 pm

லண்டன்: முதல் 2 ஓவர்களில் ரன்கள் வந்த அளவுக்கு அடுத்த 3 ஓவர்களில் ஆஸி. ரன் எடுக்கவில்லை. 5 ஓவர்கள் முடிவில் ஆஸி. 20/0 ரன்கள் எடுத்துள்ளது. பின்ச்சும், வார்னரும் களத்தில் இருக்கின்றனர்.

03:11 pm

லண்டன்:ஆஸி.க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றிருக்கிறது இலங்கை. இதையடுத்து, முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பவுலிங்கில் களம் இறங்கி இருக்கிறது இலங்கை. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர் பின்ச் மற்றும் வார்னர். முதல் ஓவரை வீசினார் மலிங்கா. அதில் 4 ரன்கள் எடுத்தது ஆஸி. 2வது ஓவரில் 2 அசத்தல் பவுண்டரிகள். 2 ஓவர்கள் முடிவில் ஆஸி. 12/0 ரன்கள் எடுத்துள்ளது.

09:53 pm

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து 213 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை 33.1 ஓவர்களில் எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிக சராசரியாக செயல்பட்டு, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

09:45 pm

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

09:38 pm

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 93 பந்துகளில் சதம் கடந்தார். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 9 ரன்களே தேவை.

09:31 pm

சவுதாம்ப்டன் : வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ் வோக்ஸ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டை இழந்துள்ளது இங்கிலாந்து.

09:22 pm

சவுதாம்ப்டன் : 30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 92, கிறிஸ் வோக்ஸ் 40 ரன்கள் எடுத்துள்ளனர்.

09:07 pm

சவுதாம்ப்டன் : 27 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 81, கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் எடுத்துள்ளனர்.

08:53 pm

சவுதாம்ப்டன் : 23 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 74, கிறிஸ் வோக்ஸ் 20 ரன்கள் எடுத்துள்ளனர்.

08:30 pm

சவுதாம்ப்டன் : அரைசதம் கடந்தார் ஜோ ரூட். 18 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

08:21 pm

சவுதாம்ப்டன் : 16 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 43, கிறிஸ் வோக்ஸ் 6 ரன்கள் எடுத்துள்ளனர்.

08:11 pm

சவுதாம்ப்டன் : பேரிஸ்டோ 45 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

08:07 pm

சவுதாம்ப்டன் : 14 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 42, பேரிஸ்டோ 39 ரன்கள் எடுத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில், அந்த அணியின் கைகளில் இருந்து போட்டி நழுவி உள்ளது.

07:51 pm

சவுதாம்ப்டன் : 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 36, பேரிஸ்டோ 22 ரன்கள் எடுத்துள்ளனர்.

07:14 pm

சவுதாம்ப்டன் : 4 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

07:07 pm

சவுதாம்ப்டன் : 2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.

07:01 pm

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் காயமடைந்து இருக்கும் நிலையில், அவருக்கு பதில் ஜோ ரூட் துவக்க வீரராக களமிறங்கினார். இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனும் காயடைந்துள்ளார்.

06:48 pm

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் பீல்டிங் செய்த போது, முதல் இன்னிங்க்ஸின் கடைசி 28 நிமிடங்கள் இருக்கும் போது மைதானத்தை விட்டு வெளியேறி இருந்தார்.

06:33 pm

சவுதாம்ப்டன் : இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர், மார்க் வுட் பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டனர். இருவரும் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஜோ ரூட் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக செயல்பட்டு முக்கிய கட்டத்தில் 2 விக்கெட்களை எடுத்தார்.

06:27 pm

சவுதாம்ப்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்து தன் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

06:19 pm

சவுதாம்ப்டன் : பிராத்வைட் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

06:09 pm

சவுதாம்ப்டன் : 41 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 9 ஓவர்கள் மீதமிருந்தாலும் பெரிய இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது.

06:01 pm

சவுதாம்ப்டன் : காட்ரேல் வந்தவுடன் ரன் ஏதும் அடிக்காமல் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

06:01 pm

சவுதாம்ப்டன் : அரைசதம் அடித்து ஆடி வந்த நிக்கோலஸ் பூரன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

05:52 pm

சவுதாம்ப்டன் : 38 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 57, பிராத்வைட் 2 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.

05:43 pm

சவுதாம்ப்டன் : ரஸ்ஸல் 21 ரன்கள் எடுத்து மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ்.

05:43 pm

சவுதாம்ப்டன் : 36 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.

05:24 pm

சவுதாம்ப்டன் : மீண்டும் ஜோ ரூட் அசத்தினார். இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோ ரூட் வீசிய பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 5 விக்கெட்களை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.

05:19 pm

சவுதாம்ப்டன் : ஜோ ரூட் சுழலில் சிக்கிய ஹெட்மையர் 39 ரன்களில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

05:07 pm

சவுதாம்ப்டன் : 27 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர் 36, நிக்கோலஸ் பூரன் 42 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் கைகளில் இருந்து போட்டி வெஸ்ட் இண்டீஸ் பக்கம் வந்துள்ளது.

04:50 pm

சவுதாம்ப்டன் : 23 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர் 22, நிக்கோலஸ் பூரன் 23 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

04:38 pm

சவுதாம்ப்டன் : 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர் 11, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

04:23 pm

சவுதாம்ப்டன் : 16 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மயர் 3, நிக்கோலஸ் பூரன் 4 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

04:07 pm

சவுதாம்ப்டன் : ஷாய் ஹோப் 11 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட்களை இழந்துள்ளது.

04:03 pm

சவுதாம்ப்டன் : கிறிஸ் கெயில் 36 ரன்கள் எடுத்த நிலையில் லியாம் பிளங்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

03:46 pm

சவுதாம்ப்டன் : 10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. ஹோப் 4, கெயில் 33 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

03:39 pm

சவுதாம்ப்டன் : 7 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. ஹோப் 1, கெயில் 16 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

03:37 pm

சவுதாம்ப்டன் : 7 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. ஹோப் 1, கெயில் 16 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர்.

03:24 pm

சவுதாம்ப்டன் : 5 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துள்ளது.கிறிஸ் வோக்ஸ் 3 ஓவர்கள் வீசி 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.

03:21 pm

சவுதாம்ப்டன் : லீவிஸ் 2 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் முதல் விக்கெட்டை இழந்தது.

03:20 pm

சவுதாம்ப்டன் : 2 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.

03:07 pm

சவுதாம்ப்டன் : முதல் ஓவரை மெய்டனாக வீசினார் கிறிஸ் வோக்ஸ். கிறிஸ் கெயில் முதல் ஓவரின் ஆறு பந்துகளையும் சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை.

03:04 pm