For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வீரர் அதிரடி.. 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு சோகம்

கிங்ஸ்டன்: 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்த அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுடன் டி20 தொடரை இழந்த 3 நாட்களிலேயே அடுத்த தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கிவிட்டது.

இந்தப் போட்டியின் மூலம் 9 மாதத்திற்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் விளையாட வில்லியம்சன் களமிறங்கினார்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

சிஎஸ்கே வீரர் அதிரடி

சிஎஸ்கே வீரர் அதிரடி

கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 16 ரன்கள் எடுக்க, மறுமுனையில் சிஎஸ்கே வீரர் டிவோன் கான்வே 29 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. இருவரும் ஒடியன் ஸ்மித் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வில்லியம்சன் சரவெடி

வில்லியம்சன் சரவெடி

இதனையடுத்து 9 மாதத்திற்கு பிறகு டி20 சர்வதேச போட்டியில் களமிறங்கிய வில்லியம்சன் தொடக்கத்தில் பொறுமையாக விளையாட அவர் எதிர்கொண்ட கடைசி 18 பந்தில் 33 ரன்கள் விளாசினார். மொத்தமாக 33 பந்துகளில் 47 ரன்கள் விளாச, 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விரட்டினார். இறுதியில் நிஷம் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

திணறல்

திணறல்

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மெயர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, புருக்ஸ் நிதானமாக விளையாடி 42 ரன்கள் சேர்த்தார். நிக்கோலஸ் பூரான் 15 ரன்களிலும், டிவோன் தாமஸ், ஷிம்ரன் ஹேட்மயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Recommended Video

Dhoni கொடுத்த Confidence! Deepak Chahar-ன் Motivational Speech | Cricket
தோல்வி

தோல்வி

இறுதியில், வழக்கம் போல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேய் அடி அடிக்க தொடங்கியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. ரோமியோ ஷிப்பேர்ட் 16 பந்துகளில் 31 ரன்களும், ஓடியன் ஸ்மித் 12 பந்துகளில் 27 ரன்களும் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Thursday, August 11, 2022, 11:14 [IST]
Other articles published on Aug 11, 2022
English summary
WI vs NZ 1st t20 – Kane Williamson returns after 9 months in limited over game சரவெடி பேட்டிங்! 9 மாதத்திற்கு பிறகு டி20 விளையாடிய வில்லியம்சன்.. வெஸ்ட் இண்டீஸ்க்கு தொடரும் சோகம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X